திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

பாப்புலர் டும்டும்டும்!

பாப்புலர் டும்டும்டும்!

இணைப்பு : திருமணம் விகடன்
பாப்புலர் டும்டும்டும்!
பாப்புலர் டும்டும்டும்!
பாப்புலர் டும்டும்டும்!
 
பாப்புலர் டும்டும்டும்!
பாப்புலர் டும்டும்டும்!
பாப்புலர் டும்டும்டும்!

து உலகமே பார்த்து வியந்த படா திருமணங்கள்...

முதல் திருமணம் சார்லஸ் - டயானா ஜோடியுடையது. 35 ஆயிரம் மக்கள் நேரடியாகவும், 750 மில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலமாகவும் இவர் களின் திருமணத்தைப் பார்த்தார்கள். இன்று வரை இது உலக சாதனை. 1981-ம் ஆண்டு, ஜுலை 29-ம் தேதி லண்டனின் செயின்ட் பால் சர்ச்சில் நடைபெற்றது திருமணம். ஒரு சாமானியக் குடும்பத்துப் பெண் அரச குடும்பத்தின் மருமகளாவது இங்கிலாந்து வரலாற்றில் அதுதான் முதல் முறை. அதனால் உற்சாகமாகி ஆறு லட்சம் மக்கள் தெருக்களில் குழுமி ஆடிப் பாடி ஜோடியை வாழ்த்தினார்கள். அன்று நாட்டுக்கே அரசு விடுமுறை.

14 வைரங்கள் பதித்த மோதிரத்தை டயானாவுக்குப் பரிசளித்தார் சார்லஸ். திருமணத்துக்காக ஸ்பெஷல் கவுன் அணிந்திருந்தார் டயானா. அந்த கவுனின் நீளம் 25 அடி. அந்த கவுனில் 10 ஆயிரம் முத்துக்கள் பதிக்கப்பட்டிருந்ததை நாடே கண்டு பிரமித்தது.

பாப்புலர் டும்டும்டும்!

இதற்கு அடுத்து அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திருமணம் டிரிஸ்டா - ரயன் ஜோடியுடையது. இங்கே ராக்கி சாவந்த் நடத்திய சுயம்வர நிகழ்ச்சியின் ஒரிஜினல் வெர்ஷன்... 'பேச்சிலரெட்'. திருமணமாகாமல் இருக்கும் இளம்பெண் ஒருவர் தன்

பாப்புலர் டும்டும்டும்!

வாழ்க்கைத் துணையைப் பல சாய்ஸ்களில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். 2004-ம் ஆண்டு, ஏ.பி.சி தொலைக்காட்சியில் ஆரம்பித்த இந்த ஷோவின் முதல் ஜோடி டிரிஸ்டா - ரயன். ஏகப்பட்ட சாய்ஸ் இருந்தாலும் டிரிஸ்டா உள்ளூர் கால்பந்தாட்ட வீரர் ரயனைத் தேர்ந்தெடுத்ததில் மக்களுக்கு எக்கச்சக்க ஆச்சர்யம். திருமணத்தைப் பார்க்க நகம் கடித்துக் காத்திருந்தார்கள். இவர்களின் திருமணத்துக்காக நான்கு மில்லியன் டாலர் கள் செலவு செய்தது ஏ.பி.சி டெலிவிஷன். 70 ஆயிரம் டாலர் மதிப்புமிக்க கவுன், வைரங்கள் பதிக்கப்பட்ட செருப்பு டிரிஸ்டாவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. திருமணத்துக்காக 30 ஆயிரம் பிங்க் ரோஜாப்பூக்கள் ஹாலந்தில் இருந்து வரவழைக்கப்பட்டன. 14 நாடுகளைச் சேர்ந்த உணவு வகைகள் பரிமாறப்பட்டன. திருமணத்தோடு இல்லாமல், டிரிஸ்டா கர்ப்பம் தரித்தது, அவர்களுக்குக் குழந்தை பிறந்தது என பெர்சனல் பக்கங்களையும் தொடர்ந்து கொண்டாடியது அமெரிக்க மீடியா!

 
பாப்புலர் டும்டும்டும்!
-அ.ஐஸ்வர்யா
பாப்புலர் டும்டும்டும்!