Published:Updated:

டீன் கொஸ்டீன் : புருவத்தைத் திருத்தலாமா?

டீன் கொஸ்டீன் : புருவத்தைத் திருத்தலாமா?

பிரீமியம் ஸ்டோரி

டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன் : புருவத்தைத் திருத்தலாமா?
டீன் கொஸ்டீன் : புருவத்தைத் திருத்தலாமா?
புருவத்தைத் திருத்தலாமா?
டீன் கொஸ்டீன் : புருவத்தைத் திருத்தலாமா?

கே.சிந்தியா, சென்னை-63.

"கல்லூரித் தோழிகள் நாங்கள் அடிக்கடி மெரினா, பெசன்ட் நகர் பீச்சுக்குச் செல்வோம். காதலர்கள், நண்பர்கள், குடும்பத்தினர்கள் என விதவிதமான மக்கள் அங்கு கூடியிருப்பார்கள். அதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், கடற்கரையில் சில இடங்களில் கும்பலாக அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருப்பார்கள். அவர்களைக் கண்டாலே, எனக்கு பதற்றம் வந்துவிடுகிறது. சமயங்களில் அவர்கள் ஏதேனும் கமென்ட் அடிப்பார்கள். நான் பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் விலகி வந்துவிடுவேன். கடற்கரையும் பொது இடம்த£னே... அங்கு மது அருந்துவது தவறு இல்லையா? இதைப்பற்றி யாரிடம் புகார் செய்வது? எஸ்.ஜெயக்குமார்

கூடுதல் துணை கமிஷனர், மதுவிலக்குப் பிரிவு, சென்னை புறநகர்.

"கடற்கரையும் பொது இடம்தான். கடற்கரை, பூங்கா, சாலை ஓரம் எனப் பொது இடங்களில் மது அருந்துவது நிச்சயம் தவறா னதே. கடற்கரையில் போலீஸார் பாதுகாப்புக்கு இருப்பார்கள். ஒரு ரோந்து வாகனமும் இருக்கும். மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் புறக்காவல் நிலையங்கள் உள்ளன. அங்கு சென்று புகார்கூட அளிக்க வேண்டியது இல்லை. தகவல் சொன்னாலே போதும். போலீ ஸார் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்!"

செ.சுரேஷ்குமார், கோயம்புத்தூர்-4.

"நான் அலுவலக உபயோகத்துக்காக வீட்டு கம்ப்யூட்டரில் இணைய இணைப்பு கொடுத்திருக்கிறேன். நான் வீட்டில் இல்லாத சமயங்களில் என் குழந்தைகள் அதில் கேம்ஸ் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். அப்போது சம்பந்தம் இல்லாமல் ஆபாசத் தளங்களுக்கான லிங்குகள் திரையில் தோன்றுகின்றன. அதுவே ஆபாசமாக இருக்கும் நிலையில், அதைத் தெரியாமல் க்ளிக் செய்துவிட்டால் உச்சகட்ட ஆபாசத்தைத் திரையிடும் தளத்துக்கு அது அழைத்துச் செல்கிறது. இதுபோன்ற விளம்பரங்களைத் தவிர்க்க முடியாதா? அவற்றை ஒட்டுமொத்தமாகத் தடை செய்யும் சாஃப்ட்வேர்கள் ஏதேனும் இருக்கின்றனவா? டி.வி-க்கு சைல்டு லாக் இருப்பதுபோல இணைய இணைப்புக்கும் ஏதேனும் உண்டா?"

டீன் கொஸ்டீன் : புருவத்தைத் திருத்தலாமா?

எம்.முத்துப்பாண்டி, நிர்வாக இயக்குநர், எம்.எம்.ஐ. சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ்.

"உங்கள் பிரவுசரில் (இன்டர்நெட் எக்ஸ்புளோ ரர், ஃபயர்பாக்ஸ், கூகுள் குரோம் போன்றவை) மெனு பாரில் டூல்ஸ் என்று ஓர் ஆப்ஷன் இருக்கும். அதை க்ளிக் செய்தால், இன்டர்நெட் ஆப்ஷன் என்று இருக்கும். அதில் செக்யூரிட்டி விண்டோ வில் ரெஸ்ட்ரிக்டட் சைட் என்று இருக்கும். அதில் என்னென்ன வெப்சைட்களைத் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவற்றை அதில் சேர்க்கலாம். இது 100 சத விகிதம் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. இதன் மூலம் நீங்கள் குறிப்பிடும் வெப்சைட்டுகளை மட்டுமே தடுக்க முடியும். புதிதாக ஒரு ஆபாச லிங்க் வந்தால், இதன் மூலம் தடுக்க முடியாது. இதைத் தவிர, உங்க ளுக்கு இணைய வசதி வழங்கும் நிறுவனங்களிடம் (பி.எஸ்.என்.எல்., ஏர்டெல் போன்றவை) புகார் செய்தீர்கள் என்றால், அவர்கள் சர்வரில் இதுபோன்ற இணையதளங்களை பிளாக் செய்வார்கள். கம்ப்யூட்டரில் வேறு வேலை செய்து கொண்டு இருக்கும்போது, லிங்க்குகள் தோன்றுவதைத் தவிர்க்க பாப் அப் பிளாக் செய்ய வேண்டும். அதுவும் 'டூல்ஸ்'-ல் உள்ளது. அல்லது ஃபயர்வால் செட்டிங்கில் போய் அதை மாற்றிக் கொள்ளலாம். கம்ப்யூட்டரில் வைரஸ் அட்டாக் இருக்கும்போது இப்படி லிங்க்குகள் வர வாய்ப்பு உண்டு. நீங்கள் முழுமையான, லைசென்ஸ்டு வெர்ஷன் ஆன்டி-வைரஸை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தாலே போதும். இவைபோன்ற லிங்க்குகள் திடீர் திடீரென்று வருவதைத் தடுக்க முடியும்!"

என்.விமலா, திருச்சி-20.

டீன் கொஸ்டீன் : புருவத்தைத் திருத்தலாமா?

"பியூட்டி பார்லருக்குச் செல்லும்போது நான் அடிக்கடி புருவத்தைத் திருத்திக்கொள்வேன். ஆனால், 'புருவத்தின் கீழ் இருக்கும் நரம்புகள் கர்ப்பப்பையுடன் இணைந்துஇருக்கின்றன. அடிக்கடி புருவத்தைத் திருத்துவது கர்ப்பப்பையைப் பாதிக்கும்' என்கிறார்கள். இது சரியா?"

எஸ்.ஜி.நிரஞ்சனா தேவி, மகப்பேறு மருத்துவர்.

"இது வெறும் கட்டுக்கதைதான். புருவத்தை திரெடிங் செய்வதற்கும் கர்ப்பப் பைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அறிவியல்பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே, பயப்படத் தேவை இல்லை. பொதுவாக ஃபேஷியல், திரெடிங் செய்வது போன்றவற்றை கெமிக்கல் பொருட்களைத் தவிர்த்துவிட்டு, இயற்கையான பொருட்களைக்கொண்டு செய்தால் தோலுக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது!"

சா.புருஷோத்தமன், சென்னை-20.

"அம்மா இல்லாததால் சின்ன வயதில் இருந்தே என் மகளை நான் செல்லமாக, சுதந்திரமாக வளர்த்திருக்கிறேன். தற்போது அவள் கல்லூரிக்கு செல்லத் துவங்கி இருக்கிறாள். அவளது கல்லூரியில் யூனிஃபார்ம் கட்டுப்பாடு இல்லை என்பதால் மிக டிரெண்டியாக ஆடை அணிந்து செல்கிறாள். இறுக்கமாக ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிகிறாள். எனக்கு அதைப்பற்றி எந்த ஆட்சேபணை யும் இல்லை. ஆனால், மற்றவர்களின் கண்களை உறுத்தும் வகையில் மிகவும் எக்ஸ்போசிவ்வாக ஆடை அணிந்து பொது இடங் களில் உலவும்போது, அவளுக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்துவிடுமோ என அஞ்சுகிறேன். இதை அவளிடம் சொல்லவும் சங்கடம். அவளுக்குப் புரியும் வகையில் சில வார்த்தைகள் சொல்லுங்களேன்?"

செந்தில்வேலன், மனநல நிபுணர்.

டீன் கொஸ்டீன் : புருவத்தைத் திருத்தலாமா?

"இன்றைய உலகமயமாக்கல் கலாசாரத் தொற்று காரணமாக இள வயதினர் ஆடை அலங்காரங்களி லும் மேலை நாடுகளை அப்படியே காப்பி அடிக்கின்றனர். உங்கள் காலத்தில் எவை எல்லாம் உன்னதமாக இருந்ததோ, அவை இன்றைய தலைமுறையினரை ஈர்க்காமல்கூடப் போகலாம். உங்கள் மகளுக்குப் பிடித்ததை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமலும் போகலாம். தலைமுறை இடைவெளி தான் இதற்கெல்லாம் காரணம். பொதுவாக, இன்றைய இளைஞர்கள் அதிக நேரத்தைச்செலவிடு வது தங்கள் நட்பு வட்டத்தில்தான். அங்கு நண்பர் கள் எப்படி இருக்கிறார்களோ, அதேபோல தானும் இருக்க வேண்டும் என்ற விருப்பம்தான் நடை, உடைகளில் பிரதிபலிக்கிறது. அதே சமயம், எந்தச் சுதந்திரமும் எல்லை மீறாமல் பார்த்துக்கொள்ளும் படி ஒழுக்க விதிகளைப் பெற்றோர்கள்தான்பிள்ளை களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஒரு தந்தையாக அதைப் பேசச் சங்கடமாகத்தான் இருக்கும். ஆகவே, உங்கள் மகளின் தோழிகளை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு பொதுவாகச் சொல்வதுபோல இந்த விஷயங்களைப்பற்றிப் பேசுங்கள். நிச்சயம் உங்கள் மகள் புரிந்துகொள்வார்!"

டீன் கொஸ்டீன் : புருவத்தைத் திருத்தலாமா?
டீன் கொஸ்டீன் : புருவத்தைத் திருத்தலாமா?
டீன் கொஸ்டீன் : புருவத்தைத் திருத்தலாமா?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு