Published:Updated:

டீன் கொஸ்டீன் - பெயருக்குப் பின் தபால் வழிப் பட்டம் போடலாமா?

டீன் கொஸ்டீன் - பெயருக்குப் பின் தபால் வழிப் பட்டம் போடலாமா?


டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன் - பெயருக்குப் பின் தபால் வழிப் பட்டம் போடலாமா?
டீன் கொஸ்டீன் - பெயருக்குப் பின் தபால் வழிப் பட்டம் போடலாமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டீன் கொஸ்டீன் - பெயருக்குப் பின் தபால் வழிப் பட்டம் போடலாமா?
டீன் கொஸ்டீன் - பெயருக்குப் பின் தபால் வழிப் பட்டம் போடலாமா?

கே.உசேன், சென்னை-116

"நான் ப்ளஸ் டூ படிக்கிறேன். சி.ஏ. படிக்க ஆசை. ஆனால், ஏ.சி.சி.ஏ என்று ஒரு படிப்பு உள்ளது. அது சி.ஏ-க்கு இணையானது என்கிறார்கள். இரண்டில் எது பெஸ்ட்?"

ஜி.ஆர்.ஹரி, சார்ட்டட் அக்கவுன்டன்ட்
(மனோகர் சவுத்ரி அசோசியேட்ஸ் பார்ட்னர்)

டீன் கொஸ்டீன் - பெயருக்குப் பின் தபால் வழிப் பட்டம் போடலாமா?

"இந்தியாவில் சி.ஏ.(chartered accountancy), ஏ.சி.எஸ். (Company Secretary ), ஐ.சி.டபிள்யூ.ஏ. (Cost and Works Accountants) என்று இந்த மூன்று படிப்புகளுக்குத்தான் அங்கீகாரம் உள்ளது. வேலைவாய்ப்புச் சந்தையில் இந்த வரிசைப்-படிதான் வாய்ப்புகள் அளிக்கப்படு-கின்றன. சி.ஏ. புதிதாக முடித்துவிட்டு வருபவர்களுக்கே மாதச் சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் முதல் கிடைக்-கும். ஏ.சி.சி.ஏ போன்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் படிப்புகள் இந்தியாவில் உள்ளன. இவற்றுக்கு உள்ளூரி-லேயே பயிற்சி மையங்கள் இருக்கும். ஆனால், அவற்றைப் படிப்பதால் பெரிய அளவில் வாய்ப்பு இருக்காது. சி.ஏ. படிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால், முடித்தால் வேலைவாய்ப்பு நிச்சயம். வெளிநாட்டில் இருந்து வழங்கப்படும் ஏ.சி.சி.ஏ போன்ற படிப்புகள் அறிவைக் கூடுதலாக வளர்த்துக்கொள்ள உதவும்!"

பி.ராஜன், திருப்பூர்.

"நான் தபால் வழியில் பி.ஏ., படிக்க ஆரம்பித்து, இரண்டு வருடங்கள் தேர்வும் எழுதினேன். மூன்றாம் வருடத் தேர்வு எழுதவில்லை. அந்தப் படிப்பையும் முடிக்கவில்லை. இந்நிலையில் நான் என் பெயருக்குப் பின்னால் 'பி.ஏ' என்று பட்டம் போட்டுக்கொள்ளலாமா? (இரண்டு மாதத்தில் எனக்குத் திருமணம்.)"

திருவாசகம்
துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்.

டீன் கொஸ்டீன் - பெயருக்குப் பின் தபால் வழிப் பட்டம் போடலாமா?

"பி.ஏ. படித்துவிட்டேன் என்று சொல்லி பெண் தேடினீர்களா? இறுதி ஆண்டுத் தேர்வு எழுதியிருந்தாலும்கூட, பெயருக்குப் பின்னால் பட்டம் போட்டுக்கொள்ளக் கூடாது. என்றைக்கு கல்லூரி யில் - பல்கலைக்கழகத்தில் இருந்து மதிப்பெண் சான்றிதழைக் கையில் வாங்குகிறீர்களோ, (மதிப்பெண் சான்றிதழில் பாஸ் என்று போட்டிருக்க வேண்டும்) அந்த தினத்தில் இருந்துதான் உங்கள் பெயருக்குப் பின்னால் பட்டத்தைப் போட்டுக்கொள்ள வேண்டும். சிலர் பி.ஏ. என்று எழுதிவிட்டு, அதற்கு மேல் கோடு போடுவார்கள். சிலர் அடைப்புக்குறிக்குள் பி.ஏ., எம்.ஏ., என்று போடுவார்கள். இதுவும் தவறுதான்!"

எஸ்.ஆர்.குமார், திருச்சி-20

"நான் 21 வயது இளைஞன். ஆனால், என் குரல் பெண் குரல்போல இருக்கும். ஆண் குரலாக மாற்ற ஏதேனும் வழி உள்ளதா?"

டாக்டர் எம்.குமரேசன்,
ஈ.என்.டி. அறுவை சிகிச்சை நிபுணர்.

டீன் கொஸ்டீன் - பெயருக்குப் பின் தபால் வழிப் பட்டம் போடலாமா?

"இதை உடனடியாகச் சரிசெய்துவிடலாம். உங்களுக்கு இருக்கும் பிரச்னையை Puberphonia என்று சொல்வார்கள். 16 வயதுக்குக் கீழ் ஆண் - பெண் இருவருக்கும் பெண் குரல்தான் இருக்கும். 16 வயதில் குரல் மாற்றம் ஏற்படுவது இயற்கை. இதைக் குரல் உடைவது என்போம். இந்த நேரத்தில் ஆண்களுக்குக் குரல் வளையின் நீளம் அதிகம் ஆகும். adam's apple என்று சொல்லக்கூடிய ஓர் எலும்பு துருத்திக்கொண்டு வருவதை ஆண்களின் கழுத்தில் காணலாம். அது சரியான அளவு வளர்ச்சி பெறவில்லை என்றால், பெண் குரலாக இருக்கும். இந்த எலும்பு எலாஸ்டிக் தன்மைகொண்டது. இதை நீட்டிவிட்டாலே போதும். இதற்கு நாங்கள் எண்டோஸ்கோப் வைத்துள்ளோம். இதன் பிறகு, தொடர்ந்து ஸ்பீச் தெரப்பி செய்ய வேண்டும். இப்படித் தொடர்ந்து பயிற்சி செய்தால் ஆறே மாதங்களில் ஆண் குரல் பெற முடியும்!"

எஸ்.மகேஸ்வரி, திண்டுக்கல்.

"என் மகளுக்கு ஐந்து வயது. தினமும் தூக்கத்தில் அதிகமாகப் பல் கடிக்கிறாள். அவளுக்கு என்ன பிரச்னை. இதை எப்படிச் சரிப்படுத்துவது?"

டாக்டர் கே.மீர்முஸ்தபா உசேன், குழந்தைகள் நல மருத்துவர்.

டீன் கொஸ்டீன் - பெயருக்குப் பின் தபால் வழிப் பட்டம் போடலாமா?

"வயிற்றில் புழுக்கள் இருந்தால்கூட இதுபோன்று பல் கடிக்கலாம். இது நிரந்தரமான வியாதி கிடையாது. தற்காலிகமானதுதான். எனவே, கவலைப்பட வேண்டாம். குழந்தைகள் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். பொதுவாக, இப்படிக் குழந்தைகள் பல் கடிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. குழந்தைகள் மனநலப் பிரச்னை காரணமாக (child psychological problem) இருக்கலாம். இல்லையென்றால் மூளையில் மைல்ட் இரிடேஷன் இருக்கலாம். எப்படி இதயத்துக்கு இ.சி.ஜி. எடுக்கிறோமோ அதுபோல மூளையின் எலெக்ட்ரிக்கல் செயல்பாட்டைப் பதிவுசெய்து பார்க்க Electroencephalography என்று உள்ளது. அப்படி டெஸ்ட் செய்து பார்க்கும்போது, எந்தப் பிரச்னையும் இல்லை என்றால், வயிற்றில் புழுக்களின் தொந்தரவாக இருக்கும். அதைக் குணப்படுத்திவிடலாம்!"

வி.குமார், சென்னை-44.

"எனக்கு வீட்டில் பெண் பார்த்துத் திருமணம் நிச்சயித்திருக்கிறார்கள். 'ஒரு பைசா வரதட்சணைகூட வாங்கக் கூடாது' என்பது என் பாலிசி என்று பெண் வீட்டாரிடம் நான் கண்டிப்பாகக் கூறிவிட்டேன். ஆனால், அவர்கள் தரப்பில், 'எங்கள் பெண்ணுக்கு நாங்கள் விருப்பப்பட்டதைச் செய்கிறோம்' என்று சொல்லி இருக்கிறார்கள். எனக்கு அதுகூட விருப்பம் இல்லை என்றாலும், மிகவும் அழுத்தமாக மறுக்கவும் முடியவில்லை. என் எதிர்கால நலனுக்கு 'நான் வரதட்சணை பெற்றுக்கொள்ளவில்லை' என்று ஏதேனும் பத்திரத்தில் அவர்களிடம் கையெழுத்து பெற்றுக்கொள்ளலாமா?"

அழகுராமன், வழக்கறிஞர்.

டீன் கொஸ்டீன் - பெயருக்குப் பின் தபால் வழிப் பட்டம் போடலாமா?

"வரதட்சணை வாங்குவது குற்றம் என்று வலியுறுத்தும் அதே சட்டம், 'சீதனம்' என்பதை அனுமதிக்கிறது. அதாவது, எந்த வற்புறுத்தலும் இல்லாமல் பெண் வீட்டார் அவர்களாக விருப்பப்பட்டுக் கொடுப்பது. நீங்கள் தற்போது 'நானாகக் கேட்டு வரதட்சணை வாங்கவில்லை' என்று எழுதி வாங்கிக் கொண்டாலும், பின்னாட்களில் பிரச்னை என்று வரும்போது பெண் வீட்டார் அப்போதுதான் வரதட்சணை கேட்பதாகப் புகார் கொடுக்கலாம். அந்த சமயம் நீங்கள் முன்னர் கையெழுத்து வாங்கிய பத்திரத்தால் எந்தப் பயனும் இல்லை. இவற்றையெல்லாம் மறந்துவிடுங்கள். பரஸ்பர நம்பிக்கை எந்த ஒரு புது உறவு முகிழ்ப்பதற்கும் முதல் முக்கியத் தேவை. அதை மனதில்கொண்டு உங்கள் இல்லற வாழ்வைத் துவக்குங்கள். வாழ்த்துக்கள்!"

டீன் கொஸ்டீன் - பெயருக்குப் பின் தபால் வழிப் பட்டம் போடலாமா?
டீன் கொஸ்டீன் - பெயருக்குப் பின் தபால் வழிப் பட்டம் போடலாமா?