Published:Updated:

டீன் கொஸ்டீன் : பெண்களிடம் பேசக் கூச்சமா?

டீன் கொஸ்டீன் : பெண்களிடம் பேசக் கூச்சமா?


டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன் : பெண்களிடம் பேசக் கூச்சமா?
டீன் கொஸ்டீன் : பெண்களிடம் பேசக் கூச்சமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பெண்களிடம் பேசக் கூச்சமா?
டீன் கொஸ்டீன் : பெண்களிடம் பேசக் கூச்சமா?

வி.சண்முகம், சென்னை-91.

"ஹோட்டல்களில் எம்.ஆர்.பி. ரேட் ரூ.9, மற்றும் ரூ.20 என்று லேபிளில் பொறிக்கப்பட்ட குளிர்பானங்களுக்கு 10 முதல் 15 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். யாரிடம் புகார் அளிப்பது?"

ராஜாராமன் ஐ.ஏ.எஸ்.,
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்புத் துறை ஆணையர்.

"நிச்சயம் எம்.ஆர்.பி. கட்டணத்தைவிட அதிக விலைக்குப் பொருட்களை விற்கக் கூடாது. 'பேக்கேஜ் கமாடிட்டிஸ்' சட்டப்படி அது குற்றம். அப்படி விற்பவர்கள் மீது

டீன் கொஸ்டீன் : பெண்களிடம் பேசக் கூச்சமா?

பொருட்கள் எடை மற்றும் அளவுச் சட்டத் தின் கீழ் புகார் அளிக்கலாம் அல்லது நுகர் வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிலாளர் நல அலுவலர் என்று ஒருவர் இருப்பார். அவரிடம் நீங்கள் புகார் அளிக்கலாம். மாநில அளவில் தொழிலாளர் நலத் துறையில், Controller of Legal Metrology (Weights - Measures) என்ற அதிகாரி இருக்கிறார். அவரிடமும் புகார் செய்யலாம். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர, மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் மனு செய்யலாம். அதன் மூலம், உங்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறலாம்!"

கே.குமரன், மதுரை-4.

"நான் எல்.ஐ.சி. இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு ஈ.சி.எஸ். மூலம் என் வங்கிக் கணக்கில் இருந்து மாதாமாதம் பணம் எடுத்துக்கொள்ளும்படி சொல்லிஇருந்தேன். கடந்த இரண்டு மாதங்களாக எனது வங்கிக் கணக்கில் பணம் வைத்திருக்க முடியவில்லை. இதனால், எல்.ஐ.சி தவணைக்குப் பணம் செலுத்த முடியவில்லை. இதனால், செக் பவுன்ஸ் செய்பவர்களின் பெயர் இடம் பெறும் சிபல் பட்டியலில் என் பெயர் இடம் பெறுமா?"

ஆர்.கணேசன். முதன்மை மேலாளர்,
பஞ்சாப் நேஷனல் வங்கி.

டீன் கொஸ்டீன் : பெண்களிடம் பேசக் கூச்சமா?

"எல்.ஐ.சி. இன்ஷூரன்ஸ், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் போன்றவை சேமிப்பு வகையில் அடங்குபவை. இதற் கெனச் செலுத்தப்படும் தவணைகள் தவறி னால், சிபல் பட்டியலில் உங்கள் பெயர் சேராது. கவலை வேண்டாம். ஆனால், அந்தச் சேமிப்புத் திட்டங்களின் முழுப் பலனும் உங்களுக்குக் கிடைக்காமல் போகக்கூடும். வாகனங்கள், வீட்டுக் கடன் போன்றவற்றின் தவணைகளை நீங்கள் செலுத்தவில்லை என்றால்தான் சிபல் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறும்!"

எஸ்.பாபு, பட்டுக்கோட்டை.

"எனக்கு 26 வயதாகிறது. என் பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர். எனக்கு ஒரு தம்பியும், தங்கையும் உள்ளனர். அவர்களை நான்தான் கவனித்துக்கொள்கிறேன். தங்கையை இந்த ஆண்டு கல்லூரியில் சேர்க்க உள்ளேன். ஆனால், அந்தச் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு எனக்கு வருமானம் இல்லை. பெற்றோரை இழந்தவர்களுக்கு அரசு ஏதாவது உதவி வழங்குகிறதா?"

எம்.எஸ்.சண்முகம், ஐ.ஏ.எஸ்.,
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்.

டீன் கொஸ்டீன் : பெண்களிடம் பேசக் கூச்சமா?

"பள்ளிக் கல்வியென்றால், பெற்றோரை இழந்தவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறையே இலவசக் கல்வி அளிக்கிறது. தொழிற்கல்வியில் சேர்ப்பதாக இருந்தால், கல்லூரிக்குச் செல்லும் முதல் தலைமுறையினருக்கு டியூஷன் ஃபீஸ் முழுவதையும் அரசே செலுத்தும். கலை, அறிவியல், தொழிற்கல்வி என எதுவாக இருந்தாலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்களுக்கு எனப் பிரத்யேக ஸ்காலர்ஷிப் அளிக்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பித்தால், உங்கள் தங்கைக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும்!"

வி.நாகராஜன், திருச்சி-20.

டீன் கொஸ்டீன் : பெண்களிடம் பேசக் கூச்சமா?

"நான் ஒரு கல்லூரி மாணவன். எனக்குத் தயக்கம், பயம் எல்லாம் கிடையாது. ஆனால், பெண்களிடம் சென்று வலியப் பேசவோ, அவசியமான தகவல் தொடர்புகள் மேற்கொள்ளவோகூடத் தடுமாறுகிறேன். எல்லா பெண்களும் என்னைப் புறக்கணிப்பதுபோலவும், அருவருப்பாகப் பார்ப்பதுபோலவும் தோன்றுகிறது. ஏன் இப்படி? இதில் இருந்து நான் எப்படி மீள்வது?"

செந்தில் வேலன், மனநல மருத்துவர்.

டீன் கொஸ்டீன் : பெண்களிடம் பேசக் கூச்சமா?

"வளர் இளம் பருவத்தில் இந்தப் பிரச்னை உண்டாவது இயற்கைதான். இதை ஒரு கோளாறாகவோ, நோயாகவோ பார்க்கத் தேவையில்லை. மற்றவர்களிடம் கலகலவெனச் சிரித்துப் பேசும் குணம்கொண்டவர்களை 'எக்ஸ்ட்ரோவர்ட்ஸ்' (extroverts) என்பார்கள். அவர்கள் ஆண், பெண், அறிந்தவர், தெரிந்தவர் என எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரிடமும் இயல்பாகப் பழகுவார்கள். இதற்கு நேர்மறையாக, கூச்ச சுபாவம் நிரம்பியவர்களை நாம் 'இன்ட்ரோவர்ட்ஸ்' (introverts) என்போம். பல சமயங்களில் நமது கலாசார, சமூக அமைப்பும் இதற்குப் பின்னணியாக அமைவது உண்டு. ஓர் ஆணும் பெண்ணும் தனியாகப் பேசினால் தவறு என்பது மிகவும் சின்ன வயதிலேயே ஒருவரது மனதில் பதியவைக்கப்படுகிறது. அந்தப் பயத்தினால்கூட உங்களால் பெண்களிடத்தில் சரியாகப் பேச முடியாமல் இருக்கலாம். நீங்கள் ஏதேனும் தவறாகப் பேசினாலோ அல்லது ஜொள்ளுப் பேர்வழியாக இருந்தாலோதான் பெண்கள் உங்களைப் புறக்கணிப்பார்கள். மனதில் விகல்பம் இல்லாதவர்களைப் பெண்கள் எளிதில் கண்டுகொள்வார்கள். அதனால், முழு நேர்மையுடன் ஆண்களிடம் எந்த மனப்பாங்குடன் பழகுகிறீர்களோ அதே தொனியுடன் பெண்களிடமும் பழகுங்கள். முதல் சில முயற்சிகளுக்குப் பிறகு, இந்தச் சிக்கலில் இருந்து நீங்கள் எளிதில் மீண்டு விடு வீர்கள்!"

டீன் கொஸ்டீன் : பெண்களிடம் பேசக் கூச்சமா?
டீன் கொஸ்டீன் : பெண்களிடம் பேசக் கூச்சமா?
டீன் கொஸ்டீன் : பெண்களிடம் பேசக் கூச்சமா?