திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

'அந்த' அளவுக்கு அப்பா காரணம்! : ஹாய் மதன்-கேள்வி பதில்

'அந்த' அளவுக்கு அப்பா காரணம்! : ஹாய் மதன்-கேள்வி பதில்

ஹாய் மதன்-கேள்வி பதில்
'அந்த' அளவுக்கு அப்பா காரணம்! : ஹாய் மதன்-கேள்வி பதில்
'அந்த' அளவுக்கு அப்பா காரணம்! : ஹாய் மதன்-கேள்வி பதில்
'அந்த' அளவுக்கு அப்பா காரணம்!
 
'அந்த' அளவுக்கு அப்பா காரணம்! : ஹாய் மதன்-கேள்வி பதில்
'அந்த' அளவுக்கு அப்பா காரணம்! : ஹாய் மதன்-கேள்வி பதில்

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

'மகாபாரதத்தில் கர்ணன் கவச குண்டலங்களுடன் பிறந்தவன்' என்று வியாசர் எழுதியிருக்கிறாரே, பிற்காலத்தில் (இப்போது நாம்) அது நகைப்புக்குரிய விஷயமாகி விடும் என்று அவருக்கு ஏன் தோன்றவில்லை?

இதை எல்லாம் ஏன் அப்படியே அர்த்தம் எடுத்துக்கொள்கிறீர்கள்? உலகப் புராணங்கள் அனைத்திலும் உருவக வர்ணனைகள் நிறைய உண்டு. இப்போதுகூட 'அவன் சிங்கம்டா!' என்கிறீர்கள். நிஜ சிங்கமா?!

கர்ணன் உடல் இயற்கையிலேயே கவசம் அணிந்ததைப்போல வலிமையானது என்றுதான் பொருள்கொள்ள வேண்டும். குந்தி, கர்ணன் பிறந்த உடனே கூடையில்வைத்து நதியில் விட்டுவிடுகிறாள். ஆகவே, அவனுடைய காது குத்தல் நிகழ்ச்சியை யாரும் பார்க்கவில்லை. குண்டலங்களை அணிவித்தது யார்?!


தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் முதன்முதலில் துவங்கியது ரஷ்யாவில்தானே?

முதல் போராட்டம்பற்றி பைபிளில் வருகிறது!

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பார்ட்டகஸ் என்கிற இளைஞர் அடிமைகளைத் திரட்டி ரோம் வல்லரசோடு மோதி, சில போர்களில் வெற்றியும் கண்டு, கடைசியில் அந்தப் போராட்டம் நசுக்கப்பட்டது. முன்பே ஒரு முறை அந்தப் போராட்டம்பற்றி இந்தப் பகுதியில் எழுதியிருக்கிறேன்!


விஜயலட்சுமி முருகேசன், பொழிச்சலூர்.

பேச நல்ல டைம் எது?

ஏன்? இதையே ஒரு கேள்வியாக யாரிடமாவது கேட்டு உரையாடப் பாருங்களேன். பதிலுக்கு அவரும் பேச ஆரம்பித்தால், அது நல்ல டைம்தான்!


தேவ சேனாதிபதி, வேலூர்.

தவறு செய்தது சுவாமிஜியா... நடிகையா? படம் பிடித்தவரா? அல்லது படம் வெளியிட்டவரா?

மகா மோசமான திரைப்படங்கள் வருவதற்குக் (சில படங்கள் வெற்றியும் பெறுவதற்கு) காரணம் தயாரிப்பாளரா, டைரக்டரா, ஹீரோவா, விநியோ கஸ்தரா, அல்லது... ரசிகர்களா?! இந்தப் பதிலை உங்கள் கேள்வியோடுபொருத்திப் பார்க்கவும்!


'அந்த' அளவுக்கு அப்பா காரணம்! : ஹாய் மதன்-கேள்வி பதில்
மஞ்சு வாசுதேவன், நவி மும்பை.

யாராவது அடித்தால் வலிக்கிறதே, அதுவே அதிர்ஷ்டம் அடித்தால்...

இன்ப அதிர்ச்சி மாதிரி அது இன்ப வலிங்க!

வீட்டுக் கூரையைப் பொத்துக்கிட்டு ஒரு மூட்டை உங்க முதுகு மேலே விழுது. வலி தாங்காம, கெட்ட வார்த்தையாலத் திட்டிக்கிட்டு மூட்டையை திறந்தா.. கட்டுக்கட்டா ஆயிரம் ரூபா நோட்டுங்க. இப்ப அந்த முதுகுவலி என்ன ஆவும்?!


பா.அசோக், பிள்ளையார்குளம்.

வெற்றி - தோல்வி இல்லாத இடம் எது?

மயானம், மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் காப்பகம்!


டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

உணவைச் சமைத்துச் சாப்பிடும் பழக்கம் எப்படி வந்தது?

சமையல் என்பது சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு யதேச்சையாக நிகழ்ந்த, மகிழ்ச்சியான விபத்து!

இதை ஆங்கிலத்தில் Serendipity என்பார்கள். காட்டில் திடீரெனத் தீப்பற்றிக்கொள்கிறது (Wild Fire) அதில் கருகி இறந்த பிராணிகளின் இறைச்சியைக் கற்கால மனிதன் உண்டபோது அது மேலும் ருசியாக இருந்தது. சமையல் பிறந்தது!


கே.வெங்கட், விழுப்புரம்.

டிஸ்கோ என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? (டிஸ்கோ பார், டிஸ்கோ சலூன், டிஸ்கோ டைலர் என்று கண்டமேனிக்கு அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதால் கேட்கிறேன்.)

விளையாட்டுப் போட்டிகளில் 'தட்டு எறிதல்' பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதற்கு 'டிஸ்கஸ் த்ரோ' என்று பெயர். அதே மாதிரி வட்ட வடிவில் இருக்கும் இசைத் தட்டுக்கும் 'டிஸ்க்' என்று பெயர் வைத்தார்கள். இசைத்தட்டை இரைச்சலாக இசைக்கவிட்டு டான்ஸ் ஆடும் இடத்துக்கும் 'டிஸ்கோ' என்று பெயர் தொற்றிக்கொண்டது. அங்கே வரும் இளைஞர்கள் நவநாகரிகமானவர்கள் இல்லையா?

ஆகவே, பல 'நாகரிக'விஷயங் களுக்கும் அந்தப் பெயரைச் சேர்த்துக்கொண்டார்கள்!


'அந்த' அளவுக்கு அப்பா காரணம்! : ஹாய் மதன்-கேள்வி பதில்
சீர்காழி சாமா, தென்பாதி.

கல்யாணத்துக்கு மேளம் - சாவுக்கு தப்பு. இது எல்லாம் தேவைதானா?

இரண்டுமே மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் மிக முக்கியமான நிகழ்ச்சிகள். அது மற்றவர்களுக்கும் தெரிய வேண்டாமா?!


பொன்விழி, அன்னூர்.

பெண்கள் செயற்கை முறையில் 'அவற்றை' பெரிதாக மாற்றிக்கொள்வது விஞ்ஞான வளர்ச்சியா? இதனால் பின்விளைவுகள் ஏதும் ஏற்படாதா?

மனித இனத்துக்கு மட்டுமே நேர்த்தியான மார்பகங்கள் உண்டு. மற்ற அத்தனை பாலூட்டிகளுக்கும் முலைக் காம்புகள் மட்டுமே உண்டு. கூடவே, சிறிய 'பை'கள் இருக்கலாம். பெரிய மார்பகத்துக்கும் பால் உற்பத்திக்கும் சம்பந்தம் கிடையாது. ஒப்பிடும்போது மார்பகம் வளர்ச்சிஅடையாத பெண்களுக்கு இன்னும் நிறைய பால் சுரக்கக்கூடும். மார்பக அளவு என்பது வம்சத்தைப் பொருத்தது (குறிப்பாக அப்பா வழி!) ஆகவே, அவற்றைத் தாழ்வுமனப்பான்மை இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்வதே நல்லது. அதைப் பெரிதாக்கும் சர்ஜரி பேஜாரானது. முலைக்காம்பில் துவங்கி நேர்க்கோடாகக் கீழ் நோக்கி வெட்டித் திறந்து, 'சிலிகான்' என்கிற 'இம்ப்ளான்ட்'டை நுழைத்துப் பொருத்திப் பெரிதாக்குகிறார்கள். (சிலிகான் உலோகம் அல்ல. அது குவார்ட்ஸ்போல இயற்கையில் கிடைக்கிற, சற்று மிருதுவான, மினரல்.) சில சமயங்களில் காம்புகளை வெட்டித் தனியே எடுத்து (கோணலாகப் போகக் கூடாது என்பதற்காக) பிறகு மீண்டும் பொருத்தி... ஏராளமான தையல்கள் போட வேண்டியிருக்கும். பிற்காலத்தில் 'இம்ப்ளான்ட்' நகர்ந்து... எசகுபிசகாகிப் போகவும் வாய்ப்பு உண்டு. பால் சுரப்பதுகூட சற்றுத் தடை படலாம். தேவையா இதெல்லாம்?!

 
'அந்த' அளவுக்கு அப்பா காரணம்! : ஹாய் மதன்-கேள்வி பதில்
'அந்த' அளவுக்கு அப்பா காரணம்! : ஹாய் மதன்-கேள்வி பதில்