Published:Updated:

சாத்தூர் ஸ்பேஷல் நயஞ்சேவு

சாத்தூர் ஸ்பேஷல் நயஞ்சேவு

சாத்தூர் ஸ்பேஷல் நயஞ்சேவு

சாத்தூர் ஸ்பேஷல் நயஞ்சேவு

Published:Updated:

உணவு விகடன்
சாத்தூர் ஸ்பேஷல் நயஞ்சேவு
சாத்தூர் ஸ்பேஷல் நயஞ்சேவு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாத்தூர் ஸ்பேஷல் நயஞ்சேவு
சாத்தூர் ஸ்பேஷல் நயஞ்சேவு
இரா.கோகுல் ரமணன் ஈ.ஜெ.நந்தக்குமார்

சாத்தூர் ஸ்பேஷல் நயஞ்சேவு

திருநெல்வேலி அல்வா, திருப்பதி லட்டு, மணப்பாறை முறுக்கு வரிசையில் அடுத்த இடம்... சாத்தூர் சேவு. சாத்தூரில் உள்ள சண்முக விலாஸின் உரிமை யாளர் தாமரைக்கண்ணன் தங்களுடைய பாரம்பரிய ஊர்ப் பெருமையைச் சொன்னார். ''சாத்தூரில் மிளகா வத்தல் விளைச்சல் அதிகமா இருக்கும். அதனால், காரத்துக்குப் பிரபலம். அப்படி வந்ததுதான் காரச்சேவு. அப்புறம் சக்கரைச்சேவு, நடப்புச்சேவு, நயஞ்சேவு, ஓமச்சேவு, சீரகச்சேவு, மிளகுச்சேவுனு ஏகப்பட்ட வெரைட்டிகள். மத்த இடங்களில் எல்லாம் சேவு, மிச்சரு, பக்கடா, காரப் பூந்தினு எல்லா

அயிட்டங்களையும் ஒரே எண்ணெய்யில் ஒரு வாரம் சுட்டு எடுப்பாங்க. அதனால், அதெல்லாம் நாலு நாளைக்கு மேல் தாங்காது.

நாங்க சேவுக்குச் சுட ஒரு தடவை பயன்படுத்திய எண்ணெயை இன்னொரு முறை பயன்படுத்த மாட்டோம். அதனால், சேவு ரொம்ப நாளைக்குக் கெட்டுப் போகாது. மொறுமொறுப்பும் குறையாது. கடலை மாவோடு மொறுமொறுப்புக்கு கொஞ்சம்

சாத்தூர் ஸ்பேஷல் நயஞ்சேவு

அரிசி மாவு சேர்த்து வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், உப்பும் கலந்து சேவு செய்வோம். மிளகு அதிகமாச் சேர்த்தா, அது மிளகு சேவு. சீரகம் அதிகமாச் சேர்த்தா, சீரகச் சேவு. ஓமம் அதிகமாச் சேர்த்தா, ஓமச் சேவு. மிளகாய்ப் பொடி அதிகமாச் சேர்த்தா, அது காரச் சேவு.

சாத்தூர் ஸ்பேஷல் நயஞ்சேவு

இதையெல்லாம்விட நயஞ்சேவுக்குதான் மவுசு ஜாஸ்தி. இனிப்பாவும் இருக்காது. அதிகக் காரமாவும் இருக்காது. வாய்க்கு ருசியான பதத்தில் இருக்கும். அதுக்கு மயங்கி வர்ற மக்கள்தான் அதிகம். சாத்தூரில் செய்யும் சீனி மிட்டாயும் கருப்பட்டி மிட்டாயும் ரொம்பப் பிரபலம். காலையில் ஒரு தட்டு அடுக்கிவெச்சா, சாயங்காலம் நாலு மணிக்குள் காலி ஆகிடும். சுத்தமா, சுவையாக் கொடுத்தா, எந்த விளம்பரமும் தேவை இல்லை. அதுக்கு நாங்களே சாட்சி!'' பூரிப்பாகச் சிரிக்கிறார் தாமரைக்கண்ணன்.

சாத்தூர் ஸ்பேஷல் நயஞ்சேவு
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism