தூத்துக்குடியின் சுவை, உப்பு அல்ல... மக்ரூன்!
சோனியா காந்தி உட்பட மக்ரூனின் வாடிக்கையாளர் பட்டியல் அதிகம். இப்போது
கடல் கடந்து கனடா, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆக ஆரம்பித்திருக்கிறது மக்ரூன்.
மக்ரூன் தயாரிப்புத் தொழிலில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம்கொண்டவர் 'சாந்தி பேக்கரி' ஸ்ரீதர். இவர் கடையில் எந்நேரமும் மக்ரூன் வாங்க கூட் டம் கும்மியடிக்கும். ''முதலில் சீனி மிட்டாய்தான் வித்துட்டு இருந்தோம். அதோட கரெக்டான அளவு முந்திரி பருப்பு சேர்த்தபோது, மக்ரூன் கிடைச்சது. ஒரு கிலோ 400 ரூபாய் வரைக்கும் விற்கிறோம். வெளி மாவட்டங் களிலும் நிறையப் பேர் மக்ரூன் செய்ய முயற்சி பண்ணிப் பார்த்தாங்க. சுவை அமையலை. அதனால், தூத்துக்குடி மாஸ்டர் களுக்கு நிறையச் சம்பளம் கொடுத்து வேலைக்குக் கூட்டிட்டு போறாங்க. ஆனாலும் தூத்துக்குடி சுவையை அவங்களால் கொண்டு வர முடியலை. தரமான மூலப் பொருட்கள்தான் மக்ரூன் சுவையின் ரகசியம். கொஞ்சம் அலட்சியமா இருந்தாலும், டேஸ்ட் கெட்டுடும். அதனால ஒவ்வொரு ஸ்டேஜிலும் |