Published:Updated:

கற்கண்டு பால்... மண்பானைச் சோறு

கற்கண்டு பால்... மண்பானைச் சோறு

கற்கண்டு பால்... மண்பானைச் சோறு

கற்கண்டு பால்... மண்பானைச் சோறு

Published:Updated:

உணவு விகடன்
கற்கண்டு பால்... மண்பானைச் சோறு
கற்கண்டு பால்... மண்பானைச் சோறு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கற்கண்டு பால்... மண்பானைச் சோறு
கற்கண்டு பால்... மண்பானைச் சோறு
ஆண்டனிராஜ் எல்.ராஜேந்திரன்

கற்கண்டு பால்... மண்பானைச் சோறு

நெல்லையில் 'அல்வா' மட்டும் இல்லை. அதையும் தாண்டி இருக்கிறது ஆயிரம் சுவை!

வைர மாளிகை புரோட்டா ஸ்டால். இதன் நாட்டுக்கோழி சிக்கனும் புரோட்டாவும் இணைந்த கலவை தென் மாவட்டங்களில் செம ஹிட். தலைவாழை இலையில் பொறித்த நாட்டுக் கோழியை சைடு டிஷ்ஷாக(?!) புரோட்டாவை வைத்துச் சிலர் சாப்பிடுவதே தனி அழகு. இரவு நேரத்தில் சாப்பிட வந்தால், உட்காரவே இடம் இருக்காது.

''எங்க கடையில நாட்டுக் கோழியை மட்டுமே விற்கிறோம். சில நேரம் நாட்டுக் கோழிக்கு உள்ளூரில் தட்டுப்பாடு வந்தால் மதுரை, திருச்சி பகுதிக் கிராமங்களுக்குப் போய் வாங்கிட்டு வருவோம். நாட்டுக் கோழியைத்தேங்காய் எண்ணெய் யில்

கற்கண்டு பால்... மண்பானைச் சோறு

பொறிப்பதுதான் எங்க ஸ்பெஷாலிட்டி. ஆனா, எங்க கடை சிக்கனோட தனிச் சுவைக்குக் காரணம் நாங்க பயன்படுத்தும் மசாலா. அதை வெளியில் சொல்ல முடியாது. கடை ஆரம்பிச்சதில் இருந்து இப்போ வரை எங்க அம்மாதான் வீட்டில் மசாலா அரைச்சுக் கொடுக்கிறாங்க. அதில் என்னென்ன கலந்திருக்குன்னு

எங்க கடை மாஸ்டருக்கே தெரியாது. புதுசா வர்ற சில கஸ்டமர்கள் ருசியில் மயங்கி ஒரே நேரத்தில் 10 சிக்கன்கூட ஆர்டர் பண்ணுவாங்க'' என்கிற வைர மாளிகை உரிமையாளர் அப்துல் நியாஸ், ''நெல்லைக்கு வரும் அரசியல் புள்ளிகள், நடிகர், நடிகைகள் எல்லோருக்கும் நம்ம கடையில் இருந்து கட்டாயம் பார்சல் போகும்'' என்கிறார், பூரிப்புடன்!

கற்கண்டு பால்... மண்பானைச் சோறு

உடன்குடி 'சில்லு கருப்பட்டி'! உலகம் முழுக்க இதற்குத் தனி செல்வாக்கு. குறிப்பாக, தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் இந்தக் கருப்பட்டி விற்பனை அமோகம். பனையில் இருந்து கிடைக்கும் பதநீரை மிகப் பெரிய அண்டாவில் ஊற்றிச் சூடாக்கும்போது மெள்ள கெட்டியாகிக்கொண்டே வரும். சரியான பருவத்தில் அதனை எடுத்து தேங்காய் சிரட்டையில் ஊற்றிக் காயவைத்தால், கருப்பட்டி ரெடி. பதநீரில் இஞ்சி, ஏலக்காய் ஆகியவை சேர்த்து காய்ச்சினால், அது சில்லுக் கருப்பட்டி. சிறியச் சிறிய சில்லுகளாக இதனைக் காயவைத்து எடுத்து பனை ஓலையில் செய்யப்பட்ட சிறிய பெட்டிகளில் அடைத்து கடைகளில் விற்கிறார்கள். சுவையுடன் சேர்ந்த மருத்துவக் குணம் இதன் தனிச் சிறப்பு.

பனங்கற்கண்டு: பதநீரை வாணலியில் ஊற்றிச் சூடாக்கும்போது கலக்கிக்கொண்டே இருந்தால், நுரை பொங்கி நிற்கும். உடனே இறக்கி பாத்திரத்தைக் காற்றுப் புகாத அளவுக்கு மூடி மணலுக்குள் புதைத்துவிட வேண்டும். சில நாட்கள் கழித்து

கற்கண்டு பால்... மண்பானைச் சோறு

எடுத்தால், பாத்திரம் முழுவதும் நுரைத்திருந்த பதநீர் மொருமொருவென இருக்கும். அதுதான் 'பனங்கற்கண்டு'. உடலுக்கு நல்லது என்பதால், உடன்குடி பக்கம் போனால் மறக்காதீங்க!

இந்த ஃபாஸ்ட்புட் கலாசாரம் இல்லாத பழங்காலத்தில் மண் பானையில்தானே சமைத்தோம். அதை இப்போதும் கடை பிடிக்கின்றனர் நெல்லை அரசன் மெஸ்ஸில். வாடிக்கையாளர்கள் நேரில் பார்க்கும் வகையில், விறகு அடுப்பு மூலம் மண் பானையில் சாப்பாடு, கூட்டு, குழம்பு எல்லாம் தயாராகிறது. இந்த ருசிக்காகவே இந்த சிறிய மெஸ்ஸில் கூட்டம் அலைமோதுகிறது!

கற்கண்டு பால்... மண்பானைச் சோறு
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism