Published:Updated:

எந்தக் குட்டி அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்

எந்தக் குட்டி அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்


ஹாய் மதன் : கேள்வி-பதில்
எந்தக் குட்டி அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்
எந்தக் குட்டி அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எந்தக் குட்டி அழகு?
எந்தக் குட்டி அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

"காதோடு காதுவைத்த மாதிரி காரியத்தை முடி' என்பதற்கு என்ன பொருள்?

அதாவது, இந்தக் காதில் வாங்கி அந்தக் காது வழியாக விட்டுவிடக் கூடாது. நிச்சயமாக காரியத்தைச் செய்து முடிக்க வேண்டும். காதுக்கும் காதுக்கும் நடுவே என்ன இருக்கிறது? மூளை! வேறு யாருக்கும் சொல்லாமல், விஷயம் நம் மூளைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இந்தத் தகுதி இருப்பவர்களுக்கு எல்லாம் அரசியல் தலைவர்களிடம் உடனே வேலை கிடைக்கும்!

சிவபாரதி, சிதம்பரம்.

சமீபத்திய தமிழ் சினிமாவின் போக்கு, தொழில்நுட்பம் மதனுக்குத் திருப்தி அளிக்கிறதா?

எப்போதுமே தொழில்நுட்பம் 'ஃபாஸ்ட் ஃபார்வேர்டு' மாதிரி உடனுக்குடனே வந்து சேர்ந்துவிடும். மூளைநுட்பம்தான் மெள்ள... 'ஸ்லோமோஷனில்' நிகழ்கிறது. திருப்தி? அது, அவ்வப்போது ஏற்படுகிற - வந்துபோகும் ஓர் உணர்வு!

ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.

புகழ் ஈட்டுதல் - கிட்டிய புகழை நிலைநிறுத்துதல்... எது வெகு சிரமம்?

எந்தக் குட்டி அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்

புகழ் ஈட்டுவதுதான் சிரமம். அதற்கு ஆயிரக்கணக்கான படிகளில் மூச்சுவாங்க நடந்து மலை ஏற வேண்டியிருக்கும். கிட்டிய புகழை இழப்பது மலை உச்சியில் இருந்து கீழே குதிப்பதுபோல, ரொம்பச் சுலபம். ஜஸ்ட் ஒரு வருடத்துக்கான நாளிதழ்களை அடுக்கிவைத்துப் புரட்டுங்கள். அதலபாதாளத்தில் குதித்தவர்களைப்பற்றி பெரிய 'லிஸ்ட்'டே தயாரிக்க முடியும்!

டி.சி.சண்முகசுந்தரம், வெள்ளோடு.

கராத்தே, குங்ஃபூ, சிலம்பம் இவற்றில் மதன் எதில் தேர்ச்சி பெற்றுள்ளார்?

நக்கலா? எதில் எல்லாம் நான் 'தேர்ச்சி' பெறணும்னு ஒரு வரைமுறை கிடையாதா? என்னைப் பார்த்தால் கராத்தே, குங்ஃபூ கத்துக்கிட்டவன் மாதிரியா தெரியுது?! ஆனா, ஆச்சர்யப்படுவீங்க... 16 வயசுல, மெரினாவுல ஒரு லோக்கல் தாதாகிட்ட நான் சிலம்பம் கத்துக்கிட்டேன். அப்பல்லாம் தப்பு பண்ணா எங்க நைனா (அதான், அப்பா!) துரத்திட்டு வந்து நாலு சாத்து சாத்துவாரு. கையை ஓங்கிக்கிட்டு அவர் எங்கிட்ட வந்தா, உடனே சிலம்பம் சுத்த ஆரம்பிச்சுடலாம்னு அபத்தமா முடிவு பண்ணி கொஞ்சூண்டு கத்துக்கிட்டேன். ஆனா, அப்பா எப்பத் துரத்துவாரோன்னு தெரியாம, கையில கம்புவெச்சுக்கிட்டே எப்படி அலையறது? சரிப்படலை! சிலம்பம், சைக்கிள் விடுற மாதிரிதான். ஒரு தடவை கத்துக்கிட்டா மறக்காது. அதாவது, இப்பக்கூட என் உடம்பு மேலே பட்டுக்காம, என்னால வேகமா சிலம்பம் சுத்த முடியும் சண்மு!

பொன்விழி, அன்னூர்.

எந்த விலங்கு குட்டியாக இருக்கும்போது மிகவும் அழகாக இருக்கும்?

குட்டிக்கு என்ன வயசு? பிறந்த சில மாதங்களில் என்றால் மாமிசப் பட்சிணிக் குட்டிகள்தான் அழகு. குழந்தைகளை நாம் ஆட்டுக் குட்டி, மாட்டுக் குட்டி என்று சொல்வது இல்லை. 'சிங்கக் குட்டி' என்றுதானே வர்ணிக்கிறோம்!

எஸ்.ஜெயகாந்தன், புன்செய்ப்புளியம்பட்டி.

மறத்தல் - மன்னித்தல்... எது சிறந்தது?

மன்னித்தல்தான் சிறந்தது. ராமர்கூட (புராண) ராவணனிடம் 'குற்றத்தை உணர்ந்து திருந்து, மன்னித்துவிடுகிறேன்!' என்றுதான் சொன்னார். 'எதிரியை மன்னித்துவிடு. ஆனால், அவர் பெயரை மறக்காதே!' என்று ஓர் அரேபியப் பழமொழி உண்டு. மறக்க முடியாது. அது உங்கள் கன்ட்ரோலில் இல்லை. 'மன்னிப்பு' என்கிற வார்த்தையே பிடிக்காதவர் விஜயகாந்த் மட்டுமே!

இவ்வுலகில் காதல் என்ற ஒன்று இல்லை என்றால்?

எந்தக் குட்டி அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்

ஒண்ணும் குடி(த்தனம்) முழுகியிருக்காது!

பல லட்சம் வருடங்களாக மனிதன் காதல் என்பது (அதாவது நீங்கள் குறிப்பிடுகிற தெய்விகமான, கவித்துவமான காதல்!) இல்லாமல்தான் வாழ்ந்து, இனப் பெருக்கம் மட்டுமே பிரமாண்ட அளவில் நிகழ்ந்தது. 'உனக்காக நான்!' என்று மெய் மறக்கிற காதல் என்பது வந்து சுமார் 10 ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்குமா? நிச்சயமாத் தெரியலை!

ஜே.டி.புவனேஷ்வரி, சென்னை.

24 மணி நேரம் ரேடியோ, டி.வி, இன்டர்நெட் என்று மாறிவரும் நேரத்தில், அதிகாலையில் எழுந்து செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இன்றும் குறையவில்லையே, ஏன்?

எந்தக் குட்டி அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்

அதுவா? அதான்... 'காலையில் எழுந்தவுடன் படிப்பு!' என்று பாரதியார் சொன்னார் இல்லையா? அவர் சொல்பேச்சுக் கேட்க வேண்டாமா? புத்தகம், அல்லது பேப்பரில் வரும் எழுத்துக்களைப் படிப்பது என்பது எல்.கே.ஜி-யில் இருந்து நம் ரத்தத்தில் ஊறிப்போன பழக்கம். நமக்குத் தெரிந்த மொழி... அதன் எழுத்துக்களைப் படித்துப் புரிந்துகொள்வது என்பது நிம்மதியைத் தரும் அலாதியான ஒரு விஷயம். ஆகவேதான் மற்றவர் யாராவது எதையாவது 'படிக்கிறேன்' என்றால் உடனே 'இல்லை... நானே படிச்சுக்கறேன்' என்று கையில் வாங்கிக்கொண்டுவிடுகிறோம்!

தேவசேனாதிபதி, வேலூர்.

ஏற்பது இகழ்ச்சி! - எதை?

அன்பைத் தவிர, எதையும்

எந்தக் குட்டி அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்
எந்தக் குட்டி அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்