Published:Updated:

புலி மந்திரி?! - ஹாய் மதன்-கேள்வி பதில்

புலி மந்திரி?! - ஹாய் மதன்-கேள்வி பதில்

பிரீமியம் ஸ்டோரி

ஹாய் மதன் கேள்வி பதில்
புலி மந்திரி?! - ஹாய் மதன்-கேள்வி பதில்
புலி மந்திரி?! - ஹாய் மதன்-கேள்வி பதில்
புலி மந்திரி?!
புலி மந்திரி?! - ஹாய் மதன்-கேள்வி பதில்

மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

மழையில் நனைவதற்கும் முத்த மழையில் நனைவதற்கும் என்ன வித்தியாசம்?

மழையை ஆறத் தழுவிக்கொள்ள முடியாது. முத்த மழையின்போது குடை தேவை இல்லை. இதுதான் வித்தியாசம்!

சி.பி.நாராயணசாமி, செக்கானூர்.

முட்டாளிடம் தோற்றால், 'தோல்வியை ஒப்புக்கொள்' என்கிறார் திருவள்ளுவர். ஒருவர் முட்டாளா, அறிவாளியா என்பதன் அளவுகோல் எது?

அது எந்தக் குறள்?

புலி மந்திரி?! - ஹாய் மதன்-கேள்வி பதில்

ஆனால், தோல்வியை ஒப்புக்கொண்டால்தான் முட்டாளிடம் இருந்து விலகிவிட முடியும் என்றால் ஒப்புக்கொள்வதே மேல். அப்படி ஒப்புக்கொண்ட உடனே நீங்கள் அறிவாளி ஆகிவிடுகிறீர்கள். இதற்கெல்லாம் அளவுகோல் கிடையாது. ஒவ்வொரு முட்டாளும் ஓர் அடி முட்டாளுக்கு அறிவாளியே!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

யாரோ ஒருவனை யாரோ ஒருவன் செய்த கொலைக்கு மரண தண்டனை எழுதும் நீதிபதியின் மனநிலை எப்படி இருக்கும்?

சட்டத்தில் இருப்பதைத்தான் நீதிபதி தீர்ப்பாக வழங்குகிறார். அவர் மரண தண்டனை விதித்தால்கூட, ஒவ்வொரு நாட்டிலும் அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதுகூட சட்டப் புத்தகத்தின்படிதான் நடக்கும் (தூக்குத் தண்டனையா? துப்பாக்கியாலா? எலெக்ட்ரிக் நாற்காலியா?). நீதிபதி என்பவர் சட்ட அறிவு மிகுந்த ஒரு மெசெஞ்சர். சாவுபற்றிய தந்தியைக் கொண்டுவரும் தபால்காரரின் மனநிலைதான் அவருக்கு இருக்கும்!

பொன்விழி, அன்னூர்.

ரஜினி, கமல், அஜீத், விஜய்... யாருக்கு கௌபாய் டிரெஸ் பொருத்தமாக இருக்கும்?

எனக்கு என்னவோ நடிகர் ராமராஜனுக்கு மட்டும்தான் கௌபாய் டிரெஸ் பொருத்தம் என்று தோன்றுகிறது. நம்ம உள்ளூர் கௌபாய் டிரெஸ்ஸைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?!

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

புலி மந்திரி?! - ஹாய் மதன்-கேள்வி பதில்

சிங்கம் காட்டின் அரசன் என்றால், புலியை மந்திரி என்று அழைக்கலாமா?

புலி மந்திரி என்றால், அவர் எப்போதும் அரசன் பக்கத்திலேயே அல்லவா இருக்க வேண்டும்? யாராவது சிங்கத்துக்குப் பக்கத்தில் புலியைப் பார்த்தது உண்டா ('ஜூ'வைத் தவிர!)? புலி, சிங்கத்தைப் பார்க்கும்போது எல்லாம் 'இவரு என்ன கோடு போட்ட சொக்காகூடப் போடாம வர்றாரு?!' என்று எகத்தாளமாகப் பார்க்கும். புலி எப்போதும் தனிக்காட்டு ராஜா!

ராஜிநந்தா, செகந்திராபாத்.

எனக்கும் (உங்களைபோலவே) திகில் இயக்குநர் ஹிட்ச்காக் பிடிக்கும். அவரைப்பற்றிய டாகுமென்ட்டரி ஒன்றைப் பார்த்தேன். கடைசி வரை மனிதர் சிரிக்கவே இல்லை (புன்னகைகூட ஊஹ§ம்), திகில் படங்கள் எடுத்தால் அப்படி முகத்தைவைத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டமா?

அப்படி எல்லாம் இல்லை. நகைச்சுவைப் படங் களை இயக்கும் வுட்டி ஆலன், ஹிட்ச்காக்கைவிட முகத்தை இன்னும் சீரியஸாக வைத்துக்கொள்கிறாரே! பொதுவில், முகத்தை 'உம்'மென்று வைத்துக்கொள் பவர்களுக்குத்தான் நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கும்!

ஹிட்ச்காக் ஒருமுறை தன் கேமராமேனிடம் 'பெட்' செய்தார். 'உங்களால் ஓர் இரவைத் தன்னந்தனியாக கும்மிருட்டான அறையில் கழிக்க முடியுமா?' என்று. 'இது பெரிய விஷயமா?' என்றார் கேமராமேன். நடுநிசி. ஸ்டுடியோவில் ஓர் அறையில் கேமராவோடு அவரை விலங்கால் பிணைத்து கதவைப் பூட்டிவிட்டு வந்துவிட்டார் ஹிட்ச்காக். கேமராமேன் கையில் ஒரே ஒரு பாட்டில் பிராந்தி மட்டும் தரப்பட்டது. ஒரே ஒரு விஷயம் யாருக்கும் தெரியாது. பிராந்தியில் பேதி மாத்திரைகளைக் கலந்து இருந்தார் ஹிட்ச்காக். சில மணி நேரத் துக்குப் பிறகு கேமராமேனின் 'ஹெல்ப்' என்கிற அலறல் கேட்க ஆரம்பித்தது!

பொன்விழி, அன்னூர்.

யானைப் படையை போரில் முதன்முதலில் பயன்படுத்திய அரசர் யார்?

புலி மந்திரி?! - ஹாய் மதன்-கேள்வி பதில்

அதற்கான குறிப்புகள் இல்லை. சுமார் 2,400 ஆண்டுகளுக்கு முன்பே அலெக்சாண்டரோடு மோதிய இந்திய மன்னர் போரஸ், யானைப் படை வைத்திருந்தார். மகாபாரதத்தில் யானைப் படை உண்டு. உலகில், இந்திய மன்னர்கள் மட்டுமே யானைகளை வளர்த்தார்கள். வசதிக்கு ஏற்ப, எண்ணிக்கை மாறுபடும்.

'என்ன யானைப் படையோ! ஏராளமான ஒட்டகங்களுக்குப் போடும் தீனி ஒரு யானைக்குத் தேவைப்படுகிறது' என்று மொகலாய மன்னர் பாபர் அலுத்துக்கொண்டு இருக்கிறார். யானைகளை வைத்துக்கொண்டால்தான் மன்னருக்கு மதிப்பு - பணக்காரர்கள் ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வைத்திருப்பதுபோல!

திருத்தம்: சென்ற இதழில் ஒரு கேள்விக்கு 'ஆண்பாவம் செல்லாதது' என்று பதில் எழுதி இருந்தேன். அது 'சொல்லாதது' என்று அச்சாகி இருந்தது.

வெளியே சொல்லாமல் மனதிலே வைத்துக்கொண்டு... அந்தப் பதிலும் சரிதானோ?!

புலி மந்திரி?! - ஹாய் மதன்-கேள்வி பதில்
புலி மந்திரி?! - ஹாய் மதன்-கேள்வி பதில்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு