Published:Updated:

'செட்டில்' ஆவது எப்படி? - ஹாய் மதன்-கேள்வி பதில்

'செட்டில்' ஆவது எப்படி? - ஹாய் மதன்-கேள்வி பதில்


ஹாய் மதன் - கேள்வி பதில்
'செட்டில்' ஆவது எப்படி? - ஹாய் மதன்-கேள்வி பதில்
'செட்டில்' ஆவது எப்படி? - ஹாய் மதன்-கேள்வி பதில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'செட்டில்' ஆவது எப்படி?
'செட்டில்' ஆவது எப்படி? - ஹாய் மதன்-கேள்வி பதில்

அனன்யா, உய்யக்கொண்டான் திருமலை.

ஒரு காரின் பின் கண்ணாடியில், 'MY BOSS IS A JEWISH CARPENTER' என எழுதியிருந்ததைப் பார்த்தேன்; அதன் அர்த்தம் என்ன என்று சொல்லுங்களேன்?

தச்சுக் (Carpenter) குடும்பத்தைச் சேர்ந்த 'இறைவனின் மகன்' (Son of God) யார்? ஜீசஸ் என்று அர்த்தம்!

எஸ்.ஜெயகாந்தன், புன்செய்ப்புளியம்பட்டி.

'செட்டில்' ஆவது எப்படி? - ஹாய் மதன்-கேள்வி பதில்

நம் நாட்டில் ஊழல்கள் கண்டுபிடிக்கப்படுவதுடன் சரி. தண்டிக்கப்படுவது இல்லையே, ஏன் சார்?

ஏழை கிளார்க் ஆக இருந்தால்தான் தண்டிக்கப்படுவார். ரொம்பப் பெரிய 'தலை'களாக இருந்தால், ஊழலைக் கண்டுபிடித்தாலே தண்டிக்கப்பட்ட மாதிரிதான் என்று மேலிடங்களில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. பெரிய பதவி கிடைத்துவிட்டால், நீங்கள் ஊழலே பண்ண வேண்டாம். ஊழல் பணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு மழைபோலக் கொட்டும். நீங்கள் பெரிய கூடை ஒன்றைக் கீழே வைத்துவிட்டால் போதும்!

விஜயலட்சுமி, சென்னை-74

மனைவியை ராணி மாதிரி வைத்திருப்பவர் ராஜா மாதிரி இருக்க வேண்டுமா... சேவகன் மாதிரி இருக்க வேண்டுமா?

கணவன் சேவகம் செய்தால் மனைவி ராணி மாதிரி உணர்வாள் என்பது உண்மையே. ராஜா மாதிரி என்றால்? அப்போது நிஜமாகவே மனைவி ராணிதான். ஆனால், 100 மனைவிகளில் அவளும் ஒருத்தி. ராணிக்குப் பரவாயில்லை என்றால் ஓ.கே!

வி.எஸ்.சுதர்சனம், நங்கநல்லூர்.

டென்னிஸ் விளையாட்டில் கலப்பு இரட்டையர் என்ற பிரிவு இருப்பதுபோல, கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் ஆண்கள், பெண்கள் இருவரும் கலந்து விளையாடுவது இல்லையே, ஏன்?

எதிர்காலத்தில் அப்படி நடந்தால், முதன்முதலில் இந்த ஐடியா தரப்பட்டது 'ஹாய் மதன்' பகுதியில்தான் என்று கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடுவார்கள். இந்த ஒரே காரணத்துக்காக உங்கள் கேள்வியை இங்கே வெளியிட்டு இருக்கிறேன்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

யானைகள் புத்திசாலி மிருகங்கள்தானே... பிறகு, எப்படி ரயிலில் அடிபட்டுச் சாகின்றன?

'செட்டில்' ஆவது எப்படி? - ஹாய் மதன்-கேள்வி பதில்

அண்மையில், படித்த கணவனும் மனைவியும் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்தார்கள். மனிதர்கள்கூட 'ரயில் தொலைவில்தான் இருக்கிறது. க்ராஸ் பண்ணிவிடலாம்!' என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் ரயில் மிக அருகே வந்துவிடும். அதன் வேகத்தை 'ஜட்ஜ்' செய்வது கடினமானது. ஆகவேதான் தண்டவாளத்தை க்ராஸ் பண்ணவே கூடாது. பண்ணினாலும் ரொம்ப எச்சரிக்கை தேவை. யானை, மனிதன் அளவுக்குப் புத்திசாலி இல்லை!

மேகார்ஸ் புஷ்பராஜ், கடலூர்-1.

'லைஃப்ல செட்டில் ஆயிட்டியா?'ன்னு கேட்கிறார்களே. ஒரு மனிதனுக்கு எதைவைத்து இதனை நிர்ணயம் செய்கிறார்கள்?

அது ஆளாளுக்கு வேறுபடும். மனைவி நம்மைப்பார்த்து இப்படிக் கேட்டால், 'சாப்பாட்டைக் கொட்டிக்கொண்டு படுக்கையிலே சாய்ந்தாச்சா? கூடமாட ஒத்தாசை செய்யறதுக்குப் பதில் தூங்கப்போறீங்களாக்கும்?!' என்று அர்த்தம். ரௌடியிடம் இப்படிக் கேட்டால், 'ஒரு வழியா பணம் சேர்த்து 'தாதா'வாயிட்டியா?' என்று பொருள். 'தாதா'விடம் கேட்டால், 'அப்படி இப்படின்னு அரசியல் தலைவராகியாச்சுபோல?!' என்று அர்த்தம். சாமியாரிடம் கேட்டால், 'ஊர் ஊரா சுத்தறதை நிறுத்திட்டு, ஜோரா ஒரு ஆசிரமம் கட்டிக்கிட்டுப் பக்தைகள் சூழ நிம்மதியா இருக்க ஆரம்பிச்சாச்சா?!' என்று அர்த்தம்!

'செட்டில்' ஆவது எப்படி? - ஹாய் மதன்-கேள்வி பதில்

எது எதுக்கோ மெஷின் கண்டுபிடித்து இருக்கும் நம் ஆட்கள், பெண்கள் பூ கட்டுவதற்கு இன்னும் ஒரு மெஷின் கண்டுபிடிக்கவில்லையே?

எனக்குத் தெரிஞ்சவரைக்கும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், இது ரொம்ப நல்ல ஐடியா. நீங்களே ஏன், ஒரு 'பூத்தையல் மெஷி'னைக் கண்டுபிடித்து மேதாவி 'புஷ்ப'ராஜ் ஆகக் கூடாது?! தயாரித்தவுடன் சொல்லுங்கள். விகடன் நிருபரை அனுப்புகிறோம்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

இதழோடு இதழ் பதித்து தேன் குடிக்கணும் என்கிறார்கள். சே! அங்கே தேன் இருக்குமா மதன் சார்?

காதலர்களைக் கேட்டுப்பாருங்கள். உலகத்தில் உள்ள எந்தத் தேனும் இதற்கு இணை இல்லை என்பார்கள்!

பெ.வேலுமணி, நாராயணபாளையம்.

போலிகளே இல்லாத துறை ஏதேனும் உண்டா?

தாய்ப்பால்!

'செட்டில்' ஆவது எப்படி? - ஹாய் மதன்-கேள்வி பதில்

விஜயலட்சுமி முருகேசன், சென்னை-74.

ஒரே முடிதான் - உதட்டுக்கு மேல் இருந்தால் மீசை; உதட்டுக்குக் கீழ் இருந்தால் தாடி. ஏன் இப்படிப் பெயர் பெற்று இருக்கிறது?

சரிதான்! தாடையில் இருப்பதால் தாடி. மூக்கின் கீழ் இருப்பதால் 'மூசை' என்று தானே இருக்க வேண்டும். ஏன் 'மீ'?!

ஒரு சிரிப்பு எப்போது இளிப்பாக மாறுகிறது?

சிரிக்கும்போது, பாதி தூரத்தில், அடிக்கப்பட்ட ஜோக் நம்மைப்பற்றி என்பது புரியும்போது!

'செட்டில்' ஆவது எப்படி? - ஹாய் மதன்-கேள்வி பதில்
'செட்டில்' ஆவது எப்படி? - ஹாய் மதன்-கேள்வி பதில்