சாப்பாடு விஷயத்தில் எப்போதும் நம்பர் ஒன் மதுரைக்காரய்ங்கதான்!
தோசையைக் கறியிலும் செய்யலாம் என்று ஐடியா பிடித்து அசத்திக்கொண்டு
இருக்கிறது கோனார் கடை. இந்தக் கடையில் தோசை ஊற்றுவதைத் தவிரமாஸ்டருக்கு வேறு எந்த வேலையும் இல்லை. சிக்கன், மட்டன் எல்லாமே வீட்டிலேயே ரெடி பண்ணிக் கொண்டுவந்து விடுகிறார்கள்.
தோசை மாவை ஊற்றி, அதன் மேல் கறிக்குழம்பு, முட்டை, சுக்கா என்று ஒன்றின் மேல் ஒன்றாக பீட்ஸா போல் பதமாக அடுக்குகிறார்கள். தொட்டுக்கொள்ள ஒன்பது வகை அசைவக் குழம்புகள். 65 ரூபாய் கொடுத்து ஒரு தோசை வாங்கிச் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும். டைரக்டர் ஷங்கர் முதல், காமெடி ஆக்டர் மயில்சாமி வரை இங்கே குடும்பத்தோடு வரும் சினிமா பிரபலங்களின் எண்ணிக்கை மிக அதிகம்!
|