Published:Updated:

டூண்டா கபாப்!

டூண்டா கபாப்!

டூண்டா கபாப்!

டூண்டா கபாப்!

Published:Updated:

உணவு விகடன்
டூண்டா கபாப்!
டூண்டா கபாப்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டூண்டா கபாப்!
டூண்டா கபாப்!
ஆர்.ஷஃபிமுன்னா, பவண்குமார்

டூண்டா கபாப்!

த்தரபிரதேச தலைநகர் லக்னோ வருபவர்கள் தவறாமல் வந்து ருசிக்கும் இடம் 'டூண்டா கபாபி'. எருமைக் கறி மற்றும் ஆட்டுக் கறியில் எலும்புகளை அகற்றிவிட்டு கொத்துக் கறியைப்போல் செய்துகொள்கிறார்கள். பிறகு, அதில் மசாலா வகைகளைத் தடவி வடைபோல் செய்து எண்ணெயில் வறுத்து எடுத்தால் கபாப் தயார். ரொட்டி மற்றும் புரோட்டாக்களுடன் சேர்த்து சாப்பிட்டால், உலகை மறக்கச் செய்யும். இதன் மற்றொரு வகை 'கிரில் கபாப்'. அதாவது, ஒரு செ.மீ சதுர வடிவம் உள்ள நீளமான இரும்புக் குச்சிகளின் மீது மசாலா நிறைந்த கறியை தடவி, நெருப்பில் வேகவைத்து செய்கிறார்கள்.

இந்த சூப்பர் அயிட்டங்களைச் சாப்பிடாத பிரபலங்கள் குறைவு. பிரியங்கா காந்தி, ஷாரூக் கான், டோனி என பலரும் டூண்டா கபாபின் ரசிகர்கள். 1899-ம் ஆண்டில் முராத் அலி என்ப வரால் ஆரம்பிக்கப்பட்டு, மூன்று தலைமுறை களாக நடத்தப்படும் இந்தக் கடையின் தற்போதைய உரிமையாளர் முஹம்மது உஸ்மான். ஆரம்பத்தில் இங்கு கபாப் செய்த சமையல் மாஸ்டருக்கு ஒரு கை கிடையாது. அவரை எல்லோரும் 'டூண்டா' என அழைத்து கடைசியில் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. ஏதோ குட்டியூண்டு கடை என நினைக்க வேண்டாம். 'டூண்டா கபாபி பிரைவேட் லிமிடெட்' எனப் பெரிய நிறுவனமாக வளர்ந்து, வெளிநாடுகளிலும் கிளைகள் உண்டு.

டூண்டா கபாப்!

பழங்கால நவாபுகள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் விரும்பிச் சாப்பிட்ட இந்தக் கடையின் ருசி பாகிஸ்தானிலும் பிரபலம். 2001-ல் பிரதமராக இருந்த முஷ்ரப், பேச்சுவார்த்தைக்கு இந்தியா வந்தபோது அவருக்கு கபாப் செய்து தர இங்கு இருந்துதான் ஆட்கள் அனுப்பப்பட்டனர்.

இந்தக் கடையின் மசாலா சுவை வெஜிடேரியன்களுக்கும் பிடித்த ஒன்று. இவர்களுக்காக டூண்டா கபாபில் காய்கறி களிலும் கபாப் செய்து விற்கப் படுகிறது. ஒரு நாளைக்கு 50 கிலோ வரை விற்பனையாகும் டூண்டாவின் கிளையை தென் மாநிலங்களில் ஆரம்பிப்பதுதான் உஸ்மானின் திட்டம். விலை? 80 ரூபாய்க்கு 4 கபாப்!

டூண்டா கபாப்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism