Published:Updated:

நான் சி.பி.ஐ.க்கு அஞ்சவில்லை: ராசா பேட்டி

Vikatan Correspondent

சென்னை, டிச.20,2010

2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில், சி.பி.ஐ. விசாரணைக்கு தாம் அஞ்சவில்லை என்று முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார். ##~~##

ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரிப்பதற்காக, ஆ.ராசாவுக்கு சிபிஐ இன்று சம்மன் அனுப்பியது. அதேபோல், அரசியல் தரகர் நீரா ராடியா உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு வீடு திரும்பிய போது நிருபர்களிடம் ஆ.ராசா கூறுகையில், "நான் சி.பி.ஐ.-க்கு அஞ்சவில்லை. நான் ஒரு வழக்கறிஞர். ஒரு வழக்கறிஞராக, நான் சட்டத்துக்குக் கீழ்ப்படிவேன். சட்டத்தை தட்டிக் கழிக்க மாட்டேன்," என்றார்.

முன் ஜாமீன் கோரவிருப்பதாக வெளியான தகவலை 'ரப்பிஷ்' என்றவர், "நான் குற்றவாளி அல்ல. எனவே, முன் ஜாமீனுக்கு விண்ணப்பிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை," என்றார் ராசா.

சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவிருப்பதாக கூறிய அவர், "என்னிடம் விசாரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ.-யிடம் இருந்து தகவல் வந்துள்ளது. அவர்களது சோதனைக்குப் பிறகு இது இயற்கையான நடைமுறைதான். சி.பி.ஐ.யின் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்," என்றார் ஆ.ராசா.