Published:Updated:

டீன் கொஸ்டீன் : தோழியா... காதலியா?

டீன் கொஸ்டீன் : தோழியா... காதலியா?

பிரீமியம் ஸ்டோரி

டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன் : தோழியா... காதலியா?
டீன் கொஸ்டீன் : தோழியா... காதலியா?
தோழியா... காதலியா?
டீன் கொஸ்டீன் : தோழியா... காதலியா?

எம்.எம்.சங்கர், தர்மபுரி.

"நான் மின்சாரம் தயாரிப்பதில் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளேன். இதற்கான காப்புரிமை பெறுவதற்கு ஆங்கிலத்தில் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்கிறார்கள். எனக்குஆங்கி லம் அவ்வளவாகத் தெரியாது. தமிழில் அந்தக் கண்டு பிடிப்பைப்பற்றி விளக்கமாக எழுதிவைத்துள்ளேன். இவற்றை ஆங்கிலத்தில் மாற்றி எனக்குக் காப்புரிமை பெற்றுத்தர நிறுவனங்கள் ஏதேனும் உள்ளனவா? அப்படிச் செய்யும்போது என் காப்புரிமைப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டா? தமிழில் விண்ணப்பிக்க முடியுமா?"

ரங்கசாமி துணைக் கட்டுப்பாட்டாளர் - காப்புரிமை மற்றும் வடிவமைப்பு.

"பேடன்ட் பெறுவதற்கு தமிழில் விண்ணப்பிக்க முடியாது. நீங்கள் கல்லூரியில் படிப்பவராக இருந்தால், உங்கள் கண்டு பிடிப்பைப்பற்றி பல்கலைக்கழகங்களில் தெரிவிக்கலாம். ஏறத்தாழ அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் IPR Cell என்று ஒரு துறை இருக்கும். அங்கு உங்கள் கண்டு பிடிப்பை விளக்கிச் சொல்லி காப்புரிமை பெறலாம். கல்லூரி மாணவராக இல்லாத பட்சத்தில் விஷிவிணி, தமிழ்நாடு தொழிற் துறை ஆணையரகம், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (TNSCST - TamilNadu State Council for Science - Technology) ஆகியவற்றில் விண்ணப்பித்துத் தகவல்கள் பெறலாம். மேலும், தமிழில் உள்ள உங்கள் கண்டுபிடிப்பின் விளக்கங்களை ஆங்கிலத் தில் மாற்றி பேடன்ட் பெற்றுத் தர தனியார் நிறுவனங்களும் இருக்கின்றன. இதுபற்றிய விவரங்களை new.ipindia.nic.in என்ற எங்கள் தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். அந்தத் தளத்தில் Patents என்பதைச் சொடுக் கினால், பதிவு பெற்ற பேடன்ட் ஏஜென்சிகளின் பட்டியலும், முகவரிகளும் இருக்கும். உங்களின் கண்டுபிடிப்பு விளக்கங்கள் ரகசியமாக வைக்கப்படும். பயப்பட வேண்டாம் சங்கர்!"

டீன் கொஸ்டீன் : தோழியா... காதலியா?

பெயர் ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

"என் நெருங்கிய தோழி அவள். சமீப காலமாக எனக்கு அவள் மேல் காதல் போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. அதை அவளிடமும் சொல்லிவிட்டேன். அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. ஆனால், காதல் மட்டும் முடியாது என்கிறாள். அவளுடன் மேற்கொண்டு நட்புடன் பழகவும் சங்கடமாக இருக்கிறது. அவளைப் பிரியவும் மனம் இல்லை. என்ன செய்வது?"

ரங்கராஜன், மனநல மருத்துவர்.

"ஓர் ஆணுக்கு இன்னொரு பெண் மீது ஈர்ப்பு வருவதுபோல, ஆண்-ஆண், பெண்-பெண் ஈர்ப்பும் சகஜம்தான். அநேகமாக உங்களுக்கு உங்கள் தோழியின் மீது ஓரின உணர்வு தோன்றியிருக்க வாய்ப்பு இருக்கலாம். உங்களுக்கு அவர் மீது உடல் அளவிலோ, மனரீதியாகவோ அல்லது நடவடிக்கை சார்ந்தோ ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு அதனால் ஓரினச் சேர்க்கை உணர்வு வந்திருக்கலாம். உங்கள் எண்ணத்தை அவரிடம் சொல்லிவிட்டீர்கள். பிரச்னை இல்லை. அவருக்கும் உங்களைப் பிடித்திருக்கிறது. ஆனால், ஓரின உறவு முறையில் ஈடுபாடு இல்லை என்று சொல்லும் போது அவருடைய எண்ணத்தையும் மதிக்க வேண்டும். அவருக்கு விருப்பம் இல்லை என்பதற்காக மீண்டும் கட்டாயப்படுத்துவதோ, பிளாக் மெயில் செய்வதோ கூடாது. இது போல ஓர் எண்ணம் தோன்றியவுடனே அவரைவிட்டுப் பிரிந்துவிட வேண்டும். அல்லது அவருக்குத் தொந்தரவு தராமலாவது இருக்க வேண்டும். அவர்கள் உங்கள் உணர்வை மதிக்காமல் போனால் ஏற்படும் வலியை விட, அவரைவிட்டு விலகி இருப்பதால் ஏற்படும் மன அழுத்தம் அத்தனை பாதிப்பு இல்லாததுதான். ஆகவே, அவரைவிட்டுப் பிரிவதும், அவருடன் சேர்ந்திருப்பதும் உங்கள் முடிவில்தான் இருக்கிறது!"

கே.பெரியசாமி, சென்னை-24.

"கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது, சில வணிக நிறுவனங்கள் சேவைக் கட்டணம் வசூல் செய்வது இல்லை. சில நிறுவனங்கள் சேவைக் கட்டணம் பெறுகின்றன. சேவைக் கட்டணம் கொடுக்க வேண்டுமா, கூடாதா?"

பால் பர்னபாஸ் , தலைவர், மாநில நுகர்வோர் பாதுகாப்புக் கழகம்.

"கிரெடிட், டெபிட் கார்டுகளுக்குச் சேவைக் கட்டணம் விதிக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. அப்படியும் சில நிறுவனங்கள் சேவைக் கட்டணம் விதிக்கத்தான் செய்கின்றன. ஒரு பொருளுக்கு மதிப்புக் கூட்டு வரியையும் சேர்த்தே பில் தொகை மதிப்பிடப்பட்ட பிறகு, மீண்டும் சேவைக் கட்டணம் என்று வசூலிப்பது முறையாகாது. இதுபற்றி 'மாநில நுகர்வோர் பாதுகாப்புக் குழு, எழிலகம், சென்னை' முகவரியில் புகார் அளிக்கலாம்!"

செ.ஞானப் பிரகாசன், சென்னை-44.

"நான் என் கணினியில் தமிழ் யுனிகோட் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்ய விரும்புகிறேன். அது இணையத்தில் எங்கே இலவசமாகக் கிடைக்கும்? என் கைபேசியில் உள்ள தமிழ் எழுத்துருவை யுனிகோட் ஆக மாற்ற முடியுமா?"

விஜயன், பனேசியா ட்ரீம்வீவர்ஸ் மென்பொருள் நிறுவனம், சென்னை.

"விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் latha.otf என்கிற யுனிகோட் எழுத்துருவை மைக்ரோசாஃப்ட் வழங்கியுள்ளது. அது ஒரே ஸ்டைல்தான். அதைத் தவிர்த்து, விதவிதமான வடிவங்களில் யுனிகோட் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்ய மத்திய அரசின்

டீன் கொஸ்டீன் : தோழியா... காதலியா?

இந்திய மொழிகள் தகவல் மையத்தின் இணையதளமான http://ildc.in/Tamil/GIST/htm/otfonts.htm என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அந்தத் தளத்திலேயே அந்த எழுத்துருக்களை எப்படி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்வது என்கிற விளக்கங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், வெறும் எழுத்துருவினால் நீங்கள் பார்க்க, வாசிக்கத்தான் முடியும். அதைத் தட்டச்சு செய்ய வேண்டுமானால், அதற்கான விசைப்பலகை இயக்கி வேண்டும். அந்த விசைப்பலகை இயக்கியை http://software.nhm.in/products/writer என்ற இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொண்டு, உங்களுக்குத் தெரிந்த முறையில் தட்டச்சு செய்துகொள்ளலாம். மொபைல் போன்களுக்கு யுனிகோட் வசதி இன்னும் வரவில்லை. நோக்கியா போன்ற மொபைல் நிறுவனங்கள் அவர்களுக்கு என்று தனியான ஓர் எழுத்துரு முறையைப் பின்பற்றி கைபேசியில் தமிழ்ப் பயன்பாட்டைக் கொண்டுவந்திருக்கிறார்கள்!"

டீன் கொஸ்டீன் : தோழியா... காதலியா?
டீன் கொஸ்டீன் : தோழியா... காதலியா?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு