Published:Updated:

நடிகைகளுக்கு 'செக்!' - ஹாய் மதன்-கேள்வி பதில்

நடிகைகளுக்கு 'செக்!' - ஹாய் மதன்-கேள்வி பதில்

பிரீமியம் ஸ்டோரி

ஹாய் மதன் - கேள்வி பதில்
நடிகைகளுக்கு 'செக்!' - ஹாய் மதன்-கேள்வி பதில்
நடிகைகளுக்கு 'செக்!' - ஹாய் மதன்-கேள்வி பதில்
நடிகைகளுக்கு 'செக்'!
நடிகைகளுக்கு 'செக்!' - ஹாய் மதன்-கேள்வி பதில்

மாலதி மஹாஸ், காரைக்கால்.

அறிவாளிகளின் மூளைகளை ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா?

உலக அளவில் அறிவாளிகளின் மூளைகள் ஆராய்ச்சி செய்யப்பட்ட விவரம் எனக்குத் தெரியாது. ஆனால், ஐன்ஸ்டீன் 1955-ல் இறந்த பிறகு அவரது மூளை, ஆராய்ச்சிக்காகப் பாதுகாக்கப்பட்டதுபற்றித் தெரியும். மூளை அகற்றப்பட்ட பிறகு அவருடைய உடல் புதைக்கப்படவில்லை, எரிக்கப்பட்டது! டாக்டர் தாமஸ் ஹார்வே என்கிற அமெரிக்கர் ஐன்ஸ்டீன் உடலுக்குப் பிரேதப் பரிசோதனை நடத்தினார். அவருடைய ஆராய்ச்சிக் கூடத்தில், ஐன்ஸ்டீனின் மூளை, ஒரு ஜாடியில் பாதுகாக்கப்பட்டது. பிறகு, 30 ஆண்டுகளுக்கு எந்தப் பரிசோதனையும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மறந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். கடைசியில், 1985-ல்தான் ஏதோ ஆராய்ச்சிகள் நடந்தன. பெரிசாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மனிதன் (மூளையோடு!) இயங்கக் காரணமான நியூரான்களைத் தூண்டிவிடும் 'செல்'கள் (Glial Cells) அவரது மூளையில் மிக அதிகமாக இருந்தன என்பது மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. மூளை என்பது பார்ப்பதற்கு 'போரடி'க்கும் ஒரு வகிடு மற்றும் சிக்கலான பல மடிப்புகள்கொண்ட கொளகொள உருண்டை. உயிரோடு இருக்கும்போது அதற்குள் நிகழும் மின் அலைகள்தான் அத் தனை ஆச்சர்யங்களையும்நிகழ்த்து கின்றன!

ச.ராஜசேகர், செய்யாறு.

பெண் பாவம் பொல்லாதது... ஆண் பாவம்?

சொல்லாதது! (அட, சும்மா சொன்னேங்க!)

'பாவம் புரிவது' பொதுவாகவே தவறு. அதற்கு ஆண் - பெண் பேதம் எல் லாம் கிடையாது. ஒரு காலத்தில் பெண் என்பவள் முழுக்க முழுக்க ஆணை நம்பி, அவனைச் சார்ந்து இருந்தபோது உருவாக்கப்பட்ட பழமொழி(?) இது!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்-1.

நமீதா, தமன்னா, இலியானா போன்ற நடிகைகள்தான் ரசிகர்களின் கனவில் உலா வருகிறார்கள். இவர்கள் எல்லாம் ரசிகர்களிடம் ராயல்ட்டி கேட்டால்?

நடிகைகளுக்கு 'செக்!' - ஹாய் மதன்-கேள்வி பதில்

'போன கனவிலேயே ஒரு செக் அனுப்பினேனே...' என்று சொல்லி விடவும்!

து.பூவராகன், கொடநகர்.

ஒரே பாய்ச்சலில் அதிக தூரம் பாயும் நான்கு கால் விலங்கு எது?

நடிகைகளுக்கு 'செக்!' - ஹாய் மதன்-கேள்வி பதில்

உடல் அளவைப் பொருத்துப் பார்த்தால் தெள்ளுப்பூச்சியும் (Flea), தவளையும்தான் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும். நமக்கு சரிசமமாக வளர்ந்த பிராணி என்றால் கங்காரு. ஒரே ஜம்ப் - 40 அடிக்கு மேல் தாண்டும் (மனித சாதனை - 29 அடி 2 1/2 அங்குலம்)!

என்.பாலகிருஷ்ணன், மதுரை-1.

முயற்சி இல்லாமல் கிடைப்பது எது?

காற்று என்று சொல்லலாம் என்றால், அதற்கும் மூச்சை உள்ளே இழுக்க வேண்டுமாமே?!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

'இந்தியப் பெண் எழுத்தாளர்கள் - பிற நாட்டுப் பெண் எழுத்தாளர்கள்...' என்ன வித்தியாசம் சார்?

நடிகைகளுக்கு 'செக்!' - ஹாய் மதன்-கேள்வி பதில்

பிற நாடுகள் இல்லை. மேலை நாடுகள் என்று சொல்லுங்கள். அங்கே பெண்களுக்குத் தரப்பட்டு இருக்கும் சுதந்திரமும் வாய்ப்புகளும் நம் நாட்டுப் பெண்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்பதை மறுக்க முடியாது. அது, எழுத்திலும் எதிரொலிக்கும்தான். இங்கே பெண் எழுத்தாளர்களை ரொம்ப 'ஜட்ஜ்' செய்கிறோம். வெளிப்படையாக மனித உணர்வுகளை அலசும் பெண் எழுத்தாளர்கள் இங்கே (மேலை நாடுகளோடு ஒப்பிடும்போது) குறைவே. நான் சமீபத்தில் ரசித்தது இந்தியப் பெண்மணி ஜும்பாலஹிரி எழுதிய சிறுகதைத் தொகுப்புகள்தான். அட்டகாசமாக எழுதுகிறார்!

புத்தார்தா, காரைக்குடி.

பாட்டன் பெயரைப் பேரனுக்குச் சூட்டுகிற பழக்கம் இங்கே மட்டும்தானா... உலகம் முழுக்கவே இருக்கா?

சரியாப்போச்சு! பிரிட்டன், அமெரிக்காவில் எல்லாம் கொள்ளுப்பாட்டன் பெயர்களைக்கூடச் சேர்த்துக்கொள்வார்கள். உதாரணமாக, 'ராக்ஃபெல்லர்' என்கிற பெயர் எல்லாம் பரம்பரையாக நீடிக்கும். உங்க கொள்ளு-எள்ளுத் தாத்தா பெயர் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா?!

ரேவதி சங்கர், சென்னை-13.

நடிகைகளுக்கு 'செக்!' - ஹாய் மதன்-கேள்வி பதில்

'இன்றைய சூழலில், காதல் என்றாலே காமம் என்பதே முன் நிற்கிறது' என்கிறேன். ஏற்றுக்கொள்கிறீர்களா?

ஏற்றுக்கொள்ள மாட்டேன். பல சமயங்களில் காமம் என்பது 'காதல்' என்கிற முகமூடியை அணிந்துகொண்டு வரலாம். காதலில் அன்பு மட்டுமே நயாகரா நீர்வீழ்ச்சிபோலப் பெருக்கெடுக்கும். காமம் என்பதெல்லாம் ரொம்பப் பிற்பாடு வரும் இயற்கையான ஓர் உணர்வு. காத லுக்குக் கட்டுப்பாடுகள் தேவை இல்லை. காமத்துக்கு ரொம்பத் தேவை!

சீர்காழி சாமா, தென்பாதி.

வாழ்க்கையில் கஷ்டப்படாமல் முன்னுக்கு வர ஒரு வழி கூறுங்களேன்?

அப்புறம் முன்னுக்கு வந்த பிறகு கஷ்டப்பட வேண்டியிருக்கும். பரவாயில்லையா?

நடிகைகளுக்கு 'செக்!' - ஹாய் மதன்-கேள்வி பதில்
நடிகைகளுக்கு 'செக்!' - ஹாய் மதன்-கேள்வி பதில்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு