திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

முத்தத் திருமணம்!

முத்தத் திருமணம்!

இணைப்பு : திருமணம் விகடன்
முத்தத் திருமணம்!
முத்தத் திருமணம்!
முத்தத் திருமணம்!
 
முத்தத் திருமணம்!
முத்தத் திருமணம்!

லகின் விநோதமான சில திருமணக் கலாசாரங்கள்...

ஸ்காட்லாந்து நாட்டில் திருமணத்துக்கு முன்பு மணப்பெண்ணை அழுக்காக்குவது என்று ஒரு சடங்கு உண்டு. அழுகிய முட்டை, பல்வேறு சாஸ்கள், பறவை றெக்கைகள் என மோசமான துர்நாற்றம் அடிக்கும் பொருட்களை மணப்பெண்ணின் மேல் வீசுவார்கள். பிறகு, அழுக்காக இருக்கும் அந்தப் பெண்ணைக் கழுதை மேல் ஏற்றாத குறையாக எல்லோரும் பார்க்கும்படி ஊர் முழுக்கச் சுற்றி வரச் செய்வார்கள்!

முத்தத் திருமணம்!

ஜெர்மனியில் ஒரு பழக்கம். திருமணத்துக்கு முந்தைய நாள் மாலை ஓர் இடத்தில் எக்கச்சக்க செராமிக் பாத்திரங்களைப் போட்டு உடைப்பார்கள். அதை மாப்பிள்ளையும் பெண்ணும் சேர்ந்து கூட்டிப் பெருக்கித் தள்ள வேண்டும். புது வாழ்க்கையை ஒற்றுமையுடன் சுத்தமாக ஆரம்பிக்க இப்படி ஓர் ஐடியா!

ஸ்வீடனில் திருமணமான பெண்கள் சில நாட்களுக்கு காலில் நாணயங்களைச் சுமந்து செல்ல வேண்டும். இடது கால் ஷூவுக்குள் தந்தையிடம் பெற்ற வெள்ளி நாணயத்தையும், வலது ஷூவுக்குள் அம்மா கொடுத்த தங்க நாணயத்தையும் வைத்துக்கொள்ள வேண்டும்.

இன்னொரு ஸ்வீடன் நாட்டுச் சடங்கு இது. திருமண வரவேற்பின்போது மாப்பிள்ளையையும், மணப்பெண்ணையும் விருந்துக்கு வந்தவர்கள் எல்லோரும் முத்தமிடுவார்கள். சும்மா இல்லை... மாப்பிள்ளை வெளியே சென்றால் படாரென அந்த அறையில் உள்ள ஆண்கள் மணப்பெண்ணை முத்தமிடக் குவிந்துவிடுவார்கள். அதேபோல் மணப்பெண் மாப்பிள்ளையைவிட்டு நகர்ந்தால், எல்லாப் பெண்களும் மாப்பிள்ளைக்கு கிஸ்ஸடிக்க கியூ கட்டி நிற்பார்கள்!

முத்தத் திருமணம்!

பிரெஞ்சுக்காரர்கள் கொஞ்சம் ஓவராக யோசித்துக் கண்டுபிடித்த சடங்கு இது. முதலிரவு அறைக்குள் பெண்ணும் பையனும் போன பிறகு அந்த வீட்டு வாசலில் பாத்திரங்களைத் தட்டி, ஹாரன்களை ஊதி எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கேவலமாக வாசித்து இம்சை செய்வார்கள். தாங்க முடியாமல் அந்த ஜோடி வெளியே வந்து பார்ட்டிக்குப் பணம் கொடுத்தால்தான் இம்சை அரசர்கள் போவார்கள்!

இத்தாலியில் திருமணம் முடிந்ததும் இருவரின் கைகளிலும் ஒரு பூ ஜாடியைக் கொடுத்து உடைக்கச் சொல்வார்கள். அது எத்தனை துண்டுகளாக உடைகிறதோ அத்தனை வருடங்கள் அந்த ஜோடி சேர்ந்திருக்கும் என்பது நம்பிக்கை!

 
முத்தத் திருமணம்!
-கார்த்திகா
முத்தத் திருமணம்!