திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

திருமரண அழைப்பிதழ்!

திருமரண அழைப்பிதழ்!

இணைப்பு : திருமணம் விகடன்
திருமரண அழைப்பிதழ்!
திருமரண அழைப்பிதழ்!
திருமரண அழைப்பிதழ்!
 
திருமரண அழைப்பிதழ்!
திருமரண அழைப்பிதழ்!

'கல்யாணம் ஆன நாள்ல இருந்து பேயோடுதான் குடித்தனம் நடத்திட்டு இருக்கேன்' என்று அபத்தமான ஜோக்குகள் தெரியும். நிஜமாகவே பேயைத் திருமணம் செய்து வாழ்பவர்கள்பற்றித் தெரியுமா?

இறந்துபோனவர்களுடன் உயிரோடு இருப்பவர்களைத் திருமணம் செய்துவைப்பது சீனாவிலும் சூடானிலும் பல வருடங்களாக இருந்து வரும் பழக்கம். இந்த வகைத் திருமணங்கள் நடப்பதற்குப் பல காரணங்கள். நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணத்துக்கு முன்னர் மணமகனோ அல்லது மணமகளோ சில சமயம் இறந்துவிடுவார்கள். அந்தச் சமயங்களில் சொத்துக்காகவோ, உறவுமுறைகள் அறுந்துவிடாமல் இருப்பதற்காகவோ, இறந்துபோனவரின் ஆவியோடு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

பெரும்பாலும் இவ்வகை மூட நம்பிக்கைத் திருமணங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இறந்துபோனவரோடு திருமணம் முடிந்த அடுத்த கணமே அந்த மணப்பெண்ணை விதவையாக அறிவித்துவிடுவார்கள். விதவையாக, மணமகனின் குடும்பத்தோடு இல்லாத புருஷனை நினைத்துக் கண்ணீர் மல்க வாழ வேண்டும். இறந்துபோன மணமகளைத் திருமணம் செய்யும் ஆண்களுக்கு இந்தக் கட்டுப்பாடு கிடையாது. நாலு நாட்களில் அடுத்த திருமணத்துக்கு நாள் குறித்துவிடுவார்கள்.

விதவைப் பெண்கள் தங்களின் கடைசிக் காலத்தில், ஊரின் ஒதுக்குப்புறத்தில் விதவைகளுக்கான விடுதியில்தான் எஞ்சிய வாழ் நாளைக் கழிக்க வேண்டும்.

சீனர்களின் குடும்ப அமைப்புப்படி திருமணம் ஆகாத பெண் களுக்குச் சமூகத்தில் எந்த அந்தஸ்தும் கிடையாது. ஏழ்மை காரணமாக திருமணம் ஆகாமலேயே இருக்கும் பெண்களை இந்த மாதிரி இறந்து போனவர்களோடு திருமணம் முடித்து, மணமகன் குடும்பத்து உறுப்பினர் ஆக்கிவிடுவார்கள். இறந்தவர்களின் ஆவிகள் கனவிலோ, ஆள் மூலமாகவோ, 'இங்கே நான் தனிமையில் தவிக்கிறேன். எனவே, எனக்கு உடனடியாகத் திருமணம் செய்துவையுங்கள்' என்று வேண்டுகோள் வைக்குமாம் (அடேங்கப்பா!). உடனடியாக, குடும்பத்தினர் யாராவது ஓர் அபலைப் பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்துவைப்பதும் உண்டு.

திருமரண அழைப்பிதழ்!

பேய்த் திருமணங்களிலும் ஜாதகம் பார்த்தல், பொருத்தம் பார்த்தல், நிச்சயதார்த்தம், திருமணச் சடங்கு, வரதட்சணை என்று அனைத்து அம்சங்களும் உண்டு. இறந்துபோனவர்களின் குறியீடாக மணப்பெண்ணின் அருகில் துணியால் செய்யப்பட்ட ஒரு பெ£ம்மை இருக்கும். அவர்தான் கணவனாம்!

 
திருமரண அழைப்பிதழ்!
-பா.முருகானந்தம்
திருமரண அழைப்பிதழ்!