. வெ.க, கடையநல்லூர்...
பகுத்தறிவாளர், நாத்திகர் இருவருக்கும் என்ன வித்தியாசம்?

முதலாமவர் பகுத்தறிந்து, சீர் தூக்கிப் பார்த்து முடிவாக நாத்திகர் ஆனவர். அதுவே ஒரு நாத்திகர், பகுத்தறிவாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிம்பிளாக - அவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆகவே, 'நான் நாத்திகர்’ என்று யாராவது உங்களிடம் சொல்லிக்கொண்டால் 'நீங்கள் பகுத்தறிவாளரும்கூடவா?’ என்று கேட்கவும்!

ப.சுகானந்தம், செய்யாறு.

தற்சமயம் உங்களை ஆண் குழந்தைக்குப் பெயர் வைக்கச்சொன்னால் மன்மோகன், ராஜா... இதில் எதைத் தேர்ந்தெடுப்பீர்?

பெயரில் என்ன இருக்கிறது? இரண்டுமே அழகான பெயர்கள்தான். மன்மோகனோ, ராஜாவோ - குழந்தை வளர்ந்த பிறகு, அந்தப் பெயருக்குக் கெட்ட பெயர் வந்த கதையை விளக்கிச் சொல்லி, 'நீயாவது உன் பெயருக்கு நல்ல பெயரை வாங்கித் தர வேண்டும்!’ என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்வேன்!

வி.எஸ்.தேவசேனாபதி, வேலூர்.

மரணம் என்ற ஒன்று இல்லாது இருக்குமானால் என்ன ஆகும்?

ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் சம்பந்தப் பட்டவருக்கு ஊசி போட்டுக் கொன்றுவிடுவது சட்ட பூர்வமாக்கப்படும்!

கிட்டு, தூத்துக்குடி.

மர்ம நாவல் தோன்றியதன் மர்மம் என்ன?

சீனர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அளவே இல்லை! அங்கே ஸுங் பரம்பரை ஆட்சி செய்த போதே (கி.பி.960 துவக்கம்) க்ரைம் நாவல் வந்துவிட்டது. ஆனால், டிடெக்டிவ் ஸ்டோரி கி.பி. 1700-ல்தான் வந்தது. அதுவும் சீனாவில்தான்! நாவலின் பெயர் வூ ஸே டியன் ஸ¨ தா சீ ஆரன். ஒரு நீதிபதி தனிப்பட்ட முறையில், இரவுகளில் அலைந்து, மூன்று குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கிறார்! அந்த நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது 'The Celebrated Cases of Judge Dee’ என்று! நான் சின்னப் பையனாக இருந்தபோது, 'மேதாவி’ எழுதிய மர்மக் கதை களைப் படித்து பிரமித்தது உண்டு!

காஞ்சி குமுதன், சென்னை-83.

உயிரினங்களின் தாய் பூமி. பூமியின் தாய் சூரியன். சூரியனின் தாய்?

பால்வீதி (Milky Way)! பால்வீதியில் சூரியனைப் போல 40 ஆயிரம் கோடி சூரியன்கள் உண்டு (கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்.) தீபாவளி பூமி சக்கரம் போலச் சுழலும் பால்வீதியின் நடு மையத்தில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால், 'பால் வீதி தாய்’ ரொம்பப் பெரியவள். அதாவது, சூரியனுக்கு மிக அருகில் உள்ள பக்கத்து வீட்டுக்கார நட்சத்திரம் 'ப்ராக்ஸிமா ஸென்ட்டாரி’க்கு (Proximity என்றால் மிக அருகில்) ஒரு விநாடிக்கு 1 லட்சத்து 86 ஆயிரம் மைல் வேகத்தில் சென்றால், (ஒளியின் வேகம்) அதை அடைய 4.3 ஆண்டுகள் பிடிக்கும்!

ரசி.ரவி, நெய்வேலி.

மூடி இருக்கும் ரயில்வே கேட்டில், 'சைர’னோடு வரும் ஆம்புலன்ஸுக்காக, ரயிலை நிறுத்திவைக்க, 'கேட்கீப்’பருக்கு அதிகாரம் உண்டா?

எப்படியும் 'ரயில் வர ஐந்து நிமிஷம் ஆகும்’ என்று அவராக முடிவெடுத்து கதவைத் திறந்து விடுகிறார். ஆம்புலன்ஸ் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரிப்பேர் ஆகி மாட்டிக்கொண்டு நகர முடியவில்லை. ரயில் வந்துவிடுகிறது. இதற்கு யார் பொறுப்பு? கேட் கீப்பர் மீது ஆக்ஷன் எடுப்பார்களா... மாட்டார்களா? ஆகவே, அவருக்கு கேட்டைத் திறக்க அதிகாரம் கிடையாது!

எஸ்.ஜெயகாந்தன், புன்செய்ப்புளியம்பட்டி.

ஊழலுக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழாதது ஏன் சார்?

நாம்... ஓட்டுப் போடும்போது... வெகுண்டு எழுந்தால் போதும்!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்வது எப்படி என யாராவது புத்தகம் எழுதியிருக்காங்களா?

அப்புறம் அதை சி.பி.ஐ., இன்கம்டாக்ஸ்காரர்களும் படித்துவிடுவார்களே!