திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

திருமதி குதிரை!

திருமதி குதிரை!

இணைப்பு : திருமணம் விகடன்
திருமதி குதிரை!
திருமதி குதிரை!
திருமதி குதிரை!
 
திருமதி குதிரை!
திருமதி குதிரை!

ரு மனிதர்களுக்கு இடையே திருமணம் நடந்தால் ஓ.கே! மனிதனுக்கும் விலங்குக்கும் திருமணம் நடந்தால்?

திருமதி குதிரை!

மிருகங்களுடன் நெருக்கமாகப் பழகும் பலர், இப்படிக் காதலித் துக் கைப்பிடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

சென் என்பவர் பீஜிங் நகரப் பெண். லண்டனில் படிக்கும்போது ஆலன் என்கிற குதிரை யோடு பழகினார். படிப்பு முடிந்து சென் கிளம்பும்போது, ஆலனால் தாங்க முடியவில்லை. சென் எங்கே சென்றாலும் பின் தொடர ஆரம்பித்தது. ஆலனின் அன்பை உணர்ந்து, சென் இப்போது அதற்கு மனைவியாகிவிட்டார்!

ஷரோன் டெண்ட்லர் என்ற 41 வயதுப் பெண், சிண்டி என்கிற டால்ஃபினைத் திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 15 வருடங்களாக சிண்டியை நேரில் சென்று பார்ப்பது ஷரோனின் பழக்கம். ஒருநாள் ஷரோன் வெளியூர் சென்றுவிட, சிண்டி தவித்துப் போய்விட்டதாம். அது வரை தனிமையில் வாழ்ந்த ஷரோன், உடனே சிண்டியைத் திருமணம் செய்துகொண்டார். தண்ணீரில் இருந்து பாய்ந்து வந்து சிண்டி நச்சென்று லிப் கிஸ் பண்ணியது தனிக் கதை!

கானா நாட்டைச் சேர்ந்த 29 வயது எமிலி, தான் வளர்த்த இரண்டு வயது நாயைத் திருமணம் செய்துகொண்டார். உறவினர்கள் வீட்டு வாசலில் நின்று திட்டித் தீர்த்தாலும் எமிலி அசரவில்லை. திருமணம் முடிந்த கையோடு எமிலி விட்ட ஸ்டேட்மென்ட் இது, ''நான் சொல்வது அனைத்தையும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் கேட்டுக்கொள்கிறது. இதைவிட நல்ல கணவன் எனக்குக் கிடைப்பானா?''

 
திருமதி குதிரை!
-கார்த்திகா, இரா.கோகுல்ரமணன்
திருமதி குதிரை!