சங்கீதத்துக்கு மட்டுமல்ல... இனிப்புக்கும் பெயர் போன இடம் திருவையாறு. 'அசோகா அல்வா' என்றால் தஞ்சாவூரைச் சுற்றிப் பிரபலம். 75 வருடங்களுக்கு முன்பு ராமைய்யர் என்பவர் கண்டுபிடித்த வித்தியாசமான ஸ்வீட் இது. அல்வாவையும் கேசரியையும் சேர்த்துச் செய்த கலவைபோல இருக்கும் இதன் புதுவகையான
சுவைதான் மக்களைச் சுண்டியிழுக்கிறது. மைதா, பாசிப் பருப்பு, பால்திரட்டு, முந்திரி, திராட்சை, சர்க்கரை என அனைவருக்கும் தெரிந்த பொருட்களைக்கொண்டுதான் ராமைய்யர் அசோகாவை உருவாக்கினார் என்றாலும், இன்றுவரை போட்டியாளர்களால் அப்படி ஒரு சுவையைத் தர முடியவில்லை. ஒரிஜினல் அசோகா அல்வா என்றால் அது |