Published:Updated:

டீன் கொஸ்டீன் - பெண்களுக்கு மீசை வளருமா?

டீன் கொஸ்டீன் - பெண்களுக்கு மீசை வளருமா?

டீன் கொஸ்டீன் - பெண்களுக்கு மீசை வளருமா?

டீன் கொஸ்டீன் - பெண்களுக்கு மீசை வளருமா?

Published:Updated:

பெண்களுக்கு மீசை வளருமா?
டீன் கொஸ்டீன் - பெண்களுக்கு மீசை வளருமா?
டீன் கொஸ்டீன் - பெண்களுக்கு மீசை வளருமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன் - பெண்களுக்கு மீசை வளருமா?
டீன் கொஸ்டீன் - பெண்களுக்கு மீசை வளருமா?

எம்.கௌரி, பெங்களூரு-13.

"எனக்குத் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகின்றன. 14 ஆண்டுகள் கணவரின் பெற்றோருடன்தான் வசித்தோம். அவர்கள் குடும்பத் தொழிலை என் கணவரும் சேர்ந்துதான் பார்த்துவந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சின்ன மனஸ்தாபத்தால் தனிக்குடித்தனம் வந்துவிட்டோம். என் கணவரும் சேர்ந்து சம்பாதித்ததில் நிறையச் சொத்துக்களை அவர்கள் வாங்கியுள்ளனர். இப்போது எங்களுக்கு அதில் பங்கு இல்லை என்கிறார்கள். என்ன செய்வது?"

டீன் கொஸ்டீன் - பெண்களுக்கு மீசை வளருமா?

அஜிதா, வழக்கறிஞர்.

"பரம்பரை வழிச் சொத்தா அல்லது சொந்தச் சம்பாத்தியமா என்று நீங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் மாமனாரிடம் இருப்பது அவர் பாட்டனார் வழிச் சொத்தாக இருந்தால், நிச்சயம் உங்கள் கணவர் மூலமாகவே வழக்கு தொடரலாம். ஒருவேளை, உங்கள் மாமனார் சுயமாகச் சம்பாதித்துச் சேர்த்ததாக இருந்தால், உங்கள் குழந்தைகளுக்குக்கூட உரிமை இல்லை. உங்கள் மாமனார் வாங்கிய சொத்துக்களில் உங்கள் கணவரின் உழைப்பும் இருக்கிறது என்றால், உங்கள் கணவரே நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். 'குறிப்பிட்ட சொத்தில் என் உழைப்பும் உள்ளது' என்பதை நிரூபித்து சொத்தில் பங்கு பெற முயற்சிக்கலாம்!"

கே.ஜெனிட்டா, சென்னை-14

"எனக்கு அவ்வப்போது மனதில் இனம் புரியாத பயம் ஏற்படுகிறது. நான் சந்தோஷமாக இருப்பதாக உணர்ந்தாலும் சில சமயங்களில் காரணமே இல்லாமல் சோகமும், பயமும் தோன்றுகின்றன. இதிலிருந்து விடுபடுவது எப்படி?"

டீன் கொஸ்டீன் - பெண்களுக்கு மீசை வளருமா?

திருநாவுக்கரசு மனநல மருத்துவர்.

"காரணமே இல்லாமல் தோன்றும் எந்தவித உணர்வு மாற்றங்களும் கவனிக்கப்பட வேண்டியவைதான். காரணமே இல்லாமல் தோன்றும் பயம் மூலம் ஏற்படும் மனநல அல்லது மனநிலை மாற்றம் பதற்றம், சந்தோஷம், சோகம் ஆகிய எந்த உணர்வினையும் ஏற்படுத்தலாம். அந்த உணர்வுகள் உங்கள் அன்றாட வாழ்க்கை முறையைப் பாதிப்பதாக இருந்தால், நீங்கள் விரைந்து செயல்பட வேண்டியிருக்கும். அந்தப் பயம் காரணமாக உங்களால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை, வெளி இடங்களுக்குச் செல்லத் தயங்குகிறீர்கள், அல்லது உடன் யாராவது வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றால், நிச்சயமாக இது கொஞ்சம் சிக்கலான பிரச்னைதான். எண்ணமோ, உணர்வோ எதுவாக இருந்தாலும் ஒருவரின் சுய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை எந்தப் பயமும் இல்லை. 'இந்தப் பயம், வருத்தம் தேவை இல்லாதது. இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உதாசீனப்படுத்த முடியும்' என்று உங்களை நீங்களே கட்டுப் படுத்திக்கொள்ள முடிந்தால், எந்தக் கவலையும் இல்லை. மனதில் அச்ச உணர்வு தோன்றும் சமயம், அதை மறந்துவிட்டு நீங்கள் உங்கள் பணிகளில் கவனம் செலுத்தலாம். ஆனால், உங்கள் கட்டுப்பாடுகளை மீறி அந்தப் பயம் உங்களை அலைக்கழிக்கிறது என்றால், தக்க மனநல ஆலோசகரிடம் ஆலோ சனை பெறுவது உசிதம். உங்கள் பாதிப்பு உடலியல் காரணமா, உளவியல் காரணமா என்று பரிசீலிப்பார்கள். உடலியலாக இருந்தால் மருந்து மாத்திரையும், உளவியல் காரணமாக இருக்கும்பட்சத்தில் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமும் நிவாரணத்தைப் பெறலாம்!"

எஸ்.சத்யா, திருப்பூர்.

"நான் நல்ல சிவப்பு. அதனால் மேலுதட்டில் உள்ள பூனை ரோமம் மெல்லிய மீசைபோலத் தோற்றம் அளிக்கிறது. புருவ முடிகளை த்ரெட்டிங் மூலம் அடர்த்தி குறைப்பார்களே... அப்படி அந்த மேலுதட்டு முடிகளையும் நீக்கலாமா? அப்படி நீக்கினால் அது இன்னும் வேகமாக, அடர்த்தியாக வளரும். ஆண்கள் ஷேவிங் செய்வது போல வாரம் ஒருமுறை த்ரெட்டிங் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்கிறார்கள் தோழிகள். அப்படியா? நான் என்ன செய்யட்டும்?"

டீன் கொஸ்டீன் - பெண்களுக்கு மீசை வளருமா?

பிரியா சருமநோய் மருத்துவர்.

"பூனை முடி என்பது கிட்டத்தட்ட அனைத்து பெண்களுக்கும் இருக்கும் இயல்பான ஒரு விஷயம் தான். வெறும் பூனை முடிதான் என்றால் பிளீச்சிங் செய்தாலே போதும். மற்றபடி த்ரெட்டிங், வேக்ஸிங் செய்தால் அது முடியை இன்னும் அடர்த்தியாக்கி அசிங்கமாக்கிவிடும். ஒருவேளை அது கூந்தல்போல அடர்த்தியாக இருந்தால் தோல்நோய் சிகிச்சை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். எதனால் அப்படி முடி வளர்கிறது, ஹார்மோன் பிரச்னை காரணமா என்று பரிசோதிப்பார்கள். அதன் பிறகு, லேசர் ஹேர் ரிமூவர் தெரப்பி மூலம் மாதத்துக்கு ஒரு முறை என்று ஆறு முதல் பத்து முறை சிகிச்சை அளிப்பார்கள். அது முடி வளர் வதை நிரந்தரமாக நிறுத்தும். இந்த லேசர்சிகிச்சை யைப் பயிற்சி பெற்ற தக்க மருத்துவர்களிடம்தான் மேற்கொள்ள வேண்டும். மற்றபடி அந்தப் பகுதியில் மஞ்சள், உப்பு தடவுவதுபிரச்னைக் குத் தீர்வாகாது. தொடர்ந்து மஞ்சள் தடவுவ தால், அந்த இடமே கறுப்பாகக் கூடும்!"

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.

டீன் கொஸ்டீன் - பெண்களுக்கு மீசை வளருமா?

"கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடந்த அடிதடியில் குறிப்பிட்ட சிலர் மீது போலீஸில் வழக்குப் பதிவு செய்தார்கள். நான் அந்த அடிதடியில் பங்கு பெறவில்லை. ஆனால், அதில் ஈடுபட்டவர்களில் இருவர் என் நண்பர்கள். அதைக் காரணமாகவைத்தே என் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க என்ன வழி. இந்தப் பொய் வழக்கினால் என் வருங்கால வாழ்க்கை பாதிக்குமா?"

டீன் கொஸ்டீன் - பெண்களுக்கு மீசை வளருமா?

டி.எஸ்.அன்பு ஐ.பி.எஸ்., காவல் துறை துணை ஆணையர், சென்னை.

"உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தால் கண்டிப்பாகப் பாதிப்பு இருக்கும் தான். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, அரசு வேலைவாய்ப்பின்போது, உங்களைப் பற்றிய விவரங்கள் காவல் துறையினரிடம் கேட்கப்படும். 'இந்தக் குற்ற வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது' என்று அவர்கள் தெரிவிக்கலாம். இதனால், அரசு வேலைவாய்ப்பு கிடைக்காது. பாஸ்போர்ட்டும் கொடுக்க மாட்டார்கள். தனியார் துறை என்றால் உங்களுக்கு வேலை வழங்குவது அவர்கள் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது. பொய் வழக்காக இருக்கும் பட்சத்தில், சம்பவம் நடந்த நேரத்தில் 'நான் அங்கு இல்லை' என்பதை நிரூபிக்க தேவையான ஆதாரம், சாட்சியத்தைத் தயார் செய்து சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியிடம் நிரூபிக்கலாம். விசாரணை அதிகாரியை நேரில் சந்திக்கப் பயமாகவோ தயக்கமாகவோ இருந்தால், அவருடைய உயர்அதிகாரிகளைச் சந்தித்து, ஆதாரங்களைக் கொடுத்து தன்னிலை விளக்கம் அளிக்கலாம். அவர்கள் அதன் மீது விசாரணை செய்து, உங்களை விடுவிக்க வாய்ப்பு உள்ளது. அல்லது நீதிமன்றத்தில் நீங்கள் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும். குற்றமற்றவர் என்று நிரூபித்துவிட்டால் எதிர்காலத்தில் எந்தப் பிரச்னையும் இருக்காது!"

டீன் கொஸ்டீன் - பெண்களுக்கு மீசை வளருமா?
டீன் கொஸ்டீன் - பெண்களுக்கு மீசை வளருமா?
டீன் கொஸ்டீன் - பெண்களுக்கு மீசை வளருமா?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism