Published:Updated:

குரங்கு ஏன் பேசுவது இல்லை? - ஹாய் மதன்-கேள்வி பதில்

குரங்கு ஏன் பேசுவது இல்லை? - ஹாய் மதன்-கேள்வி பதில்

குரங்கு ஏன் பேசுவது இல்லை? - ஹாய் மதன்-கேள்வி பதில்

குரங்கு ஏன் பேசுவது இல்லை? - ஹாய் மதன்-கேள்வி பதில்

Published:Updated:

குரங்கு ஏன் பேசுவது இல்லை?  
ஹாய் மதன்-கேள்வி பதில்  
குரங்கு ஏன் பேசுவது இல்லை? - ஹாய் மதன்-கேள்வி பதில்
குரங்கு ஏன் பேசுவது இல்லை? - ஹாய் மதன்-கேள்வி பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரங்கு ஏன் பேசுவது இல்லை? - ஹாய் மதன்-கேள்வி பதில்

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

திருமணமான பின்பு ஒரு பெண் தன் பழைய நண்பர்களை மறந்துவிடுகிறாள். ஆனால், ஓர் ஆண் அப்படி இருப்பது இல்லையே, ஏன்?

மறந்துவிட முடியாது. துறந்து விடுகிறாள்!

எச்சரிக்கை உணர்வுதான் காரணம். ஆனால், இது எல்லாமே பழங்கதையாகிக்கொண்டு வருகிறது. ஆண் அப்படிச் செய்யாததற்குக் காரணம், தன் மனைவியிடம் எந்த நண்பர்களைப்பற்றியும் விளக்கத் தேவை இல்லை என்கிற மனப்பான்மை!

சி.விஜயாம்பாள், கிருஷ்ணகிரி-1.

ஆங்கிலத்தில் யூபோனிமஸ் வேர்ட்ஸ் (Eponymous Words) என்கிறார்களே, அது என்ன?

சுருக்கமாக, ஒரு மனிதனின் பெயர் பொதுப் பெயராக ஆவது! ஆங்கிலத்தில் இது அதிகம். Boycott, Derby (குதிரை ரேஸ்), guillotine (கழுத்தை வெட்டும் கருவி), Mesmerize, Quisling (எதிரியிடம் காட்டிக்கொடுக்கும் துரோகி), Sadism, Sandwich, Watt(பல்ப்!), இதெல்லாம் மனிதர்களின் பெயர்களில் இருந்து வந்த 'யூபோனிமஸ்' வேர்ட்ஸ்! Onoma என்றால் பெயர் (Name). Epi என்றால் 'அதன் மேல் வந்த' என்று பொருள்!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

'போதனை - அறிவுரை' என்ன வித்தியாசம் சார்?

பொதுவாக, தாடிவைத்துக்கொண்டு செய்தால் போதனை. ஷேவ் பண்ணிக்கொண்டு செய்வது அறிவுரை!

மகாத்மா காந்தி ஒரு வேளை பிரதமர் ஆகியிருந்தால் அவருக்கு அந்த அகால மரணம் நேர்ந்திருக்காது அல்லவா?

இந்திரா, ராஜீவ் பிரதமராக ஆகாமல் இருந்திருந்தால் அகால மரணம் நேர்ந்திருக்காது அல்லவா?!

எஸ்.ஜெயகாந்தன், புன்செய்ப் புளியம்பட்டி.

ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றைப் பெற முடியுமா?

நிச்சயமாக!

மூச்சுவிடுகிறீர்கள். கார்பன்-டை-ஆக்ஸைடை இழக்கிறீர்கள் (மரங்களுக்காக). பதிலுக்கு ஆக்ஸிஜனைப் பெறுகிறீர்கள் (மரங்களில் இருந்து)! எல்லாமே கொடுக்கல், வாங்கல்தான். நோ ஃப்ரீ லஞ்ச் ப்ளீஸ்!

மனைவியின் பிரம்மாஸ்திரம் கண்ணீர் என்றால், கணவனுக்கு?!

பட்டினி!

ரவிபுவன், சென்னை-18.

மதன்ஜி... 2020-ல் சென்னை எவ்வாறு இருக்கும்? உங்கள் கண்ணோட்டம் என்ன?

எல்லோரும் காரில் அமர்ந்து கொண்டு, முன்னே பின்னே நகர முடியாமல் தொடர்ந்து, 'ஹாரன்' அடித்துக்கொண்டு இருப்பார்கள் என்று தோன்றுகிறது!

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

'இப்போது உள்ள நவநாகரிக யுவதிகளிடம் 'ஓராயிரம் பார்வையில் உன் பார்வையை நான் அறிவேன்' பாடல் எடுபடுமா?

நிச்சயம் எடுபடும் - அந்த நவநாகரிக யுவதிகளுக்குத் தமிழ் தெரியும் என்றால்!

அந்தப் பாடலின் இரண்டாவது வரி இன்னும் பிரமாதம் - 'உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்?! எனக்குப் பிடித்த பாடல்களில் டி.எம்.எஸ் அற்புதமாகப் பாடிய இந்தப் பாடலும் ஒன்று. சினிமாவில் இதைப் பாடியவர் யார் தெரியுமா? சிவாஜி? எம்.ஜி.ஆர்? ஜெய்சங்கர்?

ஊஹூம்... அசோகன்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன். மனிதனால் பேச முடிகிறது. குரங்கினால் ஏன் பேச முடிவது இல்லை?

'பிறந்தவன்' இல்லை. பிரிந்தவன்!

வெறும் உறுமல்களோடு லட்சக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மனிதனிடம் பேச்சு எப்போது தோன்றியது? சுமார் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நான்கு கால் பிராணிகளைப்போல நடமாடிய மனிதன் எழுந்து நின்றான். பரிணாம வளர்ச்சி அவனுடைய முதுகெலும்பை நிமிர்த்தியது. அதற்குப் பிறகே மனிதன் மற்ற பொருட்களைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தான். ('அதோ தண்ணீர்...', 'அதோ பழம்!') அதற்குப் பிறகே பேச்சு உருவானது. தொண்டையில் இருக்கும் வாய்ஸ்பாக்ஸ்கூட கொஞ்சமாக நகர்ந்து அட்ஜஸ்ட் செய்துகொண்டது என்று சொல்லப்படுகிறது. பேச்சு என்றால் என்ன?

டாக்டர் ரேமண்ட் டாலிஸ் என்கிற தத்துவப் பேராசிரியர் அற்புதமாக அதை விளக்குகிறார். அதாவது, 'மனிதனின் உள்ளே இருந்து வெளியே ஊதப்படும் வெறும் காற்றை (Exhaled Air) தொண்டையும், நாக்கும், உதடுகளும் மின்னல் வேகத்தில் இணைந்து 'பேச்சு' என்கிற ஒலிச் சிற்பமாகச் செதுக்குகின்றன!'

அதற்கு முன்பு விதவிதமாக உறுமுவதன் மூலம் தன் உணர்வுகளை மனிதன் தெரியப்படுத்தினான். பேச்சு உருவான பிறகும் அது தொடர்ந்தது. 'என்ன?' என்கிற ஒரே வார்த்தையை, ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்தி, முகபாவங்களை வெளிப்படுத்தி, எத்தனை விதமாகச் சொல்ல முடியும் என்பதை 'பிராக்டீஸ்' செய்து பாருங்கள், புரியும். காற்றில்லாமல் பேச்சு இல்லை. தவிர, நீங்கள் மௌனமாக இருக்கும்போதும் உங்கள் மனசுக்குள் தொடர்ந்து பேசிக்கொண்டேதான் இருக்கிறீர்கள்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்-1.

மரங்கொத்தியின் அலகு என்ன இரும்பு வாளா? பெரிய மரங்களைக்கூட கொத்தித் தள்ளிவிடுகிறதே?

இரும்பு உளி என்று சொல்லலாம்!

பல்வேறு வகையான அலகுகள்கொண்ட விதவிதமான மரங்கொத்திகள் (Wood Pecker) உண்டு. அலகுக்கு ஏற்ற மரங்கள். மரங்கொத்திக்கு 'ஷார்ப்' ஆன செவிப்புலன் உண்டு. அது மரத்தில் தொத்திக்கொண்டவுடன் முதல் வேலையாக காதைவைத்துக் கேட்கும். உள்ளே பூச்சிகள் நடமாட்டம் காதில் விழுந்தவுடன் உடனே மூக்கால் மரத்தைத் துளைத்து, நீண்ட நாக்கால் பூச்சிகளை லபக்!

குத்தும்போது மரத் தூள்கள் (அலகுக்கு மேலே உள்ள) மூக்குக்குள் போகாமல் இருக்க, இமைகள் போன்ற மெல்லிய இறகுகளால் மூக்கை முடிக்கொள்ளும். தவறுதலாக மரத்தின் மீது மண்டை மோதிக்கொண்டால்?! அதற்காகவே தலையில் 'குஷன்'போல ஒரு (சில சமயம் சிவப்பு நிற) 'ஹெல்மெட்'டை இயற்கை அதற்குத் தந்திருக்கிறது!

குரங்கு ஏன் பேசுவது இல்லை? - ஹாய் மதன்-கேள்வி பதில்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism