Published:Updated:

ஒரு காபி 230 ரூபாய்

ஒரு காபி 230 ரூபாய்

ஒரு காபி 230 ரூபாய்

ஒரு காபி 230 ரூபாய்

Published:Updated:

உணவு விகடன்
ஒரு காபி 230 ரூபாய்
ஒரு காபி 230 ரூபாய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு காபி 230 ரூபாய்!
ஒரு காபி 230 ரூபாய்
யா.நபீசா பா.கந்தகுமார்

ஒரு காபி 230 ரூபாய்

''உள்ளூரில் உலக ஹோட்டல்கள் வேண்டுமா? திருவண்ணாமலைக்கு வாருங்கள்! திருவண்ணாமலையில் வெளிநாட் டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ரமணர் ஆசிரமத்தைச் சுற்றி உள்ள ஹோட்டல்களில் நுழைந்தால், இந்தியா மறந்துபோகும். ''ஷக்ஷ§கா, லஜானியா, ஸ்பகடி, டோஃபு, கூமுஸ், கம்புசா, ரெட் ரைஸ், ஃப்ரைடு ஜுங்கினி என்று விநோதமாக நீள்கிறது மெனுகார்டு. இதில் ஸ்பகடி, டோஃபு

கோதுமை மாவையும், பச்சைக் காய்கறிகளையும் கலந்து செய்யப்படும் அரேபிய நாட்டு உணவு வகைகள். கம்புசா, லஜானியா, ஷக்ஷ§கா போன்றவை இத்தாலி மற்றும் ஜெர்மன் ஸ்டைல் உணவுகள். மஸ்ரூம், பன்னீர், காரட் இவற்றோடு உப்பு சேர்த்து இவற்றை உருவாக்குகிறார்கள். இங்கே கொடுக்கப் படும் எந்த உணவிலும் காரம் கிடையாது. காரம் அவர்களுக்கு பாரம் ஆயிற்றே!

ஒரு காபி 230 ரூபாய்

இந்த ஹோட்டல்களில் உணவுப்பொருட் களின் குறைந்தபட்ச ரேட்டே 500 ரூபாய். ஜஸ்ட் காபி குடிக்க வேண்டுமென்றால்கூட 230 ரூபாய் கொடுக்க வேண்டும். க்ரீன் டீ, ரெட் டீ என்று டீயை கலர் பிரித்து காசு பார்க்கிறார்கள்.

வார இறுதியில் டிஸ்கொதே பார்ட்டிகளும் உண்டு. முன்பே

ஒரு காபி 230 ரூபாய்

சொல்லிவிட்டால், பார்ட்டியில் உங்களுக்குப் பிடித்த உணவுகளை கொண்டுவந்து அசத்துவார்கள். நீங்கள் ஆடத் தெரியாத அம்மாஞ்சி என்றால் மாட்டு வண்டியில் ஏற்றிவிடு வார்கள். திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு டிரிப் அடிக்கலாம். டென்ட் போடலாம். கூழ் குடிக்கலாம். வேட்டி உடுத்தி அவிழ அவிழ நடக்கலாம்.

எல்லாத்துக்கும் துட்டு!

ஒரு காபி 230 ரூபாய்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism