பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
கோக் வித் சாண்டா!
கோக் வித் சாண்டா!
கோக் வித் சாண்டா!
 
கோக் வித் சாண்டா!
கோக் வித் சாண்டா!

ரண்டாயிரம் வருடங்க ளாகக் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் ஸ்பெஷலே, பரிசுகள் தரும் சாண்டா கிளாஸ் தாத்ததான். சிவப்பு அங்கி, வெண் தாடி, நீண்ட தொப்பி, பரிசுப் பை என நாம் இப்போது பார்க்கும் சாண்டா கிளாஸ் தாத்தாவுக்கு உருவம் கொடுத்தது கோக் நிறுவனம்.

ஆரம்பத்தில் சாண்டாவுக்கு என ஓர் உருவம் இல்லை. குள்ளமாக, வெகு உயரமாக, குண்டாக, ஒல்லியாக என ஓவியர்கள் தங்கள் இஷ்டம்போல வரைந்தார்கள். கத்தோலிக்க பிஷப்பின் யூனிஃபார்ம்தான் சாண்டாவின் உடை.

கோக் வித் சாண்டா!

1920-களில் மக்கள் மத்தியில் கோடை காலத்தில் மட்டுமே பருகும் பானமாக இருந்தது கோக். அதை குளிர் காலத்திலும் அருந்தும் பானமாக மாற்றினால்தானே வருடம் முழுவதும் பிசினஸ் நடக்கும்?

கோக் வித் சாண்டா!

குளிர் காலத்துக்கான சின்னமாகக் கருதப்படுபவர் சாண்டா கிளாஸ். அதனால் 1922-ல் இருந்து கோக் விளம்பரங்களில் 'தாகத்துக்கு எந்தக் காலமும் தெரியாது' என்ற ஸ்லோகனோடு சாண்டாவும் தலைகாட்டத் தொடங்கினார். அதிலும் சாண்டாவுக்கு ஒரு முழுமையான உருவம் கொடுக்கப்பட வில்லை. சாண்டா கிளாஸாக வேடமிட்டவர்கள்தான் வரையப்பட்டனர்.

1931-ம் ஆண்டு மிக்ஸிகன் மாகாணத்தைச் சேர்ந்த ஓவியரான ஹடோன் சண்ட்ப்ளோம்தான் இப்போதைய சாண்டாவின் உருவத்தை உருவாக்கினார். முதன்முதலில் 'தி சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட்' என்ற பத்திரிகையில்தான் சாண்டா கிளாஸ் வெளி யானார். ஹடோன் வரைந்த சாண்டாவால்தான் சிவப்பு நிற ஆடை, வெள்ளை நிறத் தாடி, குண்டு உடம்பு, நட்பான பார்வை, குழந்தைத்தனமான சிரிப்பு என்று இப்போது நம்மால் கிறிஸ்துமஸ் தாத்தாவைக் கற்பனை செய்ய முடிகிறது. ஒவ்வொரு முறையும் டாப்பிகல் விஷயங்களோடு சாண்டாவும் கோக்கும் வரையப்படுவார்கள். நிலாவுக்கு மனிதன் போன சமயத்தில் சாண்டாவும் கோக் குடித்தபடி ராக்கெட்டில் போனார். இந்த விளம்பரங்கள் ரொம்பப் பிரபலம். இப்படித்தான் வளர்ந்தது சாண்டா கிளாஸ் உருவமும், அதற்கான பரிசுக் கலாசாரமும்!

 
கோக் வித் சாண்டா!
-கார்த்திகா
கோக் வித் சாண்டா!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு