திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி

கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி

பாரதி தம்பி ,படங்கள்: கே.ராஜசேகரன்
கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி
கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி
கிரஹப்பிரவேசம்-II
 
கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி
கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி

ருதுவின் ஓவியக் கோடுகள் பிரத்யேகமானவை. ஒரு போர்க்களத்தைப்போல அவருடைய பெரும்பாலான ஓவியங்களில் குதிரைகள் சீறித் திமிறும். ''அதற்குக் கார ணம், மதுரையில் இருந்த எங்கள் வீடு. கோரிப்பாளையம் கிட்டத்தட்ட ஒரு கிராம மாக இருந்த சமயம் அது. மாரியம்மன் கோயில் முதல் தெருவில் முதல் வீடுஎங்களு டையது. வீட்டைவிட்டு வெளியே வந்தால் குறைந்தது நான்கைந்து ஜட்கா வண்டி களைப் பார்க்க முடியும். குதிரையின் கம்பீர மும்,வேகமும், அழகும் அந்தச் சின்ன வயதில் பெரிய வேடிக்கையாக இருந்தன. ஜட்கா வண்டியின் பின்னாலேயே ஓடுவேன். அந்தக் குதிரைகள்தான் இப்போது என் ஓவியங்களில் வெளிப்படுகின்றன'' - சிறு குழந்தையைப்போலப் பேசிச் சிரிக்கும் மருதுவின் சென்னை நந்தனம் வீட்டில் ஓவியங்களும், சிற்பங்களும், புத்தகங்களும் நிறைந்திருக்கின்றன.

''தாத்தா ராமசாமி அந்தக் காலத்தில் பெரிய கான்ட் ராக்டர். அதனால், வசதியான பெரிய குடும்பம். வீடும் பெரியது. எப்போதும் உறவினர்கள் வந்து போய்க்கொண்டே இருப்பார்கள். சித்திரைத் திருவிழா, சந்தனக்கூடு விழா, கருப்பண்ணசாமி கோயில் விழா, தமுக்கம் மைதான விழாக்கள் என அடிக்கடி ஏதோ ஒன்று நடந்தபடியேஇருக் கும். எல்லாமே எங்கள் வீட்டை ஒட்டியே என்பதால், அவை மனதுக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தந்தன.

நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே வரையத் தொடங்கிவிட்டேன். படம் வரைவதில் மிகப் பெரிய ஆர்வம். நான்காம் வகுப்பு படிக்கும்போது ஒரு முழு ஓவியமே வரைந்தேன். அதெல்லாம் இன்னும் என்னிடம் இருக்கிறது. எனது ஓவிய ஆர்வத்துக்கு மிகப் பெரிய பலமாக இருந்தவர் என் அப்பா மருதப்பன். ஏழாம் வகுப்பு படிக்கும்போதே பிகாஸோவையும் டாலியையும் அறிமுகப்படுத்தினார். காலையில் எழுந்து பார்த்தால், என் தலை மாட்டில் படங்கள் உள்ள புத்தகங்களை வாங்கி வைத்தி ருப்பார். காந்தியின் ஆசிரமத்தில் ஒரு வருடம் தங்கி, பிறகு கம்யூனிஸம் மேல் ஈர்ப்பு வந்து டிராட்ஸ்கியிஸ்ட்டாக மாறியவர் அவர். அதனால்தான் எனக்கு டிராட்ஸ்கி எனப் பெயர்வைத்தார். தி.மு.க. ஆட்சியைப் பிடித்த 1967-ம் வரு டத் தேர்தலில், பொது எதிரியான காங்கிரசுக்கு எதிராக அப்பா பிரசாரம் செய்தார். சுவர் ஓவியங்கள் பெரிய பிரசார வடிவமாக இருந்த சமயம் என்பதால், எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த நான் பிரபலம் ஆனேன். பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் பெயின்ட் டப்பாவைப் பிடித்துக்கொண்டு நிற்க, நான் சுவரில் ஓவியங்கள் வரை வேன். மதுரை முழுக்க வரைந்து இருக்கி றேன்.

சில வருடங்கள் கழித்து, பக்கத்திலேயே நரிமேடு என்ற இடத்தில் வேறு ஒரு வீட்டுக்குப் போனோம். பள்ளிப் படிப்பு முடிக்கும் வரைக்கும் அங்குதான். அதன் அருகில் டெரகோட்டா குதிரைச் சிற்பங்களும், மண் பாண்டங்களும் செய்வார்கள். வெறும் களி மண்ணைக் கண்ணுக்கு முன்னால் அழகிய சிற்பங்களாக மாற்றும் அந்த வித்தை என்னை மிகவும் கவர்ந்தது. பள்ளிக்கூட நேரம் போக மீதி நேரம் எல்லாம் அதையே வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பேன். வீட்டில் அப்பா நிறைய சிற்பங்கள் வாங்கி வைத்திருப்பார். அவையும் எனக்குள் நிறைய பாதிப்புகளை உண்டு பண்ணின.

சென்னை வந்ததும் மந்தைவெளியில் தங்கினேன். 'பாகப்பிரிவினை' உள்ளிட்ட அந்தக் காலத்தின் பல முக்கியப் படங்களுக்குத் திரைக்கதை எழுதிய ஏ.எஸ்.சோலைமலை என் தாத்தா. அவர்வீட்டில் தான் தங்கினேன். அவரும் எங்கு போனாலும் என்னை அழைத்துச் செல்வார்.

கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி

சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்த பிறகு, ஓரிரு வருடங்கள் ஹாஸ்டல் வாழ்க்கை. ஒரே அறை யில் ஏழெட்டுப் பேர் தங்கியிருப்போம். அதுவரை தனியாகக் குடும்பத்துடன் வாழ்ந்திருந்த எனக்கு ஹாஸ்டல் வாழ்க்கை வேறு அனுபவத்தைத் தந்தது.

படிப்பு முடிந்து திருமணமும் முடிந்தது. மத்திய அரசின் நெசவாளர் பணி மையத்தில் விஜயவாடா வில் வேலை. விஜயவாடாவுக்கு ரயிலில் போய்க் கொண்டு இருக்கும்போது கிருஷ்ணா நதிக் கரையில் ஓர் இடம் பார்த்தேன். 'இங்கு வசித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என நினைத்தேன். ஆச்சர்யம், அங்குதான் எனக்கு வேலையே. ஆந்திராவின் பாரம்பரியமான வீடுகள் அமைந்த அழகிய ஊர் அது. நான்கு வருடங்கள் அங்கு இருந்தேன்.

பிறகு சென்னை அபிராமபுரம். அங்கும் நெச வாளர் பணி மையம் வீடு. பிறகுதான் இந்த நந்தனம் வீட்டுக்கு வந்தேன். இத்தனை வருடங்கள் வெவ் வேறு வீடுகளில் வாழ்ந்து வந்ததில் எனக்கு கோரிப் பாளையம் வீடுதான் மனதுக்குள் நிற்கிறது. சின்ன வயதில் வாழ்ந்த வீடு என்பதால் எல்லோருக்குமே இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால், கோரிப்பாளையம் வீடு இப்போது இல்லை. அதன் பிறகு இருந்த நரிமேடு வீடு பழைய மாதிரி அப்படியே இருக்கிறது. அம்மா எல்லாம் அங்குதான் வசிக்கிறார்கள்.

எனக்கு அளவில் பெரியது, சிறியது எனவீட்டைப் பற்றி பெரிய கற்பனைகள் இல்லை. நம்முடைய தேவைகள் பூர்த்தி அடையும்படியான வீடாக இருந்தால் போதும்!''

 
கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி
கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி