திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

செட்டிநாட்டு கெட்டி மேளம்!

செட்டிநாட்டு கெட்டி மேளம்!

இணைப்பு : திருமணம் விகடன்
செட்டிநாட்டு கெட்டி மேளம்!
செட்டிநாட்டு கெட்டி மேளம்!
செட்டிநாட்டு கெட்டி மேளம்!
 
செட்டிநாட்டு கெட்டி மேளம்!
செட்டிநாட்டு கெட்டி மேளம்!
செட்டிநாட்டு கெட்டி மேளம்!

திருமணத்தைத் திருவிழா வாக நடத்துபவர்கள் காரைக்குடி செட்டிநாட்டுக்காரர்கள். நாட்டுக் கோட்டை செட்டியார் வீட்டின் பிரமாண்டச் சமையலும், சீர்வரிசையும் மலைக்கவைப்பவை!

பெரும் பாலான செட்டி யார் வீடுகளில் தாலி மட்டுமே 100 பவுன்கள் வரை இருக்கும். வீட்டில் பெண் குழந்தை பிறந்து விட்டால், சின்ன வயதில் இருந்தே திருமணத்துக்குச் சேமிக்கத் தொடங்கிவிடுவார்கள். தங்கம், வெள்ளி, பித்தளை, எவர்சில்வர், மரச் சாமான்கள் வரை சகலமும் முன்கூட்டியே திட்டமிட்டு வாங்கி வைப்பார்கள். திருமணமே இரண்டு, மூன்று நாட்கள் நடக்கும். முக்கியமாக இவர்கள் கல்யாண மண்டபங்களைத் தேடிப் போவது இல்லை. அந்தக் காலத்தில் இருந்து இப்போது வரை தங்களின் பாரம்பரியப் பூர்வீக வீட்டில் தான் திருமணங்களை நடத்துவது வழக்கம்.

செட்டிநாட்டு கெட்டி மேளம்!
செட்டிநாட்டு கெட்டி மேளம்!

திருமணம் பெண் வீட்டாருடையது என்பதால், முதல் நாளே மாப்பிள்ளை வீட்டார், அங்கு உள்ள கோயிலில் தங்கிவிடுவார்கள். மறுநாள், பெண் வீட்டார் சென்று அவர்களை மேள தாளத்தோடு அழைத்து வருவார்கள். முதலில் தங்கத்தில் செய்யப்பட்டு இருக்கும் பெரிய தாலியை, மணமகன் பெண் கழுத்தில் கட்டுவார். பிறகு, வைரத்தினால் ஆன மற்றொரு தாலியை மாப்பிள்ளை வீட்டின் சார்பாகக் கட்டுவார்கள். அதன் பின்னர் மேலும் இரண்டு செயின்கள் வைரம் மற்றும் தங்கத்தில் அணிவிப்பார்கள். கல்யாணப் புடவை மட்டும் குறைந்தது 30 ஆயிரம் ரூபாய்க்காவது எடுப்பார்கள். கோயில் கொடை கணக்காக ஊருக்கே பந்தல் போட்டு விளக்கொளியில் மின்ன விடுவார்கள். பெண்ணுக்கு நிகராக மாப்பிள்ளைக்கும் சீர்வரிசை வைக்கும் பழக்கம் இவர்களின் சமூகத்தில் உண்டு. ஒரு வருடத்துக்கு மணமகனுக்குத் தேவையான ஆடை, அழகுப் பொருட்கள் வரை சகலமும் உண்டு. மணப் பெண்ணுக்கோ கிலோ கணக் கில்வெள்ளியும், வெண்கலமும், டஜன் கணக்கில் பட்டுப்புடவைகளும் கொடுத்து அனுப்புவார்கள். தவிர, தாய் வழிச் சீதனமாக அம்மா தன் சீர்வரிசையை அள்ளிக்கொடுத்து அனுப்புவார்.

செட்டிநாட்டு கெட்டி மேளம்!

சாப்பாடு.... இன்னும் விசேஷம். திருமண தினத்தன்று காலை உணவாக 10 வகைப் பலகாரங்கள் உண்டு. மதிய உணவாக 11 வகை வெஞ்சனம், நாலு வகைக் குழம்பு என அமர்க்களம்தான்.

செட்டிநாட்டு கெட்டி மேளம்!

அனைத்துச் செலவுகளும் பெண் வீட்டாருடையது.

மணமேடை ஏறி தாலி கட்டி, விருந்து முடித்து, பெண்ணை அழைத்துப் போவது மட்டும்தான் மாப்பிள்ளையின் வேலை!

 
செட்டிநாட்டு கெட்டி மேளம்!
-இர.ப்ரீத்தி
செட்டிநாட்டு கெட்டி மேளம்!