பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
பண்டோரா தண்டனையா?
பண்டோரா தண்டனையா?
பண்டோரா தண்டனையா?
 
பண்டோரா தண்டனையா?
பண்டோரா தண்டனையா?

கிரேக்கர்களைப் பொறுத்தவரை பரிசு என்றாலே ப்ரோமீதியஸ்தான். மனித இனத்துக்கே ஒரு முக்கியமான பரிசைக் கொடுத்தது இவர்தான் என்பது அவர்களது நம்பிக்கை. அதற்காகத் தண்டனையும் பெற்றுக்கொண்ட கடவுள் இவர்.

கிரேக்கப் புராணங்களின்படி ஆரம்ப காலத்தில்டைட்டன் கள் என்ற ஓர் இனத்தினர் வாழ்ந்து வந்தனர். இவர்கள்எல்லோ ரும் கடவுளர்கள். யுரேனஸ் மற்றும் கயா என்ற பெற்றோருக்குப் பிறந்தவர்கள். இதே பெற்றோரின் வழி வந்தவர்களில் இன் னொரு கடவுளர் குரூப் இருந்தது. அதுதான் ஜீயஸ் தலைமை யில் ஆன ஒலிம்பியன்கள் குழு. ஒரு கட்டத்தில் டைட்டன் களை வென்ற ஜீயஸ் ஒட்டுமொத்த இனத்துக்கும் தலைமைக் கடவுள் ஆனார்.

ஒருமுறை பூமியில் வாழும் மனிதர்களுக்கும், இந்தக் கடவுளர் களுக்கும் இடையே செட்டில்மென்ட் விருந்து ஒன்று நடை பெற்றது. இதன்படி அதில் ஜீயசுக்குப் படைக்கப்படும் பொருட்கள் எல்லாம் கடவுளர்களுக்கு; மிஞ்சியது மனிதர் களுக்கு. ஏற்கெனவே போரில் தோற்றுப்போயிருந்த கோபத் தில் இருந்த டைட்டன்களில் ஒருவரான ப்ரோமீதியஸ் மனிதர்களுக்கு உதவினார். இவரது ஆலோசனையின் பேரில் ஜீயஸின் முன் இரண்டு பொருட்கள் படைக்கப்பட்டன. கெட்டுப்போன ஒரு காளையின் தோலுக்குள் கறியும்,மினு மினுக்கும் கொழுப்பின் உள்ளே எலும்புகளும் இருந்தன. ஜீயஸ் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார். இதனால் மனிதர்கள் தங்களுக்கு கறியைவைத்துக்கொண்டு ஜீயசுக்கு எலும்புகளை மட்டும் படைத்தால் போதும் என்றாயிற்று.

இதனால் மிகவும் கோபம்அடைந்த ஜீயஸ், மனிதர்களுக் குத் தருவதாக இருந்த நெருப்பை ஒளித்துவைத்துக்கொண்டார். ப்ரோமீதியஸ், ஜீயஸிடம் இருந்து

பண்டோரா தண்டனையா?

நெருப்பைத் திருடி வந்து மனிதர்களுக்குப் பரிசாகக் கொடுத்தார். இதனால் கோபமான ஜீயஸ், ப்ரோமீதியஸை பாறை ஒன்றில் கட்டிப்போட்டார். அவரது கல்லீரலை தினமும் ஒரு கழுகு வந்து தின்றுவிட்டுப் போகும். அவருக்கு மரணம் கிடையாது என்பதால் அன்றிரவே கல்லீரல் மறுபடி வளர்ந்துவிடும். மறுநாள் கழுகு வரும். கல்லீரலைத் தின்னும். இப்படி மனிதர்களுக்காக பல ஆண்டுகள் கஷ்டப்பட்ட இந்தக் கடவுளை ஜீயஸின் மகன் ஹெர்குலஸ் விடுவித்ததாகக் கதை உண்டு. ப்ரோமீதியசுக்கு தண்டனை கொடுத்தது இருக்கட்டும். ஜீயஸ் மனிதர்களுக்குக் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா? அந்த நாள் வரை பூமியில் ஆண்கள் மட்டும்தான் வாழ்ந்தார்கள். அவர்களுக்குத் தண்டனையாக ஜீயஸால் அனுப்பி வைக்கப்பட்டவள்தான் முதல் பெண் பண்டோரா!

எப்பூடி?!

 
பண்டோரா தண்டனையா?
-தீபக்
பண்டோரா தண்டனையா?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு