Published:Updated:

உலகம் ஒரு பூக்காடு!

உலகம் ஒரு பூக்காடு!

பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
உலகம் ஒரு பூக்காடு!
உலகம் ஒரு பூக்காடு!
உலகம் ஒரு பூக்காடு!
 
உலகம் ஒரு பூக்காடு!
உலகம் ஒரு பூக்காடு!

காதலிலும் கவிதைகளிலும் அடிக்கடி மலர்பவை பூக்கள்தான். மென்மை, அழகு, நறுமணம், புன்னகை எனப் பல உணர்வுகளுக்கும் ஒரே பொருள் குறீயீடாகப் பயன்படுத்தப்படுகிறது என்றால் அவை பூக்களாகத்தான் இருக்கும். மனிதகுல வரலாற்றில் பூக்கள் இடம்பிடித்த அத்தியாயம் சுவாரஸ்யமானது.

'ஃப்ளோரியோகிராபி' (Floriography) எனப்படும் பூக்களின் மொழி பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையது. கிரேக்கர்கள், ரோமானியர்கள், எகிப்தியர்கள் மற்றும் சீனர்களின் புராணங்களிலும் கலைகளிலும் பூக்கள் நீக்கமற நிறைந்துஇருக்கின்றன. பூவினத்தைக் குறிப்பிடும் 'ஃப்ளோரல்' (Floral) என்ற சொல்கூட ரோமானியப் பெண் கடவுள் 'ஃப்ளோரா' (Flora) என்பதில் இருந்து உருவானதாக நம்பப்படுகிறது. 'சிபெல் எனப்படும் பெண் கடவுள், சக பெண் கடவுளைவிட அழகான பொருளை உருவாக்க வேண்டும் என்கிற பொறாமையால் படைக்கப்பட்டவையே ரோஜா மலர்கள்' என்கிறது கிரேக்க புராணம்.

17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் ஒவ்வொரு பூவுக்கும் தனித் தனியாக ஒரு மொழி இருப்பதைக்கண்டு அறிந்தனர். இதில் இருந்து விக்டோரிய கலாசாரம் என்ற புதிய கலாசாரமே தோன்றியது. பூவின்

உலகம் ஒரு பூக்காடு!

நிறம், அளவு, எந்தக் கையால்கொடுக்கிறோம், எந்த நேரத்தில் கொடுக்கிறோம் எனப் பல அர்த்தங்கள் பூக்களைப் பரிசாகத் தருவதில் உள்ளன. நீங்கள் பூவை நேராகக் கொடுக்காமல் தலைகீழாகத் திருப்பிக் கொடுத்தால் உண்மையான அர்த்தத்துக்கு எதிரான அர்த்தமாம். 1819-ல் மேடம் சார்லோட் டி லா டூர்(Madam Charlotte de la Tour) என்பவர் முதன்முதலில் பூக்களைப் பரிசா கக் கொடுப்பதன் அர்த்தங்களை ஒரு புத்தகமாக எழுதினார். அதற்குப் பிறகு பூக்களைப்பற்றிய புத்தகங்கள் குவியத்தொடங்கின.

ஒரு காலத்தில் அமெரிக்காவில் பெண்கள், ஆண்களுக்குப் பூக்கள் பரிசளிக்கும் நடைமுறை தண்டனைக்கு உரியதாக இருந்திருக்கிறது. ஆனால், இன்று அப்படியில்லை. இன்னமும் இந்தியாவில் மனைவியையும் காதலியையும் மயக்கும் பரிசுகளில் பூவுக்கே முதல் இடம்!

 
உலகம் ஒரு பூக்காடு!
-ந.வினோத்குமார்
உலகம் ஒரு பூக்காடு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு