திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

மறக்க முடியுமா?

மறக்க முடியுமா?

இணைப்பு : திருமணம் விகடன்
மறக்க முடியுமா?
மறக்க முடியுமா?
மறக்க முடியுமா?
 
மறக்க முடியுமா?
மறக்க முடியுமா?

நாடே நம்மைப் பார்த்துப் பிரமிக்கும் என்று கணக்குப்போட்டுச் செய்த பிரமாண்டத் திருமணம், அவருக்கே எதிராக மாறியதை மறக்க முடியுமா?

மறக்க முடியுமா?

ஜெயலலிதாவின் (அன்றைய) வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் சென்னையில் 1995 செப்டம்பர் 7-ம் தேதி நடந்தது. திருமணம் நடந்த எம்.ஆர்.சி. நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாலைகள் அரண்மனைபோல அலங்கரிக்கப்பட்டன. போயஸ் தோட்டம் முதல் திருமண அரங்கம் வரை வாழைமரம், தோரணம் கட்டப்பட்டு இருந்தது. மரங்களில் எல்லாம் சீரியல் லைட்டுகள் போட்டு, அந்தக் காலத்து ராஜா வீட்டுக் கல்யாணம்போலவே நடந்தது. சாலையெங்கும் ஒளி வெள்ளம், உடலெங்கும் வைரமும் தங்கமும் மின்ன தன் தோழி சசிகலா மற்றும் பரிவாரங்களுடன் மாப்பிள்ளை ஊர்வலத்தில் நடந்து வந்தார் ஜெயலலிதா. சந்தன மரத்தால் செய்யப்பட்ட சாரட் வண்டியில் இளவரசன் போல சுதாகரன் வர, போலீஸின் கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் மாப்பிள்ளை ஊர்வலம் வந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஒரே சமயத்தில் 12 ஆயிரம் பேர் உட்கார்ந்து சாப்பிடும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. திருமணத்தின்போது நகைக்கடைபோல வந்த சசிகலா அணிந்திருந்த நகைகளின் மதிப்பு மட்டும் அன்றைய தேதிக்கு எவ்வளவு என்று பிற்பாடு வந்த தி.மு.க. அரசாங்கம் கோடிகளில் கணக்குப் போட்டது. தங்க ஒட்டியாணம் மட்டும் 1.5 கோடி ரூபாய் என்று தகவல் சொன்னார்கள். மொய் மற்றும் பரிசுப் பொருட்கள் மதிப்பு 200 கோடி ரூபாயைத் தாண்டியதாகச் செய்திகள் வந்தன. ஆனால், மக்களின் நிலைமையோ வேறாக இருந்தது. திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்தில் சாலைகளில் அமைக்கப்பட்டு இருந்த அரண்மனை செட்களைப் பிரித்து மேய்ந்து, ஃபிளைவுட்களை எடுத்துச் சென்றனர் மக்கள். ஆடம்பர வளைவுகளின் கட்டைகளைப் பிரித்து அடுப்பு எரிக்கக் கொண்டுபோனார்கள். வாழை மரங்களை வெட்டி தண்டுகளைச் சமைக்கக் கொண்டு சென்றார்கள். ஜெ-வின் ஆட்சி பறிபோகவும், பல அரசியல் வீழ்ச்சிகளைச் சந்திக்கவும் காரணமாக அமைந்தது அந்த வளர்ப்பு மகன் கல்யாணம்!

 
மறக்க முடியுமா?
- பாபி
மறக்க முடியுமா?