பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
காதல் பரிசு!
காதல் பரிசு!
காதல் பரிசு!
 
காதல் பரிசு!
காதல் பரிசு!

ரசர்களின் காதல் பரிசுகள் என்னவாக இருந்திருக்கக்கூடும்?

தந்தையின் மறைவுக்குப் பிறகு கிரேக்கத்தின் ஆட்சியைப் பிடித்த கிளியோபாட்ரா, சிரியா நாட்டு அரசனால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டார். மீண்டும் தன் நாட்டைக் கைப்பற்ற ரோம் மன்னரான ஜூலியஸ் சீசரின் ஆதரவு தேவைப்பட்டது. அப்போது, விலை உயர்ந்த பெர்சியத் தரை விரிப்பு ஒன்றை சீசருக்குப் பரிசாக அனுப்பினார் கிளியோபாட்ரா. கிளியோ பாட்ராவின் அழகைப்பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டு இருந்த சீசர், ஆர்வமாக அதைப் பிரிக்க... தரை விரிப்புக்குள் இருந்து வெளியே வந்தார் கிளியோபாட்ரா. பார்த்த உடனேயே 21 வயது கிளியோபாட்ரா மீது காதல்வயப்பட்டார் 52 வயது சீசர். இழந்த ராஜ்யத்தை மீட்டுக்கொடுத்து கிளியோபாட்ராவைத் தன் மகாராணியாகவும்ஆக்கிக் கொண்டார்!

புகழ்பெற்ற ஓவியர் வான்கா, தன் காதலி ரேச் சலுக்குக் கொடுத்த பரிசு விசித்திரமானது. தன் காதில் ஒரு பகுதியை வெட்டி அதை ஒரு பேப்பரில் மடித்துப் பரிசளித்தார்!

காதல் பரிசு!

வரலாற்றில் நீண்ட காலம் மன்னராகக் கோலோச்சிய நான்காம் லூயி, ஸ்டைல், ஃபேஷன் விஷயங்களில் ரசனைமிக்கவர். ஏகப்பட்ட காதலிகள், முறையற்ற குழந்தைகள் இருந்தாலும், வெர்செய்ல்ஸ் மகாராணி தெரசாவின் மீது எல்லையற்ற அன்பு. அதிகாலை வாக்கிங் போகும்போது வெறும் காலில் நடந்து தெரசாவின் கால்கள் துன்பப்படாமல் இருக்க, லூயி பரிசாக விரித்த உயர்ரக ஃபர் கோட்டின் நீளம் ஒன்றரை கிலோ மீட்டர்!

16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்ய மகாராணி கேத்தரினுக்கு ஏராளமான காதலர்கள். அனைவருக் கும் பரிசுகள் வழங்குவ தில் கேத்தரினுக்கு இன்பம். இதற்காக இவர் செலவழித்த தொகை மட்டும் அந்தக் காலத்திலேயே 14 கோடி ரூபாய். கேத்தரினின் அன்பை அதிகம் பெற்றவர் அவரது ராணுவ மந்திரி கிரெகோரி ஆர்லோவ். அவருக்கு செர்ஃப் எனப்படும் 800 அடிமைக் குழுக்களைப் பரிசாக வழங்கினார்!

 
காதல் பரிசு!
- அ.ஐஸ்வர்யா
காதல் பரிசு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு