Published:Updated:

பசியிலிருந்து விடுதலை!

பசியிலிருந்து விடுதலை!

பசியிலிருந்து விடுதலை!

பசியிலிருந்து விடுதலை!

Published:Updated:

உணவு விகடன்
பசியிலிருந்து விடுதலை!
பசியிலிருந்து விடுதலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பசியிலிருந்து விடுதலை!
பசியிலிருந்து விடுதலை!
ந.வினோத்குமார்

பசியிலிருந்து விடுதலை!

'தனியரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத் தினை அழித்திடுவோம்!' எனப் பாரதி சொன்னாலும் ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதவர்கள்தான் இங்கு அதிகம்.

சர்வதேசப் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் மீதான உடன்படிக்கை (International Covenant on Economic, Social and Cultural Rights, 1966) 'ஒவ்வொரு மனிதரும் பசியில் இருந்து விடுதலை அடைவது அவர் களின் அடிப்படை உரிமை' என்கிறது. அது என்னவோ, இயற்றப்படும் எல்லாத் தீர்மானங்களும் இந்திய நாட்டில் மட்டும் செயலிழந்துபோகின்றன. நம் நாட்டில் ஒவ்வோர் இரவும் நூற்றில் 78 பேர் பசியுடன்தான் உறங்கச் செல் கிறார்கள். 1992 முதல் 2006 வரை மூன்று வயதுக்கு உட் பட்ட எடை குறைவாக இருந்த குழந்தைகளின் எண் ணிக்கை 56 சதவிகிதம். 2015 முதல் 2043-க்குள் இந்த எண்ணிக்கையை 50 சதவிகிதமாகக் குறைப்பதுதான் நாட்டின் மில்லினியம் டெவலப்மென்ட் கோல். இந்த 'டார்கெட்'டை அடையத் தவறும்போது மூளை பாதிப்பு, சரியான கல்வி தர இயலாமை, சத்துக்குறைவால் நிகழும் சிறுவயது மரணங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியா தன் வருங்காலத் தலைமுறையையும் குற்றம் செய்யத் தூண்டுகிறது என்பதே கசப்பான உண்மை!

பசியிலிருந்து விடுதலை!

இந்தியாவில் பட்டினி என்பது பாலினம் மற்றும் வயது வித்தியாசங்களை முக்கியக் கூறுகளாகக் கொண்டுள்ளது. மக்கள் தொகையில் சரிபாதிப் பெண்கள் ரத்தசோகை மற்றும் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்களின் குழந்தைகளும் எடை குறைவாகவே பிறக்கின்றன. சத்துக்குறைவு ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியை ஒவ்வொரு வருடமும் மூன்று சதவிகிதம் குறைக்கிறது என்கிறது உலக வங்கி. அதே சமயம் ஒரு தனிநபரின் வாழ்நாள் பொருளீட்டும் திறனை 10 சதவிகிதம் குறைக்கிறது.

விவசாயம் என்பது இன்று தீண்டத்தகாததாக மாற்றப்பட்டு இருக்கிறது. நியாயமான விலை நிர்ணயிக்காதது, அதிகக் கடன் சுமை போன்ற காரணங்களால் மக்கள் தங்கள் வயல்களைவிட்டு புலம்பெயர்கின்றனர். இன்னும் பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நாட்டுக்கு ஒத்துவராத பொருளாதாரக் கொள்கைகளால் சேமிப்புக் கிடங்கு களில் உணவுப் பண்டங்கள் சேர்த்துவைக்கப்பட்டு இருந்தாலும் மக்கள் பசியுடன் இருக்க வேண்டிய முரண்பாடு. 'மக்களின் பட்டினிக்குக் காரணம் பணம் இல்லை என்பதல்ல; அவர்களுக்குத் தேவை யான உணவின் மீது அவர்களுக்கு உரிமை இல்லை என்பதே' என்றார் அமர்த்தியா சென். இந்த வறுமை யையும் பட்டினியையும் மிகவும் அவசரத்துடன் எதிர்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இதனைச் சார்ந்து பல குழந்தைகள் ஒரு பிடி சோற்றுக்காகக் காத்திருக்கிறார்கள். பட்டினியில் இருந்து மக்கள் வெளிவராத வரை சுதந்திரம் என்பது வெறும் தந்திரம்தான்!

பசியிலிருந்து விடுதலை!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism