Published:Updated:

இந்திய ஹாக்கி அணியின் அதிருப்திக்குப் பின் குவியும் பரிசுத் தொகை!

இந்திய ஹாக்கி அணியின் அதிருப்திக்குப் பின் குவியும் பரிசுத் தொகை!
இந்திய ஹாக்கி அணியின் அதிருப்திக்குப் பின் குவியும் பரிசுத் தொகை!

இந்திய ஹாக்கி அணியின் அதிருப்திக்குப் பின் குவியும் பரிசுத் தொகை!

புதுடெல்லி, செப்.14,2011

இந்திய ஹாக்கி அணியின் அதிருப்திக்குப் பின் குவியும் பரிசுத் தொகை!

ஆசிய சாம்பியன் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு சொற்ப பரிசுத் தொகை அறிவிக்கப்பட, அதற்கு வீரர்கள் அதிருப்தி வெளியிட்டதன் எதிரொலியாக பணப் பரிசுகள் குவியத் தொடங்கியுள்ளன. ##~~##

சீனாவில் நடந்த முதல் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியில், பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பயன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

இதைத் தொடர்ந்து, இந்திய ஹாக்கி அணியின் வீரர்களுக்கு ரூ 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று 'ஹாக்கி இந்தியா' அமைப்பு அறிவித்தது.

இந்தச் சொற்ப பரிசுத் தொகையை இந்திய அணி வீரர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால், ஹாக்கி வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

ஹாக்கி இந்தியா அமைப்பு தரப்போ, "எங்களிடம் நிதி இல்லை. ரூ.25 ஆயிரம் சொற்பமானது என்பதை ஏற்கிறோம். ஆனால், நாங்கள் என்ன செய்வது? எங்களிடம் பணமில்லை. நல்ல ஸ்பான்ஸரும் இல்லை," என்கிறது.

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ராஜ்பால் சிங், "எங்கள் எதிர்பார்ப்பை ஹாக்கி கூட்டமைப்பு பூர்த்திசெய்ய தவறிவிட்டது. தேசிய விளையாட்டு வீரர்களை இப்படியா நடத்துவது? வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தான் பரிசுத் தொகை இருக்க வேண்டும். பிறகு எப்படி தேசிய விளையாட்டின் மீது இளைஞர்களுக்கு ஆர்வம் வரும்," என்று சீறினார்.

பஞ்சாப் அரசுக்கு பின் விழித்த மத்திய அரசு...

இந்திய ஹாக்கி அணியின் அதிருப்தி குறித்த தகவல் அறிந்ததும், அணிக்கு ரூ 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் அறிவித்தார்.

இதனிடையே, இந்திய அணியில் விளையாடிய மும்பையை சேர்ந்த ஹாக்கி வீரர் யுவராஜ் வால்மியின் வறுமை நிலையை உணர்ந்து, அவருக்கு தனியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்தது.

இதை தொடர்ந்து, இந்திய ஹாக்கி வீரர்களுக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.1.5 லடசம் வழங்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் அஜ்ய் மக்கான் அறிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அஜய் மக்கான், "கடந்த 6 மாதங்களில் மட்டும் ஹாக்கி அணிக்காக மத்திய அரசு ரூ.7.81 கோடி செலவிட்டுள்ளது. தேசிய பயிற்சி முகாம்களுக்கு ரூ.5.97 கோடியும், வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.1.75 கோடியும், வெளிநாட்டு நிபுணர்களுக்காக ரூ.8.75 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது," என்று அவர் கணக்கு தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வெற்றிவாகை சூடிய இந்திய ஹாக்கி வீரர்களுக்கு உரிய மதிப்பு கிடைக்காதது, ஹாக்கி ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 

அடுத்த கட்டுரைக்கு