திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

கோடி வீட்டுத் திருமணம்!

கோடி வீட்டுத் திருமணம்!

இணைப்பு : திருமணம் விகடன்
கோடி வீட்டுத் திருமணம்!
கோடி வீட்டுத் திருமணம்!
கோடி வீட்டுத் திருமணம்!
 
கோடி வீட்டுத் திருமணம்!
கோடி வீட்டுத் திருமணம்!
கோடி வீட்டுத் திருமணம்!

பில்லியன்களில் செலவழித்து உலகை மிரளவைத்த காஸ்ட்லி திருமணங்கள் இது!

1981-ம் ஆண்டு நடைபெற்ற துபாய் இளவரசர் ஷேக் முகமது பின் ரஷீத், இளவரசி சலாமாவின் திருமணச் செலவு 44.5 மில்லியன் டாலர்கள். அப்போது துபாயில் இவ்வளவு பேர் ஒரே இடத்தில் குழும இடம் இல்லை. யோசிக்காமல், ஒரு விளையாட்டு மைதானத்தையே உருவாக்கிவிட்டார்கள். திருமணத்துக்கு ஒரு மாதம் முன்பே கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. மணமகன் ஷேக், தன் குதிரையில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பரிசுகளை வழங்கி வாழ்த்து பெற்றார்.

ரியல் எஸ்டேட் மகாராஜா டொனால்ட் டிரம்ப்பின் மூன்றாவது

கோடி வீட்டுத் திருமணம்!

திருமணம் ஸ்லோவேனிய மாடல் மெலனியாவுடன் 2005-ல்நடந் தது. மெலனியாவின் உடை மட்டும் இரண்டு லட்சம் டாலர்கள்.திருமணத்தில் சமைப்பதற்காக உலகம் முழுக்க இருந்து 45 தலைசிறந்த சமையல்காரர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தார்கள்.

ரஷ்யத் தொழிலதிபர் ஆன்ட்ரோ, அலெக்சான்ட்ரா என்பவரை 2005-ம் ஆண்டு திருமணம் செய்தார். பிரபல பாப் பாடகிகள் விட்னி ஹ¨ஸ்டன், கிறிஸ்டினா அகிலேராவின் இருவரையும் 3.6 மில்லியன் டாலர் பணம் கொடுத்துப் பாடுவதற்கு புக் பண்ணியிருந்தார் தொழிலதிபர் ஆன்ட்ரோ. திருமண நாளன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் கிரிஸ்டினாவின் இசை நிகழ்ச்சி இருந் ததால், அவர் திருமணத்தில் பாடத் தயங்கினார். திருமணம் முடிந்ததும் தனி விமானம் மூலம் கிறிஸ்டினாவை அனுப்பிவைத்தார் ஆன்ட்ரோ!

கோடி வீட்டுத் திருமணம்!

ஆஸ்கர் புகழ் நடிகை லிசா மின்னெல்லிக்கும், சினிமா தயாரிப்பாளர் டேவிட் கெஸ்டுக்கும் நடைபெற்ற திருமணச் செலவு 3.7 மில்லியன் டாலர்கள். எலிசபெத் டெய்லர் மணப்பெண் தோழியாகவும், மைக்கேல் ஜாக்சன் மணமகன் தோழனாகவும் இருந்தார்கள். 60 இசைக் குழுக்கள் மாறி மாறி இசை நிகழ்ச்சி நடத்தி அரங்கையே கிறங்கடித்தது. 12 அடுக்குகள் உயரமுள்ள பிரமாண்டமான கேக்கை வெட்டினார் லிசா. பூக்களுக்காக 7 லட்சம் டாலர்களும், திருமண கேக்குக்காக 40 ஆயிரம் டாலர்களும் செலவழித்தார்கள்!

 

 
கோடி வீட்டுத் திருமணம்!
-அ.ஐஸ்வர்யா
கோடி வீட்டுத் திருமணம்!