திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

டீன் கொஸ்டீன் : சட்டசபையைச் சுற்றிப் பார்க்கலாமா?

டீன் கொஸ்டீன் : சட்டசபையைச் சுற்றிப் பார்க்கலாமா?

டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன் : சட்டசபையைச் சுற்றிப் பார்க்கலாமா?
டீன் கொஸ்டீன் : சட்டசபையைச் சுற்றிப் பார்க்கலாமா?
சட்டசபையைச் சுற்றிப் பார்க்கலாமா?
 
டீன் கொஸ்டீன் : சட்டசபையைச் சுற்றிப் பார்க்கலாமா?
டீன் கொஸ்டீன் : சட்டசபையைச் சுற்றிப் பார்க்கலாமா?

கே.மைக்கேல், தூத்துக்குடி.

''சிறிது காலத்துக்கு முன்பு வரை கேட்டரிங் படிப்புகளுக்குப் பெரிய மவுசு இருந்தது. இப்போதும் அந்தப் படிப்புகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கிறதா? என் மகனை கேட்டரிங் படிப்பில் சேர்க்கலாமா?''

எஸ்.ராஜமோகன்-முதல்வர்,
இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரீஷியன்.

''மைக்கேல், முன்பைவிட இப்போதுதான் கேட்டரிங் படித்தவர்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...

முன்பெல்லாம் ஒருசிலர் விடுமுறை நாட்களில்தான் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுவார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படியே தலைகீழ். வெளியே சென்று உணவருந்தும் (ஈட்டிங் அவுட் கல்ச்சர்) பழக்கம் அதிகரித்துள்ளது. ஹோட்டலில் மட்டும் வேலை என்று நினைத்துவிடாதீர்கள், மருத்துவமனை, கெஸ்ட் அவுஸ், ஏர்லைன்ஸ், கப்பல் போக்குவரத்து என்று பல துறைகளில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. அதுமட்டுமல்ல; கேட்டரிங் படித்தவர்கள் சுயமாகவே ஹோட்டல், ரெஸ்டாரென்ட், கேட்டரிங் சர்வீஸ் போன்றவற்றைச் செய்ய முடியும். கேட்டரிங் படிப்பில் சமையல் மட்டுமல்லாமல் கஸ்டமர் சர்வீஸ், மேலாண்மை போன்றவையும் சொல்லித்தருகிறோம். எனவே, கஸ்டமர் சர்வீஸ் தொடர்பான பணிகளுக்கும் செல்ல முடியும். ஒரு பட்டயப் படிப்பாக இல்லாமல், டிகிரி கோர்ஸாகச் செய்தால் சிவில் சர்வீஸ், பேங்கிங் போன்ற போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, ஐ.ஏ.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கும் செல்ல முடியும்!''


ஆர்.ராதிகா, தஞ்சாவூர்.

''நான் அனைவருடனும் மிக எளிதாகப் பழகி விடுவேன். ஆனால், மிக நெருக்கமாகப் பழகிய சில தினங்களுக்குள் அவர்களுடன் ஏதாவது பிரச்னை வந்து பிரிந்துவிடுவோம். இதனால் எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் என்று யாருமே இருந்தது இல்லை. என் மேல் என்ன தவறு?''

எம்.திருநாவுக்கரசு,
மனநல மருத்துவர்.

''நிறையப் பேரிடம் நண்பர்களாக இருக்கலாம். ஆனால், மிகச் சிலருடன்தான் நெருங்கிய நண்பராக இருக்க முடியும். 'உங்களின் நட்பு எனக்கு மிக முக்கியமாகப்படுகிறது' என்று மற்றவர்களுக்குத் தோன்றும்போதுதான் நெருங்கிய வட்டத்துக்குள் போக முடியும். முதலில் அறிமுகம் ஆகிறோம், அப்புறம் பழகுகிறோம், நட்பு அனுபவம் ஏற்படுகிறது, அனுபவங்கள் பிடித்துப்போகின்றன, பிடித்தம் தேவையாகிறது, அந்தத் தேவை அனுகூலம் ஆகிறது, அதன் பிறகுதான் நெருங்கிய வட்டம் என்ற அங்கீகாரம் கிடைக்கிறது. அதற்கு முன்னாடியே நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் நுழைந்தீர்கள் என்றால், மற்றவர்களின் எல்லையில்

டீன் கொஸ்டீன் : சட்டசபையைச் சுற்றிப் பார்க்கலாமா?

அத்துமீறுகிறீர்கள் என்று அர்த்தமாகிவிடுகிறது. அது நிச்சயமாகஓர்இனிப் பான அனுபவமாக இருக்காது. கசப்பான அனுபவமாகிவிடும். அதனால் முதலில் யதார்த்தமாகப் பழகுங்கள். நெருங்கிய நண்பர்கள் வட்டம் என்பது தானாகவே உருவாகும்!''


எஸ்.கீதா, செங்கல்பட்டு.

''நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. ஆறு மாதங்களுக்கு முன் என் பெற்றோர் எனக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தார்கள். அடிக்கடி மெசேஜ் அனுப்பிக்கொண்டு இருப்பேன். இப்போதெல்லாம் எஸ்.எம்.எஸ். அனுப்பாவிட்டால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடிவது இல்லை. இந்தப் பழக்கத்தை எப்படி மாற்றுவது?''

ஷாலினி,
மனநல மருத்துவர்

''வாலிப வயதில் கனெக்டிவிட்டி அடிக்ஷன் (தொடர்புப் போதை) வருவது அதிகம். அது எஸ்.எம்.எஸ். ஆக இருக்கலாம், அல்லது ஆர்குட் - ஃபேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க்காக இருக்கலாம். வாலிப வயதில் அடிக்ட் ஆவதற்குக் காரணம், நிறையப் பேருடன் பேச வேண்டும், பழக வேண்டும், தொடர்புகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு முறையும் தொடர்புகொள்ளும்போதும் மூளையில் endorphin என்ற ரசாயனம் சுரக்கிறது. இதனால், சிறிய அளவிலான (மைக்ரோ அடிக்ஷன்) போதை வருகிறது. மற்ற எல்லா அடிக்ஷனுக்கும் எப்படி சிகிச்சை அளிக் கிறோமோ, அதேபோன்று இதற்கும். அமைதியடையச் செய்து, அதில் இருந்து வெளிவர பயிற்சி கொடுத்தால் சரியாகிவிடும். மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்!''

டீன் கொஸ்டீன் : சட்டசபையைச் சுற்றிப் பார்க்கலாமா?
பா.செல்வி, திருநெல்வேலி.

''நாங்கள் புதிய சட்டசபை வளாகத் தைச் சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறோம். அதற்கு எங்கு, யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்? ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?''

எம்.செல்வராஜ்,
சட்டப் பேரவைச் செயலாளர்.

''தலைமைச் செயலக வளாகக் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. அதனால், இப்போதைக்கு சுற்றிப் பார்க்கப் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இன்னும் சில மாதங்கள் பொறுத்திருங்கள். இப்போது சட்டப்பேரவை நடந்துகொண்டு இருப்பதால் சட்டப்பேரவை நடவடிக்கைகளை உள்ளே சென்று பார்க்கலாம். காலை 9.30 முதல் 1.30 மணி வரை சட்டப்பேரவை நடைபெறும். உள்ளே சென்று நடவடிக்கைகளைக் காண, நீங்கள் முன்கூட்டியே சபாநாயகர் அல்லது சட்டப்பேரவைச் செயலாள ருக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டும். அதில் உங்கள் முகவரி, புகைப்படம் போன்றவை ஒட்டி இருக்க வேண்டும். கடிதம்கிடைத் ததும் அதன் மீது விசாரணை நடத்தி, பின்னர்தான் அனுமதிப்போம். எம்.எல்.ஏ-க்களிடம் பாஸ் வாங்கி வந்தால், அரை மணி நேரம் என்ற அளவில் அனுமதி அளிக்கிறோம். (கேள்வி நேரமாக இருந்தால் ஒரு மணி நேரம்)இதற்கு என பார்வையாளர் கேலரி உள் ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அந்தந்தக் கல்வி நிறுவனங்கள் மூலமாக எங்களைத் தொடர்புகொண்டால் அவர்களுக்கு உடனடியாக அனுமதி அளிக்கி றோம். 11 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு மட்டுமே சட்டப்பேரவை நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதி அளிக்கப்படும். அனுமதி இலவசம்தான்!''

டீன் கொஸ்டீன் : சட்டசபையைச் சுற்றிப் பார்க்கலாமா?
சி.சவுந்தரராஜன், சேலம்.

''ஒரு தந்தை தான் உயிரோடுஇருக் கும்போதே தன்னுடைய சொத்துக்களை ஒரு குறிப்பிட்ட வாரிசுதாரருக்கு மட்டுமே எழுதிவைத்துவிட்டால், அவர் இறந்த பின்பு மற்ற வாரிசுகள் அந்தச் சொத்துக் களின் உரிமையைக் கோர முடியுமா?''

ராஜு.
வழக்கறிஞர்.

''தன்னுடைய சொத்துக்களை என்று நீங்கள் குறிப்பிடுவதன் மூலம் அவர் எழுதிக்கொடுத்த சொத்துக்கள் அவரது சுய சம்பாத்தியம் என்று நினைக்கிறேன். இந்து வாரிசுரிமைச் சட்டப்படி குடும்பத் தலைவர் அவர் சொந்தமாகச் சம்பாதித்த சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அப்படிக் கொடுத்த சொத்துக்களை, அவரது மற்ற மகன்கள் உரிமை கோர முடியாது. பரம்பரைச் சொத்தாக இருந்தால் மட்டுமே உரிமை கோர முடியும்!''

இளைஞர்களே...

உங்கள் சந்தேகம், குழப்பம், மயக்கம் எதுவாக இருந்தாலும், 'டீன் கொஸ்டீன்' பகுதிக்கு அஞ்சலில் எழுதி அனுப்பலாம். அல்லது 044-42890004 என்ற தொலைபேசி எண்ணிலும் உங்கள் குரலிலேயே பதிவு செய்யலாம். நாங்கள் உதவக் காத்திருக்கிறோம்!

 
டீன் கொஸ்டீன் : சட்டசபையைச் சுற்றிப் பார்க்கலாமா?
டீன் கொஸ்டீன் : சட்டசபையைச் சுற்றிப் பார்க்கலாமா?