''பொதுவாக, எந்தவித ட்ரீட்மென்ட்டுக்கும் உள்ளாகாத கூந்தலில் இருந்தே முடி உதிரும்போது, ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் போன்ற கெமிக்கல் ட்ரீட்மென்ட்டுக்கு உள்ளான கூந்தலில் முடி உதிர்வது இயல்பான ஒன்றுதான்.
கூந்தலின் வேரில் நீங்கள் கெமிக்கல் தடவவில்லை என்றாலும், பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஹேர் ஸ்டிரெய்ட்டனிங் சிகிச்சைக்குப் பிறகு அதற்கென உள்ள பிரத்யேக ஷாம்பு, கண்டிஷனர் ஆகியவற்றைப் பயன்படுத்தி, கூந்தலை அலச வேண்டும். நீங்கள் அதனைச் செய்யாமல் விட்டிருந்தாலோ, வேறு சாதாரண ஷாம்பு பயன்படுத்தியிருந்தாலோ கூந்தல் உதிரலாம். கவலைப்படாதீர்கள்... இதனைச் சரி செய்யதுவிடலாம். நீங்கள் ஹேர் ஸ்டிரெய்ட்டனிங் செய்த பார்லரில் உங்களுக்கேற்ற ஷாம்பு அல்லது கண்டிஷனர் எது என்று கேட்டு அதைப் பயன்படுத்துங்கள். கூந்தல் உதிர்வதைத் தவிர்க்க ஆயில் மசாஜ் ட்ரீட்மென்ட் மேற்கொள்ளலாம். அடுத்த முறை ஹேர் ஸ்டிரெய்ட்டனிங் செய்யும்போது அதனை கூந்தல் எதிர்கொள்ளுமா என்பதை முன்னரே பரிசோதித்துக்கொள்ளுங்கள். எப்போதும் கூந்தலின் இயல்பு, வேரின் தன்மை ஆகியவற்றை ஹேர் ஸ்கேனர் மூலம் அறிந்துகொண்டு அதன் பிறகு ஹேர் ஸ்டிரெய்ட்டனிங் செய்துகொள்ளுங்கள்!''
கி.ஐஸ்வர்யா, தூத்துக்குடி.
''மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ளேன். குழு மூலம் பெற்ற முதல் வங்கிக் கடனை அடைத்துவிட்டோம். இரண்டாவது கடன் பெறுவதற்காக வங்கியை அணுகினோம். அப்போது இரண்டு லட்ச ரூபாய் லோன் பெற என்.ஜி.ஓ-க்கு மூன்றாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றார்கள். என்.ஜி.ஓ. அமைப்புக்குக் கட்டாயமாகப் பணம் கொடுக்கத்தான் வேண்டுமா?''
டி.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., நிர்வாக இயக்குநர்
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்.
|