Published:Updated:

டூயட் கிளினிக் அழகா... அலகா?

டூயட் கிளினிக் அழகா... அலகா?


டூயட் க்ளினிக்
டூயட் கிளினிக் அழகா... அலகா?
டூயட் கிளினிக் அழகா... அலகா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அழகா... அலகா?
டாக்டர் டி.நாராயண ரெட்டி
டூயட் கிளினிக் அழகா... அலகா?
டூயட் கிளினிக் அழகா... அலகா?

இந்தச் சம்பவம் நடந்தது தமிழ்நாட்டில் என்றால் நம்புவீர்களா?

கசப்பாகத்தான் இருக்கும். நம்புங்கள்.

"சார்... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. நீங்கதான் சரிபண்ணணும்" என்று சொன்ன அந்த இளைஞன் முகத்தில் கலவர நிலவரம். விசாரித்ததில் ஃபேன்ஸி அது இதுவென்று ஆண் உறுப்பில் சிறு வளையம் மாட்டிக்கொண்டு இருக்கிறான். அது உறவின்போது எசகுபிசகாக மாட்டி ரத்தம் பீறிட்டதுதான் கலவரத்துக்குக் காரணம்.

காலங்காலமாக பெண்கள் காதில், மூக்கில் துளையிட்டு அணிகலன் அணிந்து வருகின்றனர். இது மரபு, கலாசாரம், பண்பாடு போன்றவற்றைச் சார்ந்ததாகவே இன்றும் உள்ளது. இந்தப் பழக்கம் ஃபேஷன் என்ற போர்வையில் தொப்புள், புருவம் போன்ற இடங்களில் அணியும்விதமாக இன்று வளர்ந்து நிற்கிறது.

ஆண்களும் காது குத்திக் கடுக்கன் போடுகிறார் கள். புருவத்தில் சின்னஞ் சிறு ஆணி போன்ற அணிகலனை அணிகிறார்கள். இப்படி உறுப்புகளில் அணிகலன் அணிவதற்கு body piercing என்று பெயர்.

பழங்காலத்தில் உலோகம், எலும்புத் துண்டு, சோழி, தந்தம், கண்ணாடி போன்றவற்றால் ஆன நகைகளை அணிந்தார்கள். முன்பு எகிப்திய மன்னர்கள் Symbol of Royality என்பதன் அடையாளமாகத் தொப்புளில் வளையம் அணிந்தனர். ரோம் நகர ஆண்களிடம் மார்பக நுனியில் வளை யம் அணியும் பழக்கம் இருந்தது. மாயன்ஸ் என்கிற இனத்தினரிடம் நாக்கில் துவாரம் இட்டு அதில் நகை அணியும் வழக்கம் இருந்தது. அப்படி அணிந்தால் ஆண்மைச் சக்தி அதிகரிக்கும் என்று நம்பினார் கள்.

விக்டோரியா மகாராணி காலத்தில் இங்கிலாந்தில் வளையம் அணிந்த ஆணுடன் உறவுகொண்டால் பெண்ணுக்கு நிறைய இன்பம் கிடைக்கும் என்று நம்பிக்கை. எகிப்தில் பெண்கள் தங்கள் பிறப்பு உறுப்பில் வளையம் அணிந்தார்கள். நம் நாட்டில் உறுப்புகளில்அணிகலன் அணிவதுபற்றி வாத்ஸ்யாயனரும் குறிப்பிட்டுள்ளார். உடல் ஆரோக்கியம், பிரார்த்தனை போன்ற அடிப்படையில்தான் இவை அணியப்பட்டன.

இப்படி அணிவது ஃபேஷன் சடுகுடுவாக மாறிப்போன இந்நாளில், கண்ட இடங்களில் அணிகிற பொருள் அலர்ஜியை ஏற்படுத்தலாம். குத்திக்கொள்ளும் இடத்தில் கறுப்புத் தழும்பு (scar) வரலாம். துணி, செயின் போன்றவை பட்டு சதை பிய்த்துக்கொள்ளலாம். ஃபேஷன் பிரியர்கள் இதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவையற்ற இடங்களில் அணிகலன் அணிவதால் செக்ஸ் செயல்பாடோ, சுகமோ ஒரு டீஸ்பூன் அளவுகூட அதிகரிக்காது என்பதே நிஜம். அவஸ்தைதான் மிஞ்சும். மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக இதுபோன்று அணிவது எல்லோரையும் வசீகரிக்காது என்பதை மனதில்வையுங்கள்!

விரைவில்
நைந்து கிழிந்தே போகக்கூடும்
நான் புரட்டிக்கொண்டே இருக்கும்
உன் ஞாபகங்கள்!

- சல்மா

டூயட் கிளினிக் அழகா... அலகா?
டூயட் கிளினிக் அழகா... அலகா?