எட்டுத் திக்கும் சுண்டி இழுக்கும் சுவை, செட்டிநாட்டு சிக்கனின் ஸ்பெஷல். ஊருக்கு ஊர் செட்டி நாட்டு சிக்கன் கடை கள் இருந்தாலும் காரைக்குடியில் இருக்கும் ப்ரியா மெஸ் பிரபலம். காரணம் அதன் பாரம்பரியம்.
42 வருடங்களுக்கு முன்னால் சிறிய கடையாக ஆரம்பிக்கப்பட்டது இந்த மெஸ். கை ருசி வேண்டும் என்பதற்காக மசாலா பொருட்களை அவர்களே கையால் அரைத்து சிக்கன் செய்தார்கள். ருசி மாறிவிடக் கூடாது என்பதற்காக இன்று வரை மசாலாவைக் கையால் அரைக்கிறார்கள். வீட்டிலேயே சமைத்து எடுத்து வருவதால் மாறாமல் இருக்கிறது ருசி. தமிழ்நாட்டுக்கே தெரிந்த இடமாகிவிட்டாலும், பழைய இடத்தைவிட்டு மாறாமல் இருக்கிறார்கள். அதிகப்பட்சமாக ஒரு நேரத்தில் 12 பேர்தான் அமர்ந்து சாப்பிட முடியும். எப்போதும், வெளியே காத்துக்கொண்டே இருக்கிறது ஒரு கூட்டம்.
|