Published:Updated:

பருத்திப் பால் வேணுமா?

பருத்திப் பால் வேணுமா?

பருத்திப் பால் வேணுமா?

பருத்திப் பால் வேணுமா?

Published:Updated:

உணவு விகடன்
பருத்திப் பால் வேணுமா?
பருத்திப் பால் வேணுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பருத்திப் பால் வேணுமா?
பருத்திப் பால் வேணுமா?
இரா.கோகுல் ரமணன், ஈ.ஜெ.நந்தக்குமார், ஜெ.தான்யராஜு

பருத்திப் பால் வேணுமா?

சாப்பாட்டு விஷயத்திலும் மற்றவர்களுக்கு குறைந்தவர்கள் இல்லை மதுரைக்காரர்கள்.

தென்னங்குருத்து: பெரியார், கோரிப்பாளையம், வண்டியூர் தெப்பக்குளம்,

சிம்மக்கல் பக்கம் சென்றால் தள்ளுவண்டியில் விற்கப்படும் நடமாடும் தென்னங்குருத்துக் கடைகளைப் பார்க்கலாம். தென்னைமரம் வெட்டப்படும்போது நுனிப் பகுதி மரத்தின் உள்ளே உள்ளே, இறுதியில் கிடைக்கும் தண்டுப் பகுதிதான் இந்தத் தென்னங்குருத்து. மாவும் இனிப்பும் கலந்த மாதிரி இருக்கும் இதன் சுவை அலாதி. வயிற்று உபாதைகளுக்கு ஏற்ற இயற்கையான மருத்துவக்குணம் கொண்டது. கோடைக் கால உஷ்ணத்தையும் தணிக்கும். விலை ஒரு பீஸ் 2 முதல் 5 ரூபாய்தான். தற்போது கோடைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் குவியும் மக்களுக்கு இதுதான் பிடித்த அயிட்டம்!

பருத்திப் பால் வேணுமா?

ஜில்ஜில் ஜிகர்தண்டா: மதுரை விளக்குத் தூண் அருகே உள்ளது ஜிகர்தண்டா கடை. இங்குதான் ஜிகர்தண்டாவின் வரலாறு ஆரம்பிக்கிறது. இன்று ஜிகர்தண்டா, மதுரையின் பானமாக மாறிவிட்டது. கடற்பாசியுடன் பால், ஐஸ்க்ரீம் கலந்து தருகிறார்கள். ஜில் ஜிகர் அடிக்க எப்போதும் கூட்டம் மொய்க்கும்.!

பருத்திப் பால் வேணுமா?

குழாப்புட்டு: வண்டியூர் தெப்பக்குளம், ராஜாஜி பார்க், சிம்மக்கல், முக்கிய தெரு முக்குகள் என நிறைய இடங்களில் தள்ளுவண்டிகளில் புட்டு வியாபாரம் ஆவி பறக்கிறது. ''குழாயில் இருந்து அவித்த புட்டுகளை விழாமல் எடுத்து நிப்பாட்டுறதுக்கே தனி திறமை வேண்டும்'' என் கிறார் ஒரு கடை உரிமையாளர். உண்மைதான்... குழாயில் இருந்து உதிராமல், உடையாமல் ஒரு தினுசாக வெளியே எடுத்து கொடிக் கம்பம்போல் நிறுத்துகிறார்கள். கேழ்வரகுப் புட்டு, அரிசிப் புட்டு, கோதுமைப் புட்டு எனப் பலவகைகளில் கிடைக்கிறது!

பருத்திப் பால்: கிராமத்து உணவு. பொங்கல் பானைபோல் அலங்கரித்து ஈய முலாம் பூசப்பட்ட வெண்கலப் பானையில் வைத்து விற்கிறார்கள். வெள்ளத்தைக் காய்ச்சி பருத்திக்கொட்டையுடன் தேங்காய்ப் பூ, மிளகு, சித்தரத்தை கலந்து தருகிறார்கள்!

பருத்திப் பால் வேணுமா?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism