திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?''

''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?''

இணைப்பு : திருமணம் விகடன்
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?''
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?''
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?''
 
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?''
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?''

''திருமண முறையானது காட்டுமிராண்டிக் காலத்தில், அதாவது 3,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காகக் கடைப்பிடிக்க வேண்டும்? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களைப் பலி கொடுக்கிறார்களோ, அதைப்போலவே பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்!

இந்த நாட்டின் மக்கள்தொகையில் சரிபாதியான பெண்கள் இனத்தை எதற்காக இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும்? இந்தத் திருமண முறை சுயநலத்துக்காகவே ஒழிய, பொதுநலத்துக்கு அல்லவே. புருஷனுடைய வேலை பெண்டாட்டியைப் பாதுகாப்பதும், பெண்டாட்டி புருஷனைப் பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால், அவற்றை இரண்டு பேருமே சேர்த்துக் காப்பாற்றவும்தான் பயன்படுகிறதே ஒழிய, சமுதாயத்துக்குப் பயன்படுவதே இல்லை.

அடுத்த வீடு நெருப்புப் பிடித்தாலும் அதுபற்றிக் கவலைப்பட மாட்டான். ஒரு வாளித் தண்ணீர் கொடுப்பான். ஆனால், அது அவன் வீட்டுக்குத் தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவே ஆகும். ஆண்களும் பெண்களும் இத்தகைய தொல்லையில் மாட்டிக்கொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அதனை அடுத்து, புருஷன் பெண்டாட்டியாகி, தனிக்குடித்தனம், தனிச் சமையல் என்று ஆக்கிக்கொண்டு, பொதுநல உணர்ச்சி அற்றவர்களாகவே ஆகிவிடுகின்றார்கள்.

உலகம் வளர்ச்சி அடைய வேண்டுமானால், உலகம் தொல்லையில்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால், திருமணம் என்பதை கிரிமினல் குற்றமாக்கிவிட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் பிறகு வந்தே தீரும். எனவே, திருமணத் துறையில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். சம எண்ணிக்கையுடையதும் சம உரிமைகளைப் பெற வேண்டியதுமான ஜீவன்களை இப்படிக் கொடுமைப்படுத்துவது மிகவும் அக்கிரமமாகும்.

பெற்றோர்கள் தங்கள் பெண்களை 22 வயது வரைக்கும் நன்றாகப் படிக்கவைக்க வேண்டும். பிறகு ஒரு தொழிலும் கிடைக்கச் செய்த பிறகே, வாழ்க்கைத் துணையைப்பற்றி நினைக்க வேண்டும். அதுவும் அந்தப் பெண்ணாகப் பார்த்து ஓர் ஆணைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, பெற்றோர்கள் குறுக்கிடக் கூடாது!''

''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?''
-- தந்தை பெரியார்
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?''