பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
சுதந்திரப் பரிசு!
சுதந்திரப் பரிசு!
சுதந்திரப் பரிசு!
 
சுதந்திரப் பரிசு!
சுதந்திரப் பரிசு!

லக வரலாற்றின் ஒப்பற்ற பரிசு அமெரிக்காவுக்கு ஃபிரான்ஸ் வழங்கிய... சுதந்திரதேவி சிலை.

அமெரிக்கச் சுதந்திரத்தின் நூற்றாண்டு நிறைவையட்டி 1886-ஆண்டு, அக்டோபர் 28-ம் தேதி நியூயார்க் நகரில் நிறுவப்பட்ட இந்தச் சிலை 12 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. ஃபிரான்ஸ் மக்களின் அன்புப் பரிசாக அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட இது, இன்று உலகின் பிரபலமான சுற்றுலாத் தலம். ஃபிரான்ஸ் சிற்பி ஃபிரெடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டியால் வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலையின் டிசைனுக்காக பேடன்ட் உரிமையும் வாங்கினார் பார்த்தோல்டி. பாரீஸின் ஈஃபில் டவரை வடிவமைத்த மோரிஸ் கோச்சலீன் என்ற பொறியாளர்தான் சுதந்திரதேவியின் உள்கட்டமைப்பை வடிவமைத்தவர்.

ரோம் நகரப் பெண்களின் பாரம்பரிய உடையான ஸ்டோலாவை அணிந்து, தலையில் கிரீடம், வலது

கையில் சுதந்திர ஒளியை உணர்த்தும் வகையில் சுடர், இடது கையில் அமெரிக்கச் சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் ஜூலை 4, 1886 என்று ரோமன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பாறை என வடிவமைக்கப்பட்ட சுதந்திரதேவி சிலை லிபர் டாஸ் என்ற கிரேக்கக் கடவுளின் பாதிப்பில் உருவாக்கப்பட்டது. ஃபிரான்ஸ் மக்களின் பரிசுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக பாரீஸ் வாழ் அமெரிக்க மக்கள் சுதந்திரதேவி சிலை போன்ற இன்னொன்றை உருவாக்கி, அதை ஃபிரான்ஸ் மக்களுக்குப் பரிசாக வழங்கினார்கள். லீ டெஸ் சைக்னஸ் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, அமெரிக்க சுதந்திரதேவி சிலை அமைந்துள்ள திசை நோக்கி நிறுவப்பட்டுள்ளது. 2,250,000 ஃபிராங்க்ஸ் செலவில் உருவான சுதந்திரதேவி சிலையின் இன்றைய மதிப்பு 45 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

சுதந்திரப் பரிசு!

பீடத்தை அமெரிக்காவும், சிலையை ஃபிரான்சும் செய்தன. அந்த நேரத்தில் இரு நாடுகளிலுமே கடுமையான நிதி நெருக்கடி. ஆனாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்று மக்களிடம் வரி வசூலித்தும், பலவிதமான கேளிக்கைகள் நடத்தியும் இந்தச் சிலையை உருவாக்கியது ஃபிரான்ஸ். அதே போல் அமெரிக்காவில் நாடகங்கள், கலைக் கண்காட்சி, ஏலங்கள் மற்றும் குத்துச் சண்டைப் போட்டி போன்றவற்றின் மூலம் நிதி திரட்டப்பட்டது. அப்படியும் போதாமல் போகவே, ஜோசப் புலிட்சர் என்ற பத்திரிகையாளர், நிதி கொடுக்காத பணக்காரர்களை கடுமையாகத் திட்டி எழுதினார். அதன் பிறகு பாய்ந்து வந்தது நிதி. பீடத்துடன் சேர்த்து 305 அடி உயரம் உள்ள சிலையின் உள்ளே 354 படிக்கட்டுகளும் 25 ஜன்னல்களும் உள்ளன. இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, பார் வையாளர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை தற்போது அகற்றப்பட்டு உள்ளது!

 
சுதந்திரப் பரிசு!
-அ.ஐஸ்வர்யா, பா.ஜெயவேல்
சுதந்திரப் பரிசு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு