Published:Updated:

நரி முகத்தில் விழித்தால் நல்லதா? - ஹாய் மதன்-கேள்வி பதில்

நரி முகத்தில் விழித்தால் நல்லதா? - ஹாய் மதன்-கேள்வி பதில்


ஹாய் மதன் கேள்வி பதில்
நரி முகத்தில் விழித்தால் நல்லதா? - ஹாய் மதன்-கேள்வி பதில்
நரி முகத்தில் விழித்தால் நல்லதா? - ஹாய் மதன்-கேள்வி பதில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அவதார் தோழி!
நரி முகத்தில் விழித்தால் நல்லதா? - ஹாய் மதன்-கேள்வி பதில்

சுரேஷ், திருக்கண்டேஸ்வரம்.

நரி முகத்தில் விழித்தால் நல்லதா? - ஹாய் மதன்-கேள்வி பதில்

பல பெயர்களில் விருது தரும் தமிழக அரசு, அமரர் ஆன, எழுத்தாளர் - விஞ்ஞானி சுஜாதா பெயரில் விருது தந்தால் எப்படி இருக்கும்?

1.நன்றாகவே இருக்கும்.

2. ஆனால், இந்திய அளவில் பெரும்பாலான விருதுகள் 'காக்கா' பிடிப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்டு மதிப்பு இழந்துவிடவில்லையா?!

3. சுஜாதாவின் எழுத்துக்கள் எதிர்காலத்திலும் நிலைத்து நிற்கும். இதைவிடப் பெரிய விருது எது?!

மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

கஞ்சத்தனமாக இருந்தால் பெண் குழந்தைதான் பிறக்கும் என்கிறார் என் தாத்தா. யோசித்துப்பார்த்தேன். சரிதானோ என்று தோன்றுகிறது (நீங்கள் என்ன சொல்கிறீர்கள்) இது எந்த அளவுக்கு உண்மை?

மரியாதைக்கு உரிய உங்கள் தாத்தாவின் அபத்தமான கருத்து இது. அதாவது, பெண் குழந்தை பிறந்து, கஞ்சனாக இருந்ததற்கும் சேர்த்துவைத்து நிறைய செலவுவைப்பாளாம். நான் தாராளமான செலவாளிதான். எனக்குப் பிறந்த இருவரும் மகள்களே. மகன், மகள் என்று மாற்றி மாற்றிப் படைப்பது இயற்கையின் பேலன்ஸ்!

தினந்தோறும் வாழை இலையில் சாதம் சாப்பிட்டால் முடி நரைக்காதாமே... உண்மையா?

ரொம்ப உண்மை! இலையையும் சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் பச்சை நிறத்தில் முடி வளரும் என்கிற அளவுக்கு நீங்கள் சொல்வது உண்மை!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

உயரமான பெண்கள் எல்லாம் கவர்ச்சி யானவர்களா சார்?

உயரமான பெண்களைவிடவும் உயரமான ஆண்களின் கண்களுக்குக் கவர்ச்சி! அழகாகவே இருந்தாலும், உங்கள் முன்னிலையில் 'அவதார்' பட ஹீரோயின் உயரத்துக்கு ஒரு பெண் வந்து நின்றால் எப்படி இருக்கும்? ஜெயப்பிரகாஷ் 'பயப் பிரகாஷ்' ஆகிவிடுவீர்கள். எப்போதும் ஜோடி தோதாகஇருப் பது நல்லது. ஆகவே தான் 'ஜோடிப் பொருத்தம்' என்கிறோம்!

பொன்விழி, அன்னூர்.

நரி முகத்தில் விழித்தால் நல்லதா? - ஹாய் மதன்-கேள்வி பதில்

டைட்டானிக் கப்பல் இப்போதும் கடலில் மூழ்கியே கிடக்கிறதா?

பின்னே?! டைட்டானிக் என்கிற 11 மாடி உலக சொகுசுக் கப்பல் ஏப்ரல் 14, 1912-ல் ஐஸ் பாறை மீது மோதி மூழ்கியது. 1,500-க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விபத்தில் பலியானார்கள். இன்று டைட்டானிக், அட்லான்டிக் கடலின் அடியில், 13,000 அடி ஆழத்தில் கிடக்கிறது. சுமார் நான்கு கி.மீ. ஆழம். இது என்ன ஆழம் தெரியுமா? ஈஃபில் டவர் உயரம் 984 அடி. அதாவது மூழ்கி இருக்கும் டைட்டானிக் அருகே 13 ஈஃபில் டவர்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்தால் கடல் மட்டம் வரும். இன்று டைட்டானிக் உலக மகா ஆழமான மாபெரும் கல்லறை!

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

நரி முகத்தில் விழித்தால் நல்லதா? - ஹாய் மதன்-கேள்வி பதில்

ஊறுகாயைக் கண்டுபிடித்தவர்கள் யார்? உமக்குப் பிடித்த ஊறுகாய் எது?

உப்பும் மிளகாயும் வந்த உடனேயே ஊறுகாயும் தோன்றிவிட்டது. குளிர்ச் சாதனப் பெட்டிகள், ஐஸ் கட்டிகள் போன்றவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு 'கெட்டுப்போகாமல் பாதுகாக்கக்கூடிய' (preserve) ஒரே உணவுப் பதார்த்தம் ஊறுகாய்தான். அதாவது, காய் கறிகளை நறுக்கி உப்புத் தண்ணீரில் ஊறவைத்து, உலர்த்தி புளித் தண்ணீர் கலந்து ஜாடிகளில் போட்டுவைப்பார்கள். எதோடு வேண்டுமானாலும் கலந்து சாப்பிடலாம். நான் சிறுவனாக இருந்தபோது, தஞ்சா வூரில் என் தாத்தா வீட்டில், தனியாக ஓர் அறையில் அலிபாபா கதையில் வருவதுபோன்ற இடுப்பு உயர ஜாடியில் மாங்காய் தொக்கை பாட்டி தயாரித்து நிரப்பிவைத்திருப்

பார். மாதக்கணக்கில் கெட்டுப் போகாமல் ஜம்மென்று இருக்கும். அவ்வப்போது அந்த அறைக்குச் சென்று மூடியைக் கழற்றி, ஊறுகாய் வாசனையை மெய்மறந்து முகர்ந்து பார்ப்பது என் வழக்கம். ஊறுகாய் என்று இல்லை, எந்த உணவு சம்பந்தப்பட்ட பதிலாக இருந்தாலும் சரி, படித்த உடனே எனக்கு ஒரு போன் வருவது வழக்கம். எதோடு எந்த ஊறுகாயைத் தொட்டுக் கொள்ள வேண்டும், எப்படி எல்லாம் ஊறுகாய் தயாரிப்பது என்று அவ்வளவு ஊறுகாய்ச் சுவையோடு, நுணுக்கமாக போனில் விளக்குவார் அவர். நம்மிடையே அவர் இப்போது இல்லை என்பதை நினைக்கும்போது வருத்தம் மேலிடுகிறது. மறைந்த சிறுகதை ராணி அனுராதாரமண னைக் குறிப்பிடுகிறேன்!

எஸ்.ராஜமழை, சின்னமனூர்.

வாழ்க்கையில் எந்த மாதிரி நபரை நாம் சந்திக்கக் கூடாது?

நம்மைப் பார்த்துப் பொறாமைப்படுகிற, நம்மைப்பற்றித் தவறாக வெளியே (புறம்!) பேசுகிற, நாம் வீழ்ச்சியடைய வேண்டும் என்று ஆசைப்படுகிற நபரைச் சந்திக்கக் கூடாது. ஆனால், அவர் யார் என்பதைக் கண்டுபிடிப்பதுதான் பிரச்னை!

நரி முகத்தில் விழித்தால் நல்லதா? - ஹாய் மதன்-கேள்வி பதில்

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

இன்றைய அரசியலில் நாடோடி மன்னர்கள் யாரும் இருக்கிறார்களா?!

ஓட்டுக்காக நாடு முழுவதும் ஓடுகிற மன்னர்கள் உண்டு. நாடு ஓடி... அதாவது, நாட்டைவிட்டு ஓடுபவர்களுக்கு உதவுகிற மன்னர்கள் உண்டு. 'போபால் கொலைகார' ஆண்டர்சனை ஸ்பெஷல் விமானத்தில் ஏற்றித் தப்பிக்கவிட்ட மன்னர்கள்!

காதலை மறப்பதற்கு சான்ஸ் உண்டா?

'மறந்தால் அது காதல் அல்ல!' என்கிற பதிலை என்னிடம் இருந்து வரவழைக்க வேண்டி இப்படி ஒரு கேள்வி கேட்கக் கூடாதம்மா!

நரி முகத்தில் விழித்தால் நல்லதா? - ஹாய் மதன்-கேள்வி பதில்
நரி முகத்தில் விழித்தால் நல்லதா? - ஹாய் மதன்-கேள்வி பதில்