Published:Updated:

டீன் கொஸ்டீன் - அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா?!

டீன் கொஸ்டீன் - அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா?!

டீன் கொஸ்டீன் - அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா?!

டீன் கொஸ்டீன் - அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா?!

Published:Updated:

டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன் - அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா?!
டீன் கொஸ்டீன் - அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா?!
டீன் கொஸ்டீன் - அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா?!
டீன் கொஸ்டீன் - அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா?!

கே.ஸ்ரீதேவன், திருநெல்வேலி.

''பள்ளிப் படிப்பைக்கூட தொடர முடியாதவன் நான். என் மகன் இப்போது ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளான். இருந்தாலும், அவனைப் பொறியியல் கல்லூரியில் சேர்க்கும் அளவுக்கு வசதி இல்லை. குடும்பத்தின் முதல் தலைமுறை மாணவன் கல்லூரிக்குச் செல்வதாக இருந்தால், அவனுக்கு அரசு உதவிகள் கிடைக்கும் என்கிறார்களே. உண்மையா?''

மன்னர் ஜவஹர், துணைவேந்தர்,அண்ணாப் பல்கலைக்கழகம்.

டீன் கொஸ்டீன் - அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா?!

''ஆம், முதல் தலைமுறை மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கான டியூஷன் கட்டணத்தை ரத்து செய்து இருக்கிறது அரசு. புரொஃபஷனல் கோர்ஸ் எனப்படும் பி.இ., எம்.பி.பி.எஸ்., போன்ற படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இதற்கு உங்கள் மகன் 'முதல் தலைமுறை' என்பதை நிரூபிக்க உங்கள் பகுதி தாசில்தாரிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளின் கல்வித் தகுதிகளை அதில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். இந்தச் சான்றிதழை பொறியியல் கவுன்சலிங் தொடங்கும் முன் பெற்றுவிடுவது நல்லது. இதோடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு என அரசு ஸ்காலர்ஷிப் அளிக்கிறது. தக்க சான்றிதழ்கள் இருந்தால் கல்விக் கடனுக்கும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்!''

எம்.ஷீலா, சென்னை-78.

''எனக்கு வயது 20. இரண்டு ஆண்டுகளாக ஒருவரை நான் காதலிக்கிறேன். இருவரும் செம ஜாலி டைப். சமீப நாட்களாக, அவன் என்னைவிட்டுப் போய்விடுவானோ, ஏமாற்றிவிடுவானோ என்ற எதிர்மறை எண்ணங்களாக எழுகிறது. ஆனால், அவனுடன் இருக்கும்போது அந்த எண்ணங்கள் வருவது இல்லை. என் பிரச்னை புரிகிறதா?''

சிவநம்பி,மனநல சிறப்பு மருத்துவர்.

டீன் கொஸ்டீன் - அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா?!

''கவலை வேண்டாம் ஷீலா. காதலிப்பவர்களுக்குள் இயல்பாக ஏற்படும் சஞ்சலம்தான் இது. திருமணம் தொடர்பான உரையாடல்களின்போது, உங்கள் காதலர் நேரடியான, நம்பிக்கையான பதில்களை அளிக்காமல், வழக்கம்போல கலாய்த்திருப்பார். அது உங்கள் அடிமனதில் தங்கி, இதுபோன்ற எண்ணங்களை தோன்றச் செய்திருக்கும். கொஞ்சம் உங்கள் ஜாலி, கேலி விளையாட்டுகளை ஒதுக்கிவிட்டு திருமணம் தொடர்பாக உங்கள் காதலருடன் மனம்விட்டுப் பேசுங்கள். உங்கள் திருமணத்துக்கான சாத்தியங்கள், எதிர்கொள்ளவிருக்கும் தடைகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். 'உன் மீது சந்தேகம் எதுவும் இல்லை. ஆனாலும், என் மனதில் எழும் பயத்தைப் போக்க வேண்டியதில் உன் பங்கும் கணிசமானது' என்று இதமாக உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்!''

செ.முரளி, விருதுநகர்

''நான் எனது கிராமத்தில் ஒரு நூலகம் தொடங்க விரும்புகிறேன். அதை நடத்துவதற்கு லைசென்ஸ் எதுவும் பெற வேண்டுமா? தொடங்கி நடத்த அரசிடம் இருந்து சலுகைகள், மானியங்கள் ஏதேனும் கிடைக்குமா?''

க.அறிவொளி,இயக்குநர், பொது நூலகத் துறை.

டீன் கொஸ்டீன் - அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா?!

''தனிப்பட்ட முறையில் நூலகம் தொடங்கி நடத்த லைசன்ஸ் எதுவும் தேவை இல்லை. அதே சமயம், உடனடியாக அதற்கு அரசு மானியம் எதுவும் கிடைக்காது. ஆனால், மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து நீங்கள் நூலகத்தைச் சிறப்பாக நடத்திய பிறகு எங்களுக்கு மனு செய்தால், தக்க ஆய்வுகளுக்குப் பிறகு கொல்கத்தா ராஜாராம் மோகன்ராய் லைப்ரரி ஃபவுண்டேஷனுக்கு எங்கள் பரிந்துரையை அனுப்புவோம். அவர்கள் ஒரு முறை நிதி உதவியாக ஒன்றரை லட்ச ரூபாயை உங்களுக்கு வழங்குவார்கள். பொது நூலகத் துறை சார்பாகவும் உங்கள் பகுதியில் நூலகம் தொடங்க நீங்கள் விண்ணப்பிக்கலாம். நூலகம் தொடங்க விரும்பி நீங்கள் மனு அளித்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட நூலகர் உங்கள் பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொள்வார். பகுதி நேர நூலகம் திறக்கப் போதுமான தகுதிகள் உள்ளதா, குறைந்தபட்ச மக்கள் தொகை ஆயிரத்தை எட்டுகிறதா என்றெல்லாம் ஆய்வு செய்வார்கள். நூலகம் அமைக்க குறைந்தபட்சமாக 400-500 சதுர அடிக்குக் கட்டட வசதியை நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். 25 உறுப்பினர்கள் சேர வேண்டும். இருவர் புரவலராகச் சேர வேண்டும். இவற்றை நீங்கள் செய்து முடித்தால், நாங்களே ஒரு நூலகரை நியமித்து புத்தகங்களையும் அளித்து நூலகத்தை நடத்த உதவி செய்வோம்!''

ஆர்.வைஷ்ணவி, திருச்சி-5.

''நான் வங்கிக் கல்விக் கடன் பெற்று கல்லூரியில் படிக்கிறேன். செமஸ்டர் சமயத்தில் என் தந்தை இறந்துவிட்டதால் அன்றைய தேர்வை என்னால் எழுத முடியவில்லை. இதனால், அந்த செமஸ்டரில் அரியர் விழுந்துவிட்டது. அரியர் இருப்பதால் எனது அடுத்த செமஸ்டருக்கான கட்டணத்தை வங்கியில் தர மறுக்கிறார்கள். நியாயமான காரணம் இருந்தும் கடன் தர வங்கி மறுக்கலாமா?''

கிருஷ்ணன், கிளை மேலாளர்,பஞ்சாப் நேஷனல் வங்கி.

டீன் கொஸ்டீன் - அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா?!

''எந்தச் சூழ்நிலையிலும் அடுத்த செமஸ்டர் படிப்பை தொடர கல்லூரி,

டீன் கொஸ்டீன் - அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா?!

பல்கலைக்கழக விதிகள் உங்களை அனுமதித்தால், நிச்சயம் உங்களுக்குக் கல்விக் கடன் அளிக்கப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு அளித்தத் தீர்ப்பே உங்களுக்குச் சாதகமாக இருக்கிறது. 'இந்த மாணவி, இந்தக் கல்லூரியில், இந்த வகுப்பில் படிக்கிறார். கடந்த செமஸ்டர் தேர்வை இன்ன காரணத்தால் அவரால் எழுத முடியாமல் போய்விட்டது. இருப்பினும் இவர் அடுத்த செமஸ்டர் படிப்பைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளார்' என்று காரணத்தை விளக்கி, உங்கள் கல்லூரியில் இருந்து ஒரு சான்றிதழைப் பெறுங்கள். அந்தச் சான்றிதழை சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையில் அளித்தாலே, உங்களுக்குக் கல்விக் கடன் நிச்சயம் தொடரப்பட வேண்டும்.அதன் பிறகும் வங்கித் தரப்பில் இழுத்தடித்தால், தயக்கமே இல்லாமல் சட்டரீதியான நடவடிக்கையை நாடலாம்!''

டீன் கொஸ்டீன் - அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா?!
டீன் கொஸ்டீன் - அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா?!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism