Published:Updated:

சொக்க வைக்கும் சொதி

சொக்க வைக்கும் சொதி

சொக்க வைக்கும் சொதி

சொக்க வைக்கும் சொதி

Published:Updated:

உணவு விகடன்
சொக்க வைக்கும் சொதி
சொக்க வைக்கும் சொதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொக்க வைக்கும் சொதி
சொக்க வைக்கும் சொதி
ஆண்டனிராஜ் எல்.ராஜேந்திரன்

சொக்க வைக்கும் சொதி

திருநெல்வேலி சொதி கேள்விப்பட்டது உண்டா? இது நெல்லைக்கே உரித்தான ஸ்பெஷல் உணவு. சைவப் பிள்ளைமார் சமு தாயத்தினரின் வீடுகளில் இந்த குழம்பு வெகுபிரசித்தம். திருமணத் துக்கு மறுநாள் 'சொதி விருந்து' என்று தனியாகச் சடங்கு நடத்தப் படும் அளவுக்கு முக்கியத்துவம் உடையது இது. பால்போன்ற நிறத்தில் இருந்தாலும் தனிச் சுவையுடன் இருக்கும் 'சொதிக் குழம்பு' செய்வது எப்படி?

 

சுமார் ஐந்து நபர்களுக்கு 'சொதிக் குழம்பு' செய்யும் முறை:

தேவையானவை:மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
சீரகம் - 25 கிராம்
பூண்டு - 100 கிராம்
இஞ்சி - 50 கிராம்
சிறுபருப்பு - 200 கிராம்
சிறிய வெங்காயம் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 250 கிராம் தேங்காய் பெரியது - 2
நெய் - 100 கிராம்
டால்டா - 100 கிராம்
கேரட் - 250 கிராம்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
முருங்கைக்காய் - 2
காலிஃபிளவர் - 1
மிளகாய் - 50 கிராம்
எலுமிச்சைப் பழம் - 3
கறிவேப்பிலை, கொத்துமல்லி சிறிதளவு.

சொக்க வைக்கும் சொதி

செய்முறை: தேங்காயைத் துருவி நன்றாக மை போன்று அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் இளஞ்சூடான 300 மி.லி. தண்ணீரில் அரைத்துவைத்த தேங்காய் பூவில் இருந்து பால் எடுக்க வேண்டும். மீண்டும் அரை லிட்டர் தண்ணீர்கொண்டு இரண்டாவது முறையாக பால் எடுக்க வேண்டும். சிறுபருப்பில் சிறிது மஞ்சள் சேர்த்து அவித்துவைத்துக்கொள்ள வும். எண்ணெய் சட்டியில் டால்டா ஊற்றி பூண்டு, இஞ்சி, மிளகாய், பெல்லாரி, சிறிய வெங்காயம் போன்றவற்றை வதக்கவும். இரண்டாவதாக எடுக்கப்பட்ட பாலில் இதனைச் சேர்க்க வேண்டும். காலிஃபிளவர், கேரட், முருங்கைக்காய், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சுத்தமாகக் கழுவி இரண்டாவது முறையாக எடுத்த பாலில் சேர்த்து, அதனைக் கொதிக்கவைக்க வேண்டும். காய்கறி வெந்த பிறகு, ஏற்கெனவே அவித்துவைத்திருக்கும் சிறுபருப்பை எடுத்து அதனுடன் சேர்க்க வேண்டும். பிறகு மீண்டும் நன்றாகக் கொதிக்கவைக்க வெண்டும். அதன் பின்னர், முதன்முதலாக தேங்காய்ப் பூவில் இருந்து எடுத்த பாலை எடுத்து அதனுடன் சேர்க்கவும். மறுபடியும்அனைத்தையும் நன்றாகக் கொதிக்க வைத்தால் நுரை போன்று வரும். இந்தப் பக்குவம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவைக்க வேண்டும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து, புளிப்புக்காக எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். பிறகு, நெய்யில் சீரகம், கறிவேப்பிலையைத் தாளித்துச் சேர்த்துவிட்டால், மணமும் சுவையும் நிறைந்த சொதிக் குழம்பு ரெடி!

சொக்க வைக்கும் சொதி
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism