Published:Updated:

ஃபுட் பாய்சன்!

ஃபுட் பாய்சன்!

ஃபுட் பாய்சன்!

ஃபுட் பாய்சன்!

Published:Updated:

உணவு விகடன்
ஃபுட் பாய்சன்!
ஃபுட் பாய்சன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபுட் பாய்சன்!
ஃபுட் பாய்சன்!
ந.வினோத்குமார்

ஃபுட் பாய்சன்!

லகச் சுகாதார மையத்தின் ஆய்வுப்படி ஒவ்-வொரு நாளும் பத்தில் ஆறு பேர் 'ஃபுட் பாய்சன்' பிரச்னை-யால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ் இங்கே...

ஐந்து டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை உள்ள வெப்ப நிலையில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும். ஆகவே, சூடான நிலையில்வைத்து சாப்பிடும் உணவுகளை 60 டிகிரி செல்சியஸ§க்கு மேலாகவும் குளுமையான நிலையில்வைத்துச் சாப்பிடும் உணவு வகைகளை ஐந்து டிகிரி செல்சியஸ§க்குக் கீழாகவும்வைத்துச் சமைக்கவும்!

உங்கள் வீட்டுக் குளிர்சாதனப் பெட்டிஎப்போதும் 4 டிகிரி செல்சியஸ§க்கு குறைவான வெப்ப நிலையிலேயே இருக்கட்டும். அப்போதுதான்பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த முடியும்.

ஃபுட் பாய்சன்!

.பச்சையான மட்டன், சிக்கன், மீன் ஆகியவற்றை ஒன்றோடு ஒன்று கலக்காதீர்கள். காரணம், ஒவ்வொன் றிலும் பேத்தோ ஜென்(pathogen) போன்ற ஃபுட் பாய்சனிங் ஏற்படுத்தும் பாக்டீரியாக் கள் இருக்கின்றன!

அசைவ உணவு வகைகளை நன்றாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். 75 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வேகவைக்கும்போது அதில் உள்ள பாக்டீரியாக்கள் நீங்கிவிடும்!

பச்சை முட்டைகள், ஆஃப் பாயில் சாப்பிடுவதைத் தவிருங்கள். வேகாத முட்டையில் இருக்கும் சால்மொனெல்லா (salmonella) பாக்டீரியாக்கள் வயிற்றுக்கு ஆப்புவைத்துவிடும்!

ஃபுட் பாய்சன்!

சமையல் அறையை ஈரமாகவைத்திருக்க வேண்டாம். ஈரமான இடங்களில் பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளரும்!

எப்போதும் சூடான உணவுவகை களை சூடாகவும், குளுமையான உணவுவகை களைக் குளுமையாகவும் வைத்திருங்கள். இதற்கு எதிராக இருந்தால் அவை விஷமாகி விடும்!

வெளியே சென்றால் தரமானஹோட் டலில் மட்டுமே சாப்பிடுங்கள். சிக்கனம் பார்த்தால், அதே பணத்தை மருத்துவரிடம் கொடுக்க வேண்டியிருக்கும்!

ஃபுட் பாய்சன்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism