Published:Updated:

மரணம் எப்போது அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்

மரணம் எப்போது அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்


ஹாய் மதன் கேள்வி பதில்
மரணம் எப்போது அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்
மரணம் எப்போது அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மரணம் எப்போது அழகு?
மரணம் எப்போது அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்
மரணம் எப்போது அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

மரணம் எப்போது அழகானது?

தாய்நாட்டு மண்ணைக் காக்கும்போது. அந்த உன்னதமான பணியில் ஈடுபட்டு இருக்கும்போது நிகழும் மரணமே அழகானது!

ஹாக்கி மட்டைக்கும் வீச்சரிவாளுக்கும் என்ன ஒற்றுமை... வேற்றுமை?

ஒற்றுமை... 'ஷேப்'தான். மற்றபடி, ஹாக்கி மட்டைக் குப் பந்து ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு இருக்கும். வீச்சரிவாள், தானே பந்தைத் தயாரித்துக்கொண்டாக வேண்டும். அதாவது, 'தலை' என்கிற பந்தை! அட, நிஜந்தாங்க, ஒரு காலத்தில் மங்கோலியா, ஆப்கானிஸ்தானில் எல்லாம் போரில் வெற்றிபெற்ற பிறகு, எதிரி நாட்டு மன்னனின் தலையை வெட்டி எடுத்துவந்து மைதானத்தில் (குதிரை மீது அமர்ந்து நீண்ட 'ஹாக்கி' மட்டையுடன்) 'போலோ' விளையாட்டில் ஈடுபடுவது சம்பிரதாயம்!

கே.சாயிநாராயணன், ஸ்ரீரங்கம்.

மரணம் எப்போது அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்

நாம் சாலையில் நடக்கும்போது எந்தத் திசையில் நடக்க வேண்டும்?

பழக்கம் காரணமாக நாம் எப்போதும் தெருவின் இடது பக்கமாகத்தான் நடக்கிறோம். அது தவறு என்பது என் கருத்து. காரணம், பின்னால், ஓரமாக வரும் வண்டிகளை நாம் பார்க்க முடியாது. வலது புறத்தில் நடந்தால் அந்தப் பிரச்னை கிடையாது. ஆனால், நம் ஊரில் கீழேயும் பார்த்துக்கொண்டு நடக்க வேண்டும். பள்ளத்தில் விழுந்து காலை உடைத்துக்கொண்டால், பிறகு இடது, வலது எந்தப் பக்கத்திலும் நடக்க முடியாது!

வி.ஜி.சத்தியநாராயணன், சென்னை-61.

முற்பிறவி, மறுபிறவி என்பது உண்மையா?

யாருக்குத் தெரியும்?! முற்பிறவியில் இதே கேள்விக்கு 'இல்லை' என்று நான் பதில் சொல்லித் தொலைத்திருக்கலாம். ஆகவே, இந்தப் பிறவியில் நான் 'கமிட்' பண்ணிக்கொள்வதாக இல்லை!

தேவசேனாதிபதி, வேலூர்.

ஹீரோவைக் கயிறு கட்டி மேலே தூக்குவது, டாடா சுமோ எரிந்துகொண்டே மேலே போய்க் கீழே விழுவது, ஹீரோயின் மாராப்பு இல்லாமல், ஹீரோவிடம் காட்ட மாட்டேன் எனச் சொல்லி, திரும்பி நமக்கெல்லாம் காட்டுவது, மெசேஜ் சொல்றேன் என்று முகத்தை 30 டிகிரி கோணலாகவைத்துக்கொண்டு நீண்ட வசனம். ஏன், இப்படிப் போய்விட்டது தமிழ் சினிமா?

இப்படிச் சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள் இல்லையா? தமிழ் சினிமா விரைவில் 'இம்ப்ரூவ்' ஆகிவிடும். கவலைப்படாதீர்கள்!

கற்பனைச் சித்திரமான திருவள்ளுவருக்கு அவ்வளவு பெரிய சிலை அவசியமா? இதனால் பயன் என்ன?

ஆலயங்களிலும் ஓவியங்களிலும் ராமர், கிருஷ்ணர், விநாயகரை எல்லாம் பார்க்கிறீர்கள். உலகெல்லாம் இயேசு நாதர், புத்த பகவான் சிலைகள் இருக்கின்றன. இவர்கள் எல்லோரும் நிஜமாகவே அப்படித்தான் தோற்றம் அளித்தார்களா? ஏன், அசோகர், சந்திரகுப்தர், ராஜராஜசோழன் போன்ற மாமன்னர்கள் எப்படித் தோற்றம் அளித்தார்கள்? யாருக்கும் தெரியாது. எந்த ஆதாரமும் நமக்குக் கிடையாது. எல்லாமே கற்பனை உருவங்கள்தான். தமிழ் மண்ணில் வள்ளுவர் இருந்தார். அல்லது வள்ளுவர்கள் இருந்தனர். இது சத்தியம். சிலை என்பது ஒரு காம்ப்ரமைஸ் தோற்றம். அவ்வளவே!

தமிழர்கள் அனைவரும் ஒருசேர அடையும் பெருமித உணர்ச்சிக்காகத்தான் சிலை, ஆலயம் எல்லாம். நம்மை எல்லாம்இணைக் கும் சக்திதான் வள்ளுவர் சிலை!

சு.மு.சுரேஷ், தகட்டூர்.

மரணம் எப்போது அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்

மது, மாது, சூது என எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவன்தான் முழு மனிதன் என்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீங்கள் சொன்ன எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத, ஆனால், மிகவும் வஞ்சகமான மனிதர்களை நான் சந்தித்து இருக்கிறேன்!

பஞ்ச் தர்மா, வெள்ளாளப்பட்டி.

இரண்டு மனைவிகள்கொண்ட கடவுள்களை வணங்குகிறோம். இரண்டு மனைவிகள்கொண்ட மனிதர்களைப் பார்த்து 'தேவையா' என்கிறோமே?

ஒரே காரணம், கடவுள்களைப் பார்த்து நாம் யாருமே பொறாமைப்படுவது இல்லை!

மரணம் எப்போது அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்
மரணம் எப்போது அழகு? - ஹாய் மதன்-கேள்வி பதில்