திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

வருங்காலத் தொழில்நுட்பம் : அண்டன் பிரகாஷ்

வருங்காலத் தொழில்நுட்பம் : அண்டன் பிரகாஷ்

அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம் : அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம் : அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம்
new
வருங்காலத் தொழில்நுட்பம் : அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம் : அண்டன் பிரகாஷ்

வாசகர்களிடம் இருந்து இதுவரை வந்திருக்கும் கேள்விகளை இப்படிப் பிரிக்கலாம்.

இணையத் துறையில் நுழைந்து வெற்றி பெற என்ன படிக்கலாம்?

இணையத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி?

கிட்டத்தட்ட இணையத்தைச் சார்ந்து இருக்கிறேன். எனது பிரைவஸியைப் பாதுகாத்துக்கொள்ள தொடர்ந்து டிப்ஸ் கொடுக்க முடியுமா?

தமிழ்ப் படங்களைத் தரமாகப் பதிவிறக்கம் செய்ய முடிகிற வலைதளங்களின் விவரங்களைத் தர முடியுமா?

கடைசிக் கேள்வி தவிர, மற்றவற்றுக்குப் பதில் அளிப்பதுடன், இந்தத் தொடரிலும் அவ்வப்போது மேற்படி சமாசாரங்களை அலசி வந்திருக்கிறேன்.

இணையத்தைப் பயன்படுத்தி தொழில் முனையும் பிராக்டிக்கல் ஆன விஷயங்களுக்குள் சில வாரங்கள் உள் நீச்சல் அடிக்கலாமா?

காரணம், இளைஞர்கள் நிரம்பியிருக்கும் இந்தியா. தொழில்நுட்பத் துறையில் பணி புரியாவிட்டாலும், தொழில்நுட்ப வளர்ச்சிகளை நுகர விரும்பும் வளர்ந்து வரும் கலாசாரம். 1.3 பில்லியன் மக்களைக்கொண்ட இந்த நாட்டில் ஏகப்பட்ட பிரச்னைகள். பிரச்னைகளைத் தீர்க்கக் கிடைக்கும் வாய்ப்புகள்தான் தொழில் முனைவு முயற்சிகள். இன்ஃபோசிஸ் போன்ற சேவை நிறுவனங்கள் மேலை நாட்டினருக்கு இந்தியாவின் டெக்னாலஜி சொல்யூஷன் டெலிவரித் திறமையைச் சாதித்து வெற்றி பெற்றது, இந்தியப் பொருளாதாரத்துக்குச் சில வருடங்களுக்கு முன்பு தேவையாக இருந்தது உண்மைதான். ஆனால், அதைவிடவும் பெரிய அளவில் சாதிக்கும் வாய்ப்பை இணையம் இன்று ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது.

இதன் முக்கிய இன்ஸ்பிரேஷன் - இரண்டு நிகழ்வுகள்.

வருங்காலத் தொழில்நுட்பம் : அண்டன் பிரகாஷ்

முதல் நிகழ்வு, சமீபத்தில் படிக்க நேர்ந்த 'Post American World' என்ற புத்தகம். நியூஸ் வீக் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஃபரீத் சக்கரியா எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், அமெரிக்காவின் அடுத்த 50 ஆண்டுகள் எப்படி இருக்கப்போகின்றன என்பதை அலசுகிறது. 19-ம் நூற்றாண்டில் கொடி கட்டிப் பறந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் எப்படி 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு வந்ததோ, அதேபோல் 20-ம் நூற்றாண்டில் ஆதிக்கச் சக்தியாக இருந்து வந்த அமெரிக்காவின் வல்லமை 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ஒரு ஏரியாவில் மட்டும் அமெரிக்கா இந்த நூற்றாண்டிலும் சிறப்பாக இருந்து வரும். அது - புதுமையான தொழில் முனைவு முயற்சிகள். ஆனால், அமெரிக்கா மட்டுமே இதில் ஜாம்பவானாக இருக்க முடியாது என்று விவாதிக்கிற சக்கரியா, அதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று இன்டர்நெட் என்கிறார். தகவல்தான் வலிமை (இன்பஃர்மேஷன் இஸ் பவர்) என்பது தெரிந்ததே. தகவலை எளிதில் பகிர்ந்துகொள்ளவைக்கிற இணையம் அனைவருக்கும் சொந்தம். இதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது நமது கையில்தான் இருக்கிறது.

வருங்காலத் தொழில்நுட்பம் : அண்டன் பிரகாஷ்

இரண்டாவது நிகழ்வு, சென்ற சில மாதங்களாக நான் அடிக்கடி செல்ல வேண்டியிருந்த Sand Hill Road. சிலிகான் வேலியின் மத்தியில் மென்லோ பார்க் நகரில் இருக்கும் இந்தச் சிறிய சாலையில் உள்ள தொழில் முதலீட்டு நிறுவனங்கள் (Venture Capitalist அல்லது செல்லமாக VC) கடந்த 25 வருடங்களாகத் தொடர்ந்து செய்து வந்த முதலீடுகள்தான் Sun, Oracle எனத் தொடங்கி ஃபேஸ்புக், டிவிட்டர் வரை பெயர் பெற்றிருக்கும் அனைத்து நிறுவனங்களின் வெற்றிக்குக் காரணம். சேண்ட் ஹில் ரோடில் தனது நிறுவனம் நடத்தும் க்ஷிசி ஒருவருடன் சமீபத்தில் விரிவாகப் பேசிக்கொண்டு இருந்தேன். தொழில் முனைவதுபற்றிய அவரது அனுபவங்களை இந்தத் தொடருக்காக விசாரித்தேன். 20-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து இருப்பதால் அவரது insights பிரமாதமாக இருந்தது. அவற்றைச் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

1. தொழில் முனைவதற்கு அனுபவம் தேவை இல்லை. மைக்ரோசாஃப்ட்டில் இருந்து ஃபேஸ்புக் வரை பல நிறுவனங்கள் அவற்றை நிறுவியவர்கள் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும்போதே தொடங்கப்பட்டவை. ஆனால், துடிப்பு தேவை. கடின உழைப்பு கட்டாயம் தேவை. தனி ஒருவராக இருப்பதைவிட, ஓர் அணியாக இருப்பது நல்லது. டெக்னாலஜி ஒருவருக்கு அத்துப்படி என்றால் மற்றவருக்கு மார்க்கெட்டிங்.

2. வெறும் ஐடியாக்களுக்கு மட்டுமே தொழில் முதலீடு கிடைத்த காலம் மலையேறிவிட்டது. உங்களது ஐடியாவை ஒரு சிறிய அளவில் prototype ஆகவாவது வைத்திருப்பது நல்லது. இணையத்தைச் சார்ந்து தொழில் ஒன்றைத் தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவை இல்லை. அதை மார்க்கெட்டிங் செய்யத்தான் அதிகம் மெனக்கெட வேண்டும் என்பதால், க்ஷிசி நீங்கள் உங்கள் ஐடியாவைச் செயல்படுத்த எவ்வளவு முயன்றீர்கள் என்பதைத் துருவித் துழாவிப் பார்ப்பது வழக்கம்.

3. உங்கள் ஐடியாவுக்குப் போட்டியாக எத்தனை நிறுவனங்கள் இருக்கின்றன என்பதைப் பாருங்கள். போட்டி இருப்பது பிரச்னை அல்ல; ஒருவிதத்தில் அது நல்லதும்கூட. டிஜிட்டல் மியூஸிக் கேட்கும் கருவியைத் தயாரித்தது ஆப்பிள் அல்ல. ஆனால், இன்று ஐ-பாட்தான் இந்த ஏரியாவில் நம்பர் ஒன். உங்களது ஐடியாவில் மற்றவர்களைவிட வித்தியாசம் (Differentiation) இருக்க வேண்டும். அது தரத்திலோ விலையிலோ, எதாவது ஒன்றில் இருந்தாக வேண்டும்.

வருங்காலத் தொழில்நுட்பம் : அண்டன் பிரகாஷ்

4. சிறிய முதல் கட்ட முதலீட்டுக்கு நண்பர்களையோ, குடும்ப உறுப்பினர்களையோ அணுகலாம். அவர்களிடம் உங்களது ஐடியாவை நம்பிக்கையுடன் தெரிவியுங்கள். முக்கியமாக சின்ஸியராக அவர்களை அணுகுங்கள். உங்கள் ஐடியா வெற்றி அடைந்தால், அவர்களுக்குக் கிடைக்கப்போகும் பலன்களையும், தோல்வி அடையும் சாத்தியக்கூறுகளையும் வெளிப்படையாகத் தெரிவியுங்கள். தொழில் முறையில் முதலீடு செய்பவர்களை அணுக சில வரைமுறைகள் உண்டு. இதைத் தொடக்க நிலையிலேயே செய்ய விரும்பினால், நிறுவனத்தைக் கட்டுவதற்குப் பதில், முதலீடு திரட்டுவதிலேயே அதிக நேரம் வீணாகிவிடும் அபாயம் இருக்கிறது.

5. ஒரு நிமிடத்துக்குள் உங்களது ஐடியாவைச் சொல்லிக் கேட்பவரைப் புரிந்துகொள்ளவைக்க முடிய வேண்டும். Elevator pitch எனப்படும் இந்தச் சுருக் உரையில், 'பிரச்னை என்ன; உங்களது ஐடியா அதை எப்படித் தீர்க்கப்போகிறது. இதன் மதிப்பு என்ன?' என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும். இது முடியவில்லை என்றால், அல்லது ஒரு நிமிட உரையைக் கேட்ட நபர் உங்கள் முகத்தையே திருதிருவெனப் பார்த்துக்கொண்டு இருந்தால், உங்கள் ஐடியாவிலோ அல்லது அதை விளக்குவதிலோ சிக்கல் இருக்கிறது என்று பொருள். அதைச் சரிசெய்துகொண்ட பின்னர் தொழில் முறை முதலீட்டாளர்களை அணுகுவது நல்லது.

இதெல்லாம் இந்தியாவில் நடக்கப்போவது இல்லை என்று அவநம்பிக்கையுடன் அலுத்துக்கொள்ளும் ஆத்மாக்களுக்கு எனது பதில் - You are so wrong!

அடுத்த சில வாரங்களில் இந்தியாவிலும், இந்தியாவைச் சார்ந்தும் நடந்து வரும் தொழில் முனைவு நிகழ்வுகளால் நடக்கவிருக்கும் விளைவுகளைப் பார்க்கலாம்!

 
வருங்காலத் தொழில்நுட்பம் : அண்டன் பிரகாஷ்
- log off
வருங்காலத் தொழில்நுட்பம் : அண்டன் பிரகாஷ்