Published:Updated:

அடுத்த தலைமுறை துப்ப மாட்டார்கள்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

அடுத்த தலைமுறை துப்ப மாட்டார்கள்! - ஹாய் மதன்-கேள்வி பதில்


ஹாய் மதன் கேள்வி - பதில்
அடுத்த தலைமுறை துப்ப மாட்டார்கள்! - ஹாய் மதன்-கேள்வி பதில்
அடுத்த தலைமுறை துப்ப மாட்டார்கள்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அடுத்த தலைமுறை துப்ப மாட்டார்கள்! - ஹாய் மதன்-கேள்வி பதில்
அடுத்த தலைமுறை துப்ப மாட்டார்கள்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

அ.குணசேகரன், புவனகிரி.

ஆன்மிகவாதிகள், அரசியல்வாதிகளுக்கு உள்ள ஒற்றுமை என்ன?

வாக்குறுதிதான்!

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

நேரத்தைத் திட்டமிடும் முறையை எங்களுக்கு சொல்லித் தர உமக்கு மனசு வரவில்லையே, இது நியாயமா?

அதற்கான தகுதி எனக்குத் துளிக்கூடக் கிடையாது என்பதுதான் காரணம். பல இரவுகளில் 'நேரத்தைத் திட்டமிட முடியவில்லையே' என்று கன்னத்தில் கைவைத்துக்கொண்டு, சோகமாக யோசித்துக்கொண்டு, மணிக்கணக்காக உட்கார்ந்துகொண்டு இருப்பவன் நான்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

அடுத்த தலைமுறை துப்ப மாட்டார்கள்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

செல்போனில் மணிக்கணக்கில் பேசுவதைவிட, கடிதத்தில் வந்த நான்கு வரிகள் இதமாகத் தெரிகின்றனவே?

'எடிட்டிங்'தான் காரணம்! கடிதத்தில் நாம் நாலு வரியில் எழுதுகிற விஷயத்தைத்தான் 'நாலாயிரம் வரிகளாக' போனில் பேசுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவும்! (இந்த பதில் காதல் ஜோடிகளுக்கு மட்டும் 'அப்ளை' ஆகாது!)

எஸ்.சுரேந்திரன், செகந்திராபாத்-3.

மனிதனுக்கு ஏன் எச்சில்?

அரசு, புதுச்சேரி-1.

பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் இந்தியாவில்தான் அதிகம் உள்ளது. இம்மாதிரியான பழக்கம் வெளிநாட்டில் இல்லையே, இதற்கு ஏதாவது குறிப்பிடத் தகுந்த காரணம் உள்ளதா?

நான் எதிர்பாராத கேள்விகள்தான்! ஒரு மனிதனின் வாயில், அவன் வாழ்நாளில் மொத்தம் 30 ஆயிரம் லிட்டர் எச்சில் உற்பத்தி ஆகிறது. உணவுக்கு குழைவைச் சேர்த்து, அதைச் சுலபமாக வயிற்றுக்குள் அனுப்புவது எச்சில்தான். அது இல்லையேல், உங்களால் சரளமாகப் பேச முடியாமல், வாய் ஒட்டிக்கொள்ளும். வாயில்தான் ஜீரணம் (Digestion) துவங்குகிறது. அதைச் செயல்படுத்தும் ptyalin என்கிற 'என்ஸைம்' எச்சிலில்தான் இருக்கிறது. எச்சிலில் உள்ள தற்காப்பு புரோட்டீன்கள்தான் வாயில் ரணங்கள் வராமல் தடுத்துக் காப்பாற்றுகிறது. முத்தங்களை மென்மையாக்குவது எச்சில்தான்!

அடுத்த தலைமுறை துப்ப மாட்டார்கள்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

இருப்பினும், வாய்க்குள் இருக்கும் வரையில்தான் எச்சிலுக்கு இவ்வளவு மதிப்பு. பிரபல மனோதத்துவ ஆய்வாளர் அந்தோணி ஸ்ட்டோர் இதைக் கச்சிதமாக (தர்மசங்கடமாக!) விளக்குகிறார். 'வாய்க்குள் இருக்கும் உங்கள் எச்சிலை விழுங்குங்கள். இதை எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்வீர்கள். சரி, உங்கள் எச்சிலையே டம்ளர் ஒன்றில் துப்புங்கள். பிறகு, அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தண்ணீர், சர்க்கரை எல்லாம் சேர்த்து... இப்போது அதை ஒரே மடக்கில் குடிப்பீர்களா? மாட்டீர்கள்! வாயில் இருந்து வெளியே வந்த மறு விநாடி எச்சில் தன் குடியுரிமையை (Renounced its citizenship!) இழந்துவிடுகிறது.

இந்தியா மட்டும் இல்லை; ஆசியா முழுவதும் பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் பரவலாக உண்டு. அமெரிக்காவில் 19-ம் நூற்றாண்டு முடியும் வரை, யாரைப் பார்த்தாலும், எல்லா இடங்களிலும் எச்சில் துப்பிக்கொண்டே இருப்பார்கள். அப்போது முக்கால்வாசி அமெரிக்கர்களுக்குப் புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது. துப்புவதற்கான கிண்ணங்கள் (Spittoons) தயாரிக்கும் தொழிற்சாலைகள்கூட அங்கே நிறைய இருந்தன. 'மேஜை, நாற்காலிகள் மீது மட்டும் எச்சில் துப்பாதீர்கள்!' என்று எழுதப்பட்ட போர்டுகள் பல கட்டடங்களில் வைக்கப்பட்டன. இப்படி கண்ட இடத்தில் துப்புகிற 'கலாசாரத்தை'ப் பார்த்துவிட்டு ஆஸ்கர் ஒயில்டு, 'அமெரிக்கா என்பது பிரமாண்டமான ஒரு எச்சில்!' என்றார். இப்போது, அங்கே யாரும் பொது இடத்தில் துப்புவது இல்லை. இந்தியாவிலும் அடுத்த தலைமுறையினர் தெருவில் எச்சில் துப்ப மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

கனவுக்கும் கற்பனைக்கும் என்ன வேறுபாடு?

கனவுக்கு தூங்க வேண்டும்... கற்பனைக்கு ரொம்ப விழித்துக்கொண்டு இருக்க வேண்டும்!

அடுத்த தலைமுறை துப்ப மாட்டார்கள்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

எஸ்.ஜெயகாந்தன், புன்செய்ப்புளியம்பட்டி.

சந்தேகம் - மனிதனின் குணமா, அல்லது நோயா?

போகப் போக குணமாக மாறிவிடும் நோய்!

அடுத்த தலைமுறை துப்ப மாட்டார்கள்! - ஹாய் மதன்-கேள்வி பதில்
அடுத்த தலைமுறை துப்ப மாட்டார்கள்! - ஹாய் மதன்-கேள்வி பதில்