திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

கடத்தல் கல்யாணங்கள்!

கடத்தல் கல்யாணங்கள்!

இணைப்பு : திருமணம் விகடன்
கடத்தல் கல்யாணங்கள்!
கடத்தல் கல்யாணங்கள்!
கடத்தல் கல்யாணங்கள்!
 
கடத்தல் கல்யாணங்கள்!
கடத்தல் கல்யாணங்கள்!
கடத்தல் கல்யாணங்கள்!

'பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிட்டாங்களா? தூக்குடா அந்தப் பொண்ணை... கட்றா தாலியை!' - இந்த ஸ்டைல் வசனம் தமிழ் சினிமா போலவே, கட்டாயத் தாலி கட்டுவது பல நாடுகளில் சர்வ சாதாரணமான விஷயம்.

மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா, தென் கிழக்கு ஆசியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இப்போதும் நடக்கின்றன கடத்தல் கல்யாணங்கள்.

பெண்களைக் கடத்துவது என்பது அங்கே கிரிமினல் குற்றம்தான். ஆனாலும், விடாமல் கடத்தல் நடக்கிறது. ஏனெனில், இங்கே ஆண்கள்தான் பெண்களுக்கு வரதட்சணை கொடுத் துத் திருமணம் செய்ய வேண்டும். வரதட்சணை கொடுக்க முடியாத ஆண்கள், தங்களுக்கு விருப்பமான பெண்களைக் கடத்திக்கொண்டு போய் கட்டிக்கொள்கிறார்கள்.

கடத்தல் கல்யாணங்கள்!

கஜகஸ்தானில் பெரும்பாலான கல்யாணங்கள் இப்படித்தான் நடக்கின்றன. முதலில் பெண் வீட்டுக்குச் சென்று பெண் கேட்பான். பெண் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் நண்பர்கள், உறவினர்களோடு பெண்ணைக் கடத்தி வந்துவிடுவான். அந்தப் பெண்ணிடம் குடும்பத்தில் மூத்த பெண் உறுப்பினர் திருமண வெள்ளை உடையைத் தருவார். அதை அந்தப் பெண் ஏற்றுக்கொண்டால் திருமணம். அல்லது சம்மதிக்கும் வரை ஏதாவது ஓர் அறையில் அடைத்து வைத்துவிடுவார்கள். பெண் திருமணம் செய்யச் சம்மதித்தால், பிறந்த வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதச் சொல்வார்கள். இரண்டு வீட்டுக்காரர்கள்பற்றியும் விட்டுக் கொடுக்காமல் எழுதி பெற்றோரை வரவழைக்க வேண்டியது பெண்ணின் பொறுப்பு. திருமணம் முடிந்ததும் பையனும் பெண் ணும் சேர்ந்து அவர்களிடம் மன்னிப்புக் கேட்பார்கள்.

கிர்கிஸ்தானிலும் கிட்டத்தட்ட முதல் பாதி இதேதான். ஆனால், அந்தப் பெண் வெள்ளை உடையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால், நிலைமை சிக்கலாகி விடும். உடனே, ஆணின் வீட்டில் இருந்து அவளைத் துரத்தியடிப் பார்கள். ஏனெனில், அங்கே ஓர் இரவு வெளியே தங்கியபெண்ணை யாரும் மணக்க மாட்டார்கள். அதனால், வேறு வழி இல்லாமல் கடத்தியவனையே மணந்து கொள்ள வேண்டிய நிலை மைக்கு வந்துவிடுவாள் அந்தப் பெண்.

சில ஆப்பிரிக்க நாடுகளில் பெண்ணைக் கடத்திப் போய் வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவதும் நடக்கும். 'கர்ப்பமான பெண்ணை வேறு யாரும் மணக்க மாட்டார்கள்' என்கிற வக்கிரமான எண்ணம்தான் காரணம். அங்கே சட்டம் - ஒழுங்கு எதுவும் கிடையாது. இதனால்தான் அங்கே கைவிடப்படும் பெண்களும், எய்ட்ஸ் தாக்கிய பெண்களும் அதிக அளவில் இருக்கிறார்கள்!

 
கடத்தல் கல்யாணங்கள்!
- தீபக்
கடத்தல் கல்யாணங்கள்!