Published:Updated:

அளந்து சாப்பிடு!

அளந்து சாப்பிடு!

அளந்து சாப்பிடு!

அளந்து சாப்பிடு!

Published:Updated:

உணவு விகடன்
அளந்து சாப்பிடு!
அளந்து சாப்பிடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அளந்து சாப்பிடு!
அளந்து சாப்பிடு!
கே.ராமசாமி எம்.விஜயகுமார்

அளந்து சாப்பிடு!

ளந்து சாப்பிடுவது தெரியும். அளந்து சாப்பாடு கொடுப்பது தெரியுமா? சேலம் செவ்வாய்ப்பேட்டையில் இருக்கிறது பவுத்துள் கடை. இந்தக் கடையில் சாப்பாட்டை தராசில் அளந்து கொடுக்கிறார்கள். கடை உரிமையாளர் துளசிராம், ''இந்தக்

கடையை 50 வருஷங்களுக்கு முன்னாடி எங்க அப்பா ஆரம்பிச்சார். அப்போ ஜனதா ஆட்சி இருந்ததால், எந்தப் பொருளா இருந்தாலும் அதை அளந்துதான் போடணும்னு சட்டம். சட்டத்தை மதிக் கணும்னு, கடையில் இருந்த லட்டு, ஜாங்கிரி, இட்லி, தோசை எல்லாத்தையும் அப்பா அளந்து கொடுத்து இருக்கிறார். அளந்துபோடுற கடைன்னு மக்கள் கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. அந்தப் பேரை ஏன் மாத்தணும்னு தொடர்ந்து அளந்து போட ஆரம்பிச்சோம். இப்போ, சாப்பாடு 200 கிராம் 12 ரூபாய், 400 கிராம் 25 ரூபாய், 500 கிராம் 30 ரூபாய்னு தர்றோம். சாப்பாடு வாங்கினால் சாம்பார், இரண்டு பொரியல், ஒரு கூட்டு, ஒரு புளிக்குழம்பு, அப்பளம், மோர், ரசம் எல்லாம் இலவசம்'' என்றார்.

சேலத்தில் இருந்து குரங்குச் சாவடி செல்லும் வழியில் உள்ளது 'கொசத்தி கடை'. பார்ப்பதற்கு படுசாதாரணமாக இருக்கும் இந்தக் கடையில் முண்டியடிக்கும் கூட்டத்தைப் பார்த்தால் மிரண்டு போவீர்கள். பரபரப்பாக இட்லி சுட்டுக்கொண்டு

அளந்து சாப்பிடு!

இருந்த சின்னப் பாப்பா, ''நான் இந்தக் கடையை 55 வருஷமா நடத்திட்டு இருக் கேன். எனக்கு இப்ப வயசு 70 ஆகுது. என் கடைக்கு வர்ற கூட் டத்தைப் பார்த்துட்டு பக்கத்தில் என் கடை மாதிரியே ரெண்டு கடைகள் போட்டாங்க. என் அளவுக்கு டேஸ்ட்டா இட்லி, தோசை கொடுக்க முடியாததால், அவங்களால் தாக்குப்பிடிக்க முடியலை. குறைஞ்ச விலையில், தரமான உணவு கொடுக்கணும்னு கடை ஆரம்பிச்சேன். இத்தனை வருஷமா அதை கட்டிக் காப்பாத்திட்டு வர்றேன். என் கடையில் இட்லி 2.50 பைசா, சாதா தோசை 3 ரூபா, முட்டை தோசை 7 ரூபா, ஆம்லேட் 5 ரூபா. காலையில் என் கடையில சாப்பிட இடமே கிடைக்காதுன்னா பாத்துக்கோங்க. நான்வெக்கிற சாம்பாரைக் குடிக்கிறதுக்கே பெரிய கூட்டம் வரும். நான் அப்படி சூப்பரா சமைப்பேன்''என்று பூரிக்கிறார்!

அளந்து சாப்பிடு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism